நைஜீரியாவில் கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தில் தீ விபத்து: 2 பேர் பலி!
Reading Time: < 1 minuteநைஜீரியாவில் கனேடிய உயர்ஸ்தானியராலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்துச் சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் நைஜீரியாவின் அபுஜாவில் அமைந்துள்ள கனடிய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றுள்ளது. மின்பிறப்பாக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட விபத்தினால் இவ்வாறு 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ShareTweetPin0 SharesRead More →