Reading Time: < 1 minuteகொழும்பு மற்றும் மும்பை றகரங்களுக்கிடையே இடையே தினசரி இரட்டை விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு மற்றும் மும்பை இடையே தினசரி இரட்டை விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி கொழும்பு மற்றும் மும்பைக்கு இடையில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 50 வீதமாக அதிகரிக்கும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மும்பையிலிருந்து வரும் பயணிகள் கொழும்பில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், பாங்கொக், லண்டன், பிராங்பேர்ட்,Read More →

Reading Time: < 1 minuteகனடிய மக்கள் இறைச்சி நுகர்வினை குறைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக கொள்வனவு பாதிக்கப்பட்டுள்ளது. விலை மாற்றம், உணவுப் பொருள் கொள்வனவில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் தாரளமாக இறைச்சி வகைகளை கொள்வனவு செய்த மக்கள், தற்பொழுது நுகர்வினைக் குறைத்துக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் நுகர்வோர் உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். பொருளியல் ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சளிக்காய்ச்சல் நோய்த் தொற்று பரவுகை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் மத்திய சுகாதார அலுவலகம் சளிக்காய்ச்சல் குறித்து எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அண்மைய நாட்களில் சளிக்காய்ச்சல் தொற்று பரவுகை கூடுதலாக பதிவாகி வருவதாக ரொறன்ரோ மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நோய்த் தொற்று பரவுகையை தடுக்கவும், நோய்த் தொற்றிலிருந் பாதுகாத்துக் கொள்ளவும் தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாகாணத்திற்கு மாகாணம் சளிக்காய்ச்சல் தொற்றாளர் எண்ணிக்கை மாறுபட்ட அளவில் காணப்படுவதாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வெளிநாட்டு மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது. வரையறுக்கப்பட்ட நேரத்திற்கு மட்டுமே தொழில்களில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. மாணவர் வீசாவில் கடாவிற்கு சென்ற மாணவர்களுக்கு இவ்வாறு வரையறை விதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட குறித்த வரையறைகள் மீண்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனினும், தொழிலில் ஈடுபடுவதற்கான வரையறைகள் வெளிநாட்டு மாணவர்களை பெருமளவில் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. வரையறுக்கப்பட்ட நேரத்தில் தொழில் புரிவதனால் வகுப்பு கட்டணத்தை செலுத்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் சட்டவிரோத வாகனத் தரிப்பு அபாராதம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகரசபை அல்லது தனியார் இடங்களில் சட்டவிரோதமான முறையில் வாகனங்களை தரித்து நிறுத்துவோரிடம் அபராதம் அறவீடு செய்யப்பட உள்ளது. இதுவரையில் இவ்வாறு சட்டவிரோதமான வாகனத்தை நிறுத்துவோரிடமிருந்து 30 டொலர்கள் அபராதம் அறவீடு செய்யப்பட்டது. இனி வரும் காலங்களில் இந்த அபராதத் தொகை 75 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் முதல் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அபராதத் தொகைRead More →

Reading Time: < 1 minuteடிசம்பர் இரண்டாம் வாரத்திற்குள் இலங்கைக்கு எழுநூற்று எண்பது மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. கடன் தொகை முந்நூற்று முப்பது மில்லியன் அமெரிக்க டொலர்களும், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையாகவும், உலக வங்கியின் உதவியாக இருநூற்று ஐம்பது மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இருநூறு மில்லியன் அமெரிக்க டொலர்களும் பெறப்பட உள்ளன. சர்வதேச நாணய நிதியம் தொடர்பாக, கடனாளர் மறுசீரமைப்பு பாரிஸ்Read More →

Reading Time: < 1 minuteகனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக, கனேடிய பிரதமர் காரணமில்லாமல் குற்றம் சாட்டவில்லை என கனேடிய முன்னாள் உளவுத்துறை தலைவர் ஒருவர் கூறியுள்ளார். அமெரிக்காவில் வாழும், கனேடிய அமெரிக்க இரட்டைக் குடியுரிமை கொண்ட இந்திய வம்சாவளியினர் ஒருவரைக் கொல்ல, கூலிப்படையினர் ஒருவரை அணுகியதாக இந்தியர் ஒருவர் செக் குடியரசில் கைது செய்யப்பட்டுள்ளார். குர்பத்வந்த் சிங் பன்னும் என்னும் அந்த சீக்கிய பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த நபரைக் கொல்ல,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் தற்கொலை தவிர்ப்பு தொடர்பில் இலவச அவசர அழைப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அவசர அழைப்பு உதவி சேவை நாடு முழுவதிலும் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் கொண்டவர்கள், ஏனைய மன அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் 24 மணித்தியாலங்களும் அழைப்பு எடுத்து ஆலோசனை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 988 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு உதவி பெற்றுக்கொள்ள முடியும். மன அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடிய பொருளாதாரத்தில் சிறிதளவு சரிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு பகுதியில் நாட்டின் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. எனினும், இந்த சரிவு நிலையானது, பொருளாதார நெருக்கடி அளவிற்கு ஆபத்தானதல்ல என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்றாம் காலாண்டில் கடந்த ஆண்டை விடவும் 1.1 வீத பின்னடைவை சந்தித்துள்ளது. ஏற்றமதியில் ஏற்பட்ட வீழ்ச்சிRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் நடைபெற்றதேர்தலில் பார்தி கந்தவேள் என்பவர் வெற்றியீட்டியுள்ளார். ஸகாப்ரோ தென்மேற்கு நகராட்சி இடைத் தேர்தலில் அவர் இவ்வாறு வெற்றியீட்டியுள்ளார். பார்தி கந்தவேள் 4641 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பார்தி, ரொறன்ரோ பாடசாலை சபையின் பொறுப்பாளராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடைத் தேர்தலில் பார்தியை எதிர்த்து போட்டியிட்ட கெவின் ரூபசிங்க என்வர் 3854 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நகராட்சி மன்ற உறுப்பினராக கடமையாற்றி வந்தRead More →

Reading Time: < 1 minute2023 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் முதல் 27 நாட்களில் மட்டும் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 30 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 703 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதில், இந்தியாவில் இருந்து 27 ஆயிரத்து 281 பேரும், ரஷ்யாவில் இருந்து 22 ஆயிரத்துRead More →

Reading Time: < 1 minuteதமிழீழத் தேசிய மாவீரர் நாளில், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களது புதல்வி துவாரகாவின் பெயரில் வெளிவந்த காணொளியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது. கிடைக்கப்பெற்ற உறுதியான தகவல்கள், தரவுகளின் அடிப்படையிலும், எமது அவதானங்களின் வழி நின்றும் இம் முடிவினை நாம் எடுத்துள்ளோம். தமிழீழத் தேசியத் தலைவரையும், அவரது குடும்பத்தினரையும் உலகத் தமிழ் மக்கள் தங்கள் இதயங்களில் அன்போடும், மதிப்போடும் வைத்திருக்கின்றார்கள். எனவேதான் அவரது மகளாக வேறுRead More →