Reading Time: < 1 minuteநாட்டின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் ஆலோசனைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்தத் தவறும் அரச நிறுவன பிரதானிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் பணிகளை, அரசாங்க அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டியது அவசியமெனவும், நாட்டை பின்நோக்கி கொண்டுச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்றுRead More →

Reading Time: < 1 minuteஅடுத்த ஆண்டில் குபெக் மாகாணத்தில் 60000 குடியேறிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2024ம் ஆண்டில் 60000 பேர் கியூபெக்கில் குடியேறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக கியூபெக் மாகாண முதல்வர் பிரான்ஸ்வா லெகொல்ட் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் அடுத்த ஆண்டில் மொத்தமாக சுமார் அறுபதாயிரம் குடியேறிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குடியேறிகளுக்கு வழங்கும் சந்தர்ப்பத்தை அதிகரிக்க விரும்பவில்லை எனவும் அவ்வாறு சந்தர்ப்பம் வழங்கினால் அது பிரெஞ்சு மொழிய பாதிக்கும்Read More →

Reading Time: < 1 minuteகாசா, எகிப்து எல்லை வழியாக, எகிப்து நாட்டுக்குள் வெளிநாட்டவர்களும் காயமடைந்த பாலஸ்தீனர்களும் வெளியேறிக்கொண்டிருக்கும் நிலையில், நூற்றுக்கணக்கான கனேடியர்கள் காசாவில் சிக்கிக்கொண்டுள்ளார்கள். வியாழனன்று, காசாவிலிருந்து எகிப்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட, வெளிநாட்டவர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பட்டியலில் இலங்கையர்கள், ஐரோப்பியர்கள், மெக்சிகோ நாட்டவர்கள், தென்கொரியா நாட்டவர்கள் மற்றும் 400 அமெரிக்கர்கள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஆனால், அந்தப் பட்டியலில் ஒரு கனேடியர் கூட இல்லை! புதன்கிழமை, முதன்முறையாக 335 வெளிநாட்டவர்களும், படுகாயமடைந்த 76Read More →

Reading Time: < 1 minuteகனடாவின், ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீட்டு விலைகள் மேலும் அதிகரித்துச் செல்வதாக குறிப்பிடப்படுகின்றது. வீட்டு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகிய போதிலும் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் வீடுகளின் விலைகள் உயர்வடைந்துள்ளன. ரொறன்ரோ ரியல் எஸ்டேட் பிராந்திய சபையினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் ரொறன்ரோ பெரும்பாக பகதியில் வீடுகளின் விலைகள் 3.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது. வீடுகளை கொள்வனவுRead More →

Reading Time: < 1 minuteகனாடவில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது. எதிர்வரும் ஆண்டில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 மற்றும் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் போது சில நாடுகள் தலையீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சீனா, ரஸ்யா அல்லது வேறும் நாடுகள் தலையீடு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டு தலையீடுகளை கண்டறிந்து அவற்றுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்படRead More →

Reading Time: < 1 minuteமூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த இந்தியாவின் நிதி அமைச்சர் ‘நிர்மலா சீதாராமன்‘ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது யாழில் நடைபெற்ற புதிய தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு வர்த்தக கண்காட்சியை பார்வையிட்ட அவர் அதன் பின்னர் யாழ். நூலகம் மற்றும் நல்லூர் ஆலயத்திற்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார். அத்துடன் இந்திய ஸ்டேட் வங்கியின் (SBI) யாழ்ப்பாண கிளையின் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பொருளாதாரம் பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக அண்மைய தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து செல்லாத போக்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி, நாட்டின் பொருட்கள் சேவைகள் விற்பனை போன்றன மந்த நிலையில்Read More →

Reading Time: < 1 minuteகனடா, 2024 -2026ஆம் ஆண்டுகளுக்கான புலம்பெயர்தல் திட்டத்தை வெளியிட்டுள்ளது. நேற்று மதியம் இந்த திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. கனடா, 2024ஆம் ஆண்டில் 485,000 புதிய புலம்பெயர்ந்தோரை வரவேற்க உள்ளது. 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில், 500,000 புதிய புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வரவேற்கப்பட இருக்கிறார்கள். 2024இல், பொருளாதார பிரிவின் கீழ் 281,135 புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்பட இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 2026இல் 301,250ஆக அதிகரிக்கப்பட உள்ளது. குடும்ப பிரிவில், 2024இல் 114,000 புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்படRead More →