Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நபர் ஒருவர் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக 21 ஆவது தடவையாக தண்டிக்கப்பட்டுள்ளார். அதிக எண்ணிக்கையில் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்ட கனடிய நபராக குறித்த நபர் கருதப்படுகின்றார். மது போதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்துக்களை மேற்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நபருக்கு எதிராக பல தடவைகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து மேற்கொண்ட குற்றத்திற்காகRead More →

Reading Time: < 1 minuteஉலக தமிழ்பேரவையும் (GTF) கனேடிய தமிழ் காங்கிரசும் (CTC) தமிழ் மக்களின் அபிலாசைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இலங்கையின் யுத்த குற்றவாளிகளை காப்பாற்றும் யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளதாக கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் (Patrick Brown) தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலையிலிருந்து தமிழர்கள் தப்பியோடிவந்துள்ளனர். 2009 இல் இனப்படுகொலை உச்சக்கட்டத்தை அடைந்த காலம் முதல் தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட மிகவும் கொடுரமான குற்றங்களிற்காக நீதியும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக் மாகாண அரசாங்கத்திற்கும் பொதுத்துறை தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. தற்காலிக அடிப்படையில் இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கரை லட்சம் பொதுத்துறை ஊழியர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங்களுடன் இவ்வாறு இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. கியூபெக்கின் மொன்றியலில், அரசாங்கத்திற்கும் ஊழியர் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் தொழிற்சங்கங்கள் கடந்த நவம்பர் மாதம் முதல் பல்வேறு கட்டங்களில்Read More →

Reading Time: < 1 minuteகனடிய அரசாங்கம் சூடானிய மக்களுகு;கு வீசா வழங்கத் தீர்மானித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் வீசா வழங்க தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்று வரும் சிவில் யுத்தம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அதிகளவான சூடானியர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயரத் தொடங்கியுள்ளனர். கனடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த புதிய நடைமுறை குறித்து அறிவித்துள்ளார். சூடானில் வாழ்ந்து வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் சூடானிய பிரஜைகளுக்கு கனடிய வீசா வழங்கப்பட உள்ளது. கனடாவிலRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சர்ரே பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சதீஷ் குமார் இலட்சுமி நாராயண் கோவில் தலைவராக உள்ளார். இந்தநிலையில் சதீஷ் குமாரின் மூத்த மகன் வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் 14 ரவுண்டுகள் சுட்டனர். இதில் இந்த கோவில் நிர்வாகியின் மகன் வீடு சேதடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் போலிஸார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒட்டாவாவில் அமைந்துள்ள ரியாடு ஆற்றில் இந்த இருவரும் மூழ்கி காணாமல் போயிருந்தனர். ஒரு சிறுவனின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதுடன: ஏனைய சிறுவனின் சடலம் இன்று மீட்கப்பட்டது. பதின்ம வயதுடைய சிலர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்தினை எதிர்நோக்கியுள்ளனர். சில சிறுவர்கள் குறித்த பனி நீரில் வீழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. 16 மற்றும் 18Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் விமான விபத்தில் சிக்கிய பயணிகள் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளனர். கனடாவின் வடமேற்குப் பிராந்தியத்தின் யெலோனைப் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எயார் டின்டி விமான சேவைக்கு சொந்தமான சிறிய ரக பயணிகள் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதில் சிலர் காயமடைந்திருந்தனர் என மீட்புப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். டியாவிக் பிராந்தியத்தின் வைரச் சுரங்கமொன்றிற்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் எட்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் குடிபோதையினால் ஏற்பட்ட வாகன விபத்துச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. மது போதையில் வாகனம் செலுத்தியதனால் பதிவான விபத்துக்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 என தெரிவிக்கப்படுகின்றது. 19 ஆண்டுகளின் பின்னர் இந்த ஆண்டில் வாகன விபத்துக்களினால் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரையில் மாகாணத்தில் 400 பேர் வாகன விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். மது போதையில் வாகனம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் முக்கிய அரசாங்க நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சைபர் தாக்குதல் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகத் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவில் வைத்தியசாலைகள், நூலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. நகரசபைகள், பல்கலைக்கழகங்கள், பாடசாலை சபைகள் மற்றும் மருத்துவமனைகள் மீதான சைபர் தாக்குதல்கள் மூலம் பலரின் தகவல்களை கசியச் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் தகவல் மற்றும் தனியுரிமை ஆணையாளர் பெற்ரிசியாRead More →