ரொறன்ரோவில் வீட்டு விற்பனையில் வீழ்ச்சி!
Reading Time: < 1 minuteரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீட்டு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் வீட்டு விற்பனை 7.1 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு வீட்டு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த மாதம் 4642 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் மாதத்தை விடவும் வீட்டு விற்பனை 12.1 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ரொறன்ரோ பிராந்திய வலய ரியல்எஸ்டேட் சபை இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.Read More →