Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக் மாகாணத்தில் அரசாங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். கல்வி மற்றும் சுகாதாரத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் நேற்றைய தினமும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழிற்சங்கங்கள் இன்று அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன. அரசாங்கம், 10.3 வீத சம்பள அதிகரிப்பினை ஐந்து ஆண்டுகளில் வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது. மேலும் அனைத்து உழியர்களுக்கும் ஒரு தடவை ஆயிரம் டொலர்கள் வழங்கப்படும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் சுமார் ஐந்து மில்லியன் கோழிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பறவைக் காய்ச்சல காரணமாக இவ்வாறு கோழிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பறவைக் காய்ச்சல் பரவுகை காரணமாக மாகாணம் முழுவதிலும் பெரும் பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. பண்ணை உரிமையாளர்கள் இதனால் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் தொற்றை கட்டுப்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாகாணத்தின் பறவைப் பண்ணைகளில் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்று பரவுவதனை கட்டுப்படுத்தRead More →

Reading Time: < 1 minuteகனடிய பிரஜைகளுக்கு மீண்டும் ஈ வீசா வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான ராஜதந்திர முரண்பாட்டு நிலை ஏற்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக இரு நாடுளும் ராஜதந்திரிகளை வாபஸ் பெற்றுக்கொண்டதுடன், வீசா சேவைகளும் பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக கனடியர்களுக்கு ஈ வீசா வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈ வீசா வழங்கும் நடைமுறை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சீக்கியRead More →

Reading Time: < 1 minuteகனடிய விமான நிலையத்தில் காணாமல் போன பாரியளவு தங்கம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது. சுமார் 24 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம் இவ்வாறு காணாமல் போயிருந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த தங்கம் காணாமல் போயுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் எயார் கனடா நிறுவனத்திற்கும் விமான நிலைய பாதுகாப்பு நிறுவனத்திற்கும் இடையில் முரண்பாட்டு நிலை உருவாகியுள்ளது. தங்கம் காhணமல் போனமைக்கு எயார் கனடா விமான நிறுவனம் பொறுப்பு ஏற்கRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் யானை தந்தங்கள் மற்றும் காண்டாமிருகக் கொம்புகள் ஆகியனவற்றை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் அழிவினை சந்தித்து வரும் யானைகள் மற்றும் காண்டாமிருகங்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. காண்டாமிருகங்களின் கொம்புகள் மற்றும் யானைகளின் தந்தங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கும் இந்த தடை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யானை தந்தங்கள் மற்றும் காண்டாமிருக கொம்புகள் நாட்டுக்குள் இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதி அவசியம் எனRead More →

Reading Time: < 1 minuteநான்தான் கனடாவின் ராணி என்று கூறிக்கொள்ளும் சர்ச்சைக் கருத்துக்களை பின்பற்றுபவரான பெண் ஒருவர், திடீரென கிராமம் ஒன்றில் முகாமிட, மக்கள் பதற்றமடைந்தார்கள். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Richmound என்னும் கிராமத்துக்குள் இரண்டு மாதங்களுக்கு முன் திடீரென தனது பின்னடியார்களுடன் பெண் ஒருவர் நுழைந்தார். அவரது பெயர் ரொமானா ( Romana Didulo, 48). அவர் தான்தான் கனடாவின் ராணி என கூறிவருகிறார். அது பெரிய பிரச்சினை இல்லை என்றாலும், அவரும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் சாதி ஒடுக்குமுறை செயற்பாடுகள் மனித உரிமை மீறல் வகையீட்டுக்குள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குற்பிட்ட சாதி ஒன்றை ஒடுக்குமுறைக்கு உட்படுத்துவது மனித உரிமை மீறலாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவின் பாடசாலை சபை சாதி ஒடுக்குமுறை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த பெப்ரவரி மாதம் ஸ்காப்றோ பாடசாலை சபையின் பொறுப்பாளர் யாழினி ராஜகுலசிங்கம், சாதி ஒடுக்குமுறை குறித்து முதன்முதலில் கேள்வி எழுப்பியிருந்தார். பாடசாலை சபைகளில் சாதி ஒடுக்குமுறை குறித்த விடயம் பற்றி சுட்டிக்கப்பட்டதுடன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பணவீக்க வீதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வருடாந்த அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் நாட்டில் பணவீக்கம் 3.8 ஆக காணப்பட்டதுடன், கடந்த ஒக்ரோபர் மாதம் 3.1 வீதமாக குறைவடைந்துள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. எரிபொருளுக்கான விலை மாற்றத்தினால், பணவீக்கத்தில் சாதக மாற்றம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கனடாவில் தொடர்ந்தும் மளிகைப் பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்வாகவும் குறிப்பாக உணவுப் பொருள் விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ShareTweetPin0Read More →