Reading Time: < 1 minuteகொழும்பு மற்றும் பாகிஸ்தானின் லாகூர் இடையில் வாராந்த முன்னெடுக்கும் விமான சேவைகளின் எண்ணிக்கையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகரித்துள்ளது. அதன்படி, நாளை (31) முதல் வாரந்தோறும் ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் விமான சேவைகள் இடம்பெறும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பாகிஸ்தானின் கராச்சிக்கு வாரந்தோறும் 4 விமான சேவைகளை இயக்குகின்றது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஆண்டுக்கு 22 பில்லியன் டொலர்கள் வருவாயை உண்டாக்கும் சர்வதேச மாணவர்கள் மோசடிகளால் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உள்ளது கனடா அரசு. இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, Brijesh Mishra என்பவர் நடத்தும் Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி கனடாவில் கல்வி கற்பதற்காக, கல்வி விசாவுக்கு விண்ணப்பித்தார்கள் 700 மாணவர்கள். அவர்கள் படிப்பை முடித்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதிRead More →

Reading Time: < 1 minuteகனடிய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கனடாவிற்குள் ஊடுறுவ முடியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய ஆபத்தான நபர் ஒருவர் நாட்டுக்குள் ஊடுறுவக் கூடும் என கனடிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவின் தென் மாயென் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டின் பிரதான சூத்திரதாரி 40Read More →

Reading Time: < 1 minuteஇந்தியா கனேடியர்களுக்கு விசா வழங்கும் பணியை மீண்டும் துவங்கினாலும், கனேடியர்களில் சில தரப்பினருக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடா இந்தியாவுக்கிடையிலான தூதரக உறவில் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து, கனேடியர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்திவைத்திருந்தது. இந்நிலையில், நேற்று முதல், இந்தியா மீண்டும் கனேடியர்களுக்கு விசா வழங்கத் துவங்கியுள்ளது. கனேடிய தலைநகர் Ottawaவிலுள்ள இந்திய தூதரகம் இந்த தகவலை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதனால், இரு நாடுகளுக்கிடையிலான உறவில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மக்கள் உறக்கமின்றி வாழ்வதாக கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இளம் கனேடியர்கள் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அதிருப்தி அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பொருளாதார மற்றும் நிதிப் பிரச்சினைகள் காரணமாக உறக்கம் இன்றி தவிப்பதாக கருத்துக் கணிப்பில் பங்குபற்றியவர்கள் தெரிவித்துள்ளனர். கனடாவின் ஆர் பி சி வாங்கினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. 40 வீதமான வயது வந்த கனடியர்கள் நிதிRead More →

Reading Time: < 1 minuteகனடியர்களுக்கான விசா சேவையை மீண்டும் தொடங்கிய இந்தியாவின் முடிவை கனடா வரவேற்றுள்ளது. கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ பகிரங்க குற்றம் சாட்டினார். இந்தியா அதை திட்டவட்டமாக நிராகரித்தது. இந்த விவகாரம் இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக கனடா நாட்டவர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் நிறுத்தி வைத்தது.Read More →

Reading Time: < 1 minuteஇஸ்ரேலில் உயிரிழந்த கனடியர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதல்களில் உயிரிழந்த கனடியர்களின் எண்ணிக்கை தற்பொழுது ஏழாக அதிகரித்துள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எவ்வாறெனினும், சம்பவத்தில் உயிரிழந்தவரின் பெயர் விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இந்த போரின் போது காணாமல் போன கனடியர்களின் எண்ணிக்கை இரண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் காஸா பிராந்தியத்தில் வாழ்ந்து வரும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பொருட்களின் விலைகளை குறைக்கும் முனைப்புக்களில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. நாட்டில் உணவு பணவீக்கம் வெகுவாக உயர்வடைந்து உள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. உணவு பொருட்களுக்கான விலை குறைப்பு தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் பிரதான மளிகை பொருள் நிறுவன நிறைவேற்று அதிகாரிகளை அரசாங்கம் சந்திக்க உள்ளது. நாடாளுமன்றில் இந்த நிறைவேற்று அதிகாரிகள் பொருட்களின் விலை குறைப்பு குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர். உணவுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கி அறிவித்துள்ளது. வட்டி வீதங்களை தொடர்ந்தும் அதே நிலையில் பேணுவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. வட்டி வீதமானது தற்பொழுது 5 வீதமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் எதிர்வரும் நாட்களில் வட்டி வீதம் அதிகரிக்கும் சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட காரணிகளை கருத்திற் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.. வட்டி வீத அதிகரிப்பு காரணமாகRead More →

Reading Time: < 1 minuteஅண்மைக்காலமாக காலமாக இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கனடாவில் காலிஸ்தான் செயல்பாட்டாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இச் சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டிருந்தார். குறித்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இதைத்தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்த நிலையில் கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேற ஜஸ்டின் ட்ரூடோ உத்தவிட்டார். இதற்குRead More →