Reading Time: < 1 minuteகனடாவில் வாகனங்களை கௌர்வனவு செய்வோருக்கு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். குறிப்பாக ஒன்றாரியோவில் சட்டவிரோத வாகன விற்பனைகள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விற்பனை செய்வதற்கு போதியளவு வாகனங்கள் இல்லாமை, வாகனங்கள் நாட்டுக்கு போதியளவு விநியோகம் செய்யப்படாமை போன் காரணிகளினால் வாகனங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அதிக சந்தர்ப்பங்களில் வாகனங்கள் கொள்iளியடப்படுவதாகவும், இவை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோத வாகன விற்பனைகளை தடுக்க ரொறன்ரோ பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துRead More →

wildfire

Reading Time: < 1 minuteகனேடிய நகரமொன்றில், காட்டுத்தீ காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நகர மக்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள West Kelowna நகரிலும் Westbank First Nation என்னும் பகுதியிலும் உள்ளூர் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5,500 வீடுகளுக்கு வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 1,000க்கும் அதிகமான வீடுகளில் வாழும் மக்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. McDougall Creek பகுதியில் பற்றியெரியும் காட்டுத்தீRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பிய காட்டு தீ சேவை இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. வறட்சியான மற்றும் வெப்பத்துடரான காலநிலையினால் பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் பகுதியில் இந்த நிலை அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது நிலவி வரும் காலநிலையானது பலத்த காற்றையும் இடி மின்னல் தாக்குதல்களையும் உருவாக்க கூடும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலைமையானது மேலும் காட்டுத்தீ பரவுகையை அதிகரிக்கும் எனவும் வேகமாக காட்டுத்தீ பரவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் மக்கள்Read More →

Reading Time: < 1 minuteவியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இருநாட்டின் பிரதமர்களுக்கிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. வியட்நாம் மற்றம் இலங்கைக்கு இடையிலான பொருளாதாரம் மற்றும் விமான சேவைகளை அதிகரிப்பது தொடர்பாக பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் வியட்நாம் பிரதி பிரதமர் லூ குவாங்க்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான இலங்கையின் உயர்மட்ட குழு சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங்கில் நடைபெற்றுவரும்Read More →

Reading Time: < 1 minuteகனடிய தேசிய கண்காட்சி (CNE) இம்மாதம் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 4, 2023 வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.5 மில்லியன் பார்வையாளர்களுடன், CNE கண்காட்சி இடம்பெறுகின்றது. கனடாவின் மிகப்பெரிய வருடாந்திர கண்காட்சி இதுவாகும். முதல் கனடிய தேசிய கண்காட்சி 1879 இல் இடம்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் இந்த கண்காட்சி பெரும்பாலும் கனடாவில் விவசாயம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெறுகின்றது. இதன் ஆரம்ப நிகழ்வுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் மளிகைப் பொருட்களுக்கான விலைகள் தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓராண்டு கால இடைவெளியில் கடந்த ஜூலை மாதம் மளிகைப் பொருட்களின் விலை 8.5 வீதமாக உயர்வடைந்துள்ளது. இந்த தகவல்களை கனடாவின் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. பேக்கரி உற்பத்திப் பொருட்கள், பழங்கள் உள்ளிட்டனவற்றின் விலை உயர்வினால் இவ்வாறு மளிகைப் பொருட்களின் சராசரி விலை உயர்வடைந்துள்ளது. இதேவேளை, பணவீக்க வீதம் கடந்த ஜூலை மாதம் 3.3 வீதமாக பதிவாகியுள்ளது. எதிர்வரும் ஆண்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீடு விற்பனைகளில் சாதகமான மாற்றம் பதிவாகியுள்ளதாக ரியல்எஸ்டேட் நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. வீட்டு விற்பனை அதிகரித்துள்ளதாக கனடிய ரியல் எஸ்டே; ஒன்றியம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் கூடுதல் அளவில் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூன் மாதத்தை விடவும் ஜூலை மாத வீட்டு விற்பனை 8.7 வீதத்தினால் அதிகரித்துள்ளது. எனினும், ரொறன்ரோ பெருநகர பகுதியில் வீட்டு விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூலை மாதம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் குரங்கம்மை நோய் தொடர்பில் புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகில் கூடுதலாக குரங்கம்மை நோய்த் தாக்கம் பதிவாகும் பத்து நாடுகளின் வரிசையில் கனடாவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி வரையிலான காலப் பகுதியில் 89308 குரங்கம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளனர். கனடாவில் இதுவரையில் 1440 நோய்த் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகனேடிய உள்விவகாரங்களில் தலையீடு, கனடாவில் வாழும் சீனாவில் பிறந்த மக்கள் துன்புறுத்தல், சிறுபான்மையினத்தவரைக் குறிவைத்தல் மற்றும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்களுக்காக சீனா மீது தூதரக ரீதியில் கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால், சீனா மீதான கனடாவின் குற்றச்சாட்டுகள் காரணமாக, தற்போது கனடாவின் பொருளாதாரத்தையே பாதிக்கும் வகையில் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது சீனா. உலகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெண் ஒருவரின் உயிர் ஐபோன் ஒன்றின் மூலமாக காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பெண்ணின் பெற்றோர் இந்த தகவல்களை ஊடகங்களடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஹமில்டன் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 21 வயதான ஹான்னா ரால்ப் என்ற யுவதி கிராமிய பகுதியான பிளஸ்செர்டன் பகுதியில் தனியாக வாகனத்தை செலுத்திச் சென்றுள்ளார். இதன் போது ஏதோ ஓர் காரணத்தினால் குறித்த வாகனம் மரம் ஒன்றில் மோதுண்டுள்ளதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் எரிபொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக உயர்டையும் சாத்தியங்கள் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடு முழுவதிலும் பெற்றோலின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் அநேகமான பகுதிகளில் பெற்றோலின் விலை உயர்வடைந்திருந்தது. நேற்றைய தினம் சராசரியாக ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 169.3 டொலர் எனவும் ஒரு வாரத்திற்கு முன்னதாக சராசரி விலை 163.9 டொலர் எனவும் பதிவாகியுள்ளது. கனடிய ஒட்டோமொபைல் ஒன்றியத்தினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில்Read More →

Reading Time: < 1 minuteமலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் உறுதியளித்துள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று இடம்பெற்றது. இலங்கையின் நீர்வளத்துறை, மலையக பெருந்தோட்ட சமூகத்தினர் எதிர்நோக்கும் சவால்கள் உள்ளிட்ட விவகாரங்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் டொயோட்டா ரக வாகனங்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. டொயோட்டா ரக சில வாகனங்களில் காணப்படும் குறைபாடு காரணமாக இந்த மாடல் வாகனங்கள் மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வாகனத்தின் பிளாஸ்டிக் எரிபொருள் குழாயில் காணப்படும் பிரச்சினை காரணமாக இந்த வாகனங்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட Tundra and Tundra HybridRead More →