Reading Time: < 1 minuteஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின்போது வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் முக்கியமான முடிவுகள் எட்டப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். யாழில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வரும் வேளை காணி விடுவிப்புக்கள் தொடர்பில் பச்சைக்கொடி காட்டப்படும். வனவள பாதுகாப்பு, வன ஜீவராசி திணைக்களம் என்பவற்றின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளRead More →

Reading Time: < 1 minuteமக்கள் என் மீது அதிருப்தி கொண்டுள்ளனர் என்பது தமக்கு தெரியும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கடந்த தேர்தல்களின் போது தமக்கு ஆதரவு வழங்கிய அதே இளம் தலைமுறையினர் அதிருப்தி கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டில் பெரும்பான்மை அரசாங்கத்தை நிறுவுவதற்கு உதவியவர்களே இன்று எதிர்ப்பை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார். இளம் தலைமுறையினர் எட்டு ஆண்டுகளின் வாடகை செலுத்துவதற்கு முடியாத நிலையில் வாழ்வதாகக் குறிப்பிடப்படுகின்றது. வாக்குறுதி அளித்து மக்களை தாம்Read More →

Reading Time: < 1 minuteகனடிய இரத்த வங்கியில் பற்றாக்குறை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடுறைக் காலத்தில் மேலதிகமாக இரத்தம் தேவைப்படுவதாக இரத்த வங்கி தெரிவித்துள்ளது. சுமார் 30000 குருதிக் கொடையாளிகளின் இரத்த தானம் செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது. விபத்துக்கள், புற்று நோய் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க இவ்வாறு இரத்த தானம் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக் காலத்தில் மக்கள் இரத்த தானம் செய்யும் நடவடிக்கைகள் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteநத்தார் பண்டிகையை முன்னிட்டுகனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வாழ்த்து செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். நத்தார் பண்டிகைக் காலத்தில் வேறுபாடுகளில் பலத்தைக் காண்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார். எம்மை நாம் நேசிப்பது போன்றே அயலவர்களையும் நேசிப்போம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நெருக்கடியான தருணங்களில் ஏனையவர்களுக்கு உதவ வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். விடுமுறைக் காலத்தில் தனிமையில் இருப்பவர்களை; இணைத்துக்கொண்டு கொண்டாடுவோம் என அவர் கோரியுள்ளார். பெறுவதனை விடவும் கொடுப்பதில் இறைவனின் ஆசியை முழுமையாக பெற்றுக்கொள்ளRead More →

Reading Time: < 1 minuteவவுனியாவில் இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோரினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படங்களின் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டமானது இன்றுடன் 2500 ஆவது நாளைக் கடந்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ”உலகத் தமிழர் பேரவையினரின் செயற்பாடு தமிழ் மக்களுக்கு விரோதமானது எனவும், அவர்கள்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்கவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினால் அது ஆபத்தாக அமையும் என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். குறிப்பாக காலநிலை மாற்றம் குறித்த முயற்சிகளை ட்றாம்பின் வெற்றி பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்றாம்ப் குடியரசுக் கட்சியின் சார்பில் வேட்பாளராக வெற்றியீட்டினால், அது பாதகமானது என தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பில் உலக அளவில்Read More →

Reading Time: < 1 minuteபண்டிகைக் காலத்தில் கனேடியாகள் தங்களது செலவுகளை குறைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பணவீக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக சில கனேடியர்கள் நத்தார் மற்றும் புத்தாண்டு கால வழயைமான செலவுகளை வரையறுத்துக் கொண்டுள்ளனர். பண்டிகைக் காலத்தில் பரிசுப் பொருட்களை கொள்வனவு செய்வதனையும் கனடியர்கள் ஒப்பீட்டளவில் குறைத்துக் கொண்டுள்ளனர். உறவினர்கள நண்பர்களுக்கு வழங்கப்படும் விருந்துகளும் குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆறு பேரைக் கொண்ட குடும்பமொன்றின் மரபு ரீதியானRead More →

Reading Time: < 1 minuteஅண்மையில் திருமண பந்தத்திலிருந்து பிரிந்த மனைவி மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களுடன் கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ விடுமுறையை கழிப்பதற்காக ஜமெய்க்கா விஜயம் செய்ய உள்ளார். முன்னாள் மனைவி சோபி கிரகரி ட்ரூ மற்றும் பிள்ளைகளுடன் எதிர்வரும் 26ம் திகதி முதல் ஜனவரி மாதம் 4ம் திகதி வரையில் ஜமெய்க்காவில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலும் பிரதமரும் அவரது குடும்பத்தினரும் ஜமெய்க்காவிற்கு விஜயம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விமானப்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் மக்கள் ஏனைய மாகாணங்கள் நோக்கி குடிப்பெயர்தல் அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப் பகுதியில் அதிகளவான பிரிட்டிஷ் கொலம்பிய வாழ் மக்கள், ஏனைய மாகாணங்களில் குடியேறியுள்ளனர். கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த விபரங்களை தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஐந்து காலாண்டு பகுதியாக இவ்வாறு உள்ளக குடிப்பெயர்வு பதிவாகியுள்ளது. மாகாணத்தை விட்டு வெளியேறி நகர சனத் தொகை எண்ணிக்கை 4634Read More →

Reading Time: < 1 minuteசீனாவை பகைத்துக் கொள்ளும் வகையில் கனடா தாய்வானுடன் வர்த்தக உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளது. இந்த உடன்படிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தாய்வானை சீனா தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. இவ்வாறான ஓர் பின்னணியில் தாய்வானுடன் தொடர்புகளை பேணுவது சீனாவுடனான உறவுகளில் விரிசல் நிலை ஏற்படுத்தக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. வர்த்தக விவகாரங்களை மேம்படுத்தும் நோக்கில் தாய்வானுடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. சுயாட்சி நடத்தி வரும் தாய்வானுக்கு கனடா போன்றRead More →