Reading Time: < 1 minuteபோலியான கனேடிய வீசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக கனடாவுக்குச் செல்வதற்கு முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் நேற்றைய தினம் (24.08.2023) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடையவர் எனத் தகவலறியப்பட்டுள்ளது. இவர் பல தடவைகள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இவரது கனேடிய விசா தொடர்பில் சந்தேகமடைந்தRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. பல மாதங்களாக தொற்று உறுதியாளர் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைவடைந்து சென்ற நிலையில் மீண்டும் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டுகளிலும் இவ்வாறு பருவ மாற்றங்களின் போது கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு பதிவாகி இருந்தது என தெரிவிக்கப்படுகிறது. தற்பொழுது ஈஜி5 என்னும் ஒமிக்ரோன் திரிபு வகை ஒன்று அதிக அளவு பரவி வருவதாகவும் இது வீரியமான ஓர் கோவிட்Read More →

Reading Time: < 1 minuteஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இந்தியாவின் அமிர்தசரஸைச் சேர்ந்த ஷிவானி (Shivani Sharma, 29), கனடாவில் உயர் கல்வி கற்று, நல்ல ஒரு வேலையில் அமர்ந்து, தன் கணவரையும் குழந்தையையும் கனடாவுக்கு அழைத்துக்கொள்ளும் ஆசையில், கனேடிய கல்லூரி ஒன்றிற்கு விண்ணப்பித்துள்ளார். அவர் விண்ணப்பித்தது Vancouver Community College (VCC) என்னும் கல்லூரிக்கு. ஆனால், Anil Kumar Sharma என்னும் இந்திய ஏஜண்ட், ஷிவானியை வான்கூவரிலுள்ள Granville College என்னும் கல்லூரியில் சேருமாறு அறிவுறுத்தியுள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வேகமாக வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டின் அந்நாட்டு பிரதி பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரதிப் பிரதமர் கிறிஸ்டியா பரிலாண்டுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் தமக்கு சொந்தமாக ஒரு கார் இல்லை என ஃப்ரீ லேண்ட் தெரிவித்துள்ளார். 273 டாலர்கள் அபராதம்வேகமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அல்பர்ட்டா மாகாண அதிகாரிகள் ப்ரீலாண்டுக்கு 273 டாலர்கள் அபராதம் விதித்துள்ளனர். மணிக்கு 132 கிலோ மீட்டர் வேகத்தில காரை செலுத்தியதாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் போலியாக தயாரிக்கப்பட்ட நிரந்தர வதிவிட அட்டைகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை பாதுகாப்பு முகவர் நிறுவனம் இந்த இருவரையும் கைது செய்துள்ளது. போலியாக தயாரிக்கப்பட்ட கனடிய நிரந்தர பதிவிட அட்டைகளுடன் குறித்த நபர்களிடம் சமூக காப்புறுதி அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன. பெருந்தொகை அட்டைகள் இவ்வாறு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் துறைமுக நுழைவாயில் இந்த இருவரையும் எல்லை பாதுகாப்பு பிரிவினர் கைது இந்த சந்தேக நபர்களிடமிருந்து பல்வேறு போலி ஆவணங்கள்Read More →

Reading Time: < 1 minuteஒக்டோபர் முதலாம் திகதி முதல் நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 09 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி அல்லது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டினால் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவிக்கின்றது. ஒருமுறை பயன்படுத்தும் குடிநீர் வைக்கோல், பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள், முட்கரண்டி, கத்திகள், பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் பிளாஸ்டிக் கொள்கலன்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அவற்றின் உற்பத்தி, உள்ளூர் பயன்பாட்டிற்காக இறக்குமதிRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் கெலவ்னா பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டு தீ விபத்து காரணமாக 50க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காட்டுத்தீ காரணமாக சொத்துக்களுக்கு ஏற்பட்ட அழிவு மிக அதிகம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இதுவரையில் மொத்த சேத விபரங்கள் பற்றிய துல்லியமான விபரங்கள் வெளியிடப்படவில்லை. சில பகுதிகளில் சேதம் பற்றி இதுவரையில் மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 110 சதுர கிலோமீட்டர் அளவிற்கு காட்டுத்தை பறவைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீடுகள் தட்டுப்பாடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கு சர்வதேச மாணவர்கள் ஒரு முக்கிய காரணம் என்னும் கருத்து கனடாவில் அதிகரித்துவருகிறது. கனடாவில் சுமார் 800,000 சர்வதேச மாணவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஆக, அவர்களால் வீடு தட்டுப்பாடு நிலவுவதாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆகவே, சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த திட்டமிட்டுவருகிறது கனடா அரசு. அதாவது, மாணவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுக்கும் நோக்கம் இல்லாமல், தங்கள் லாபத்துக்காக ஏராளமான மாணவர்களை கனடாவுக்கு ஈர்க்கும்Read More →

Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, நாட்டு மக்களுக்கு நன்றி பாராட்டியுள்ளார். மக்கள் தமக்கு வழங்கி வரும் ஆதரவிற்கு நன்றி பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மனைவியை பிரிவது தொடர்பில் வெளியிட்ட அறிவித்தலைத் தொடர்ந்து தமக்கு கிடைக்கப் பெற்ற ஆதரவு தொடர்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மனைவி கிரகரி ட்ரூடோவை பிரிவதாக அறிவிப்பு வெளியானது முதல் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவு, ஆறுதல் வார்த்தைகள் மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக தாம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரு இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கெனிஸிங்டன் சந்தையில் கொலேஜ் ஸ்ட்ரீட் மற்றும் சப்ரினா அவென்யூ ஆகினவற்றிற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூடுசிலருக்கு இடையில் கைகலப்பு இடம் பெற்றதாகவும் அதன் போது நபர் ஒருவர் துப்பாக்கியை எடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மிகவும் முரட்டுத்தனமான நகராகவும் பவ்யமான நகராகவும் ஒன்றாறியோ மாகாணத்தின் இரண்டு நகரங்கள் தெரிவாகியுள்ளன. அதிகாரப்பூர்வமற்ற கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இணைய வழியாக இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. சுமார் 44 நகரங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்து இந்த கருத்துக்கணிப்புக்கான தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. நகரங்களில் மக்களின் நடத்தைகள் தொடர்பில் இந்த கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. முரட்டுத்தனமான மக்களைக் கொண்ட நகரங்களின் வரிசையில் முதல்நிலை பெற்றுக்கொண்ட நகரமாக ஒன்றாரியோRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக்கில், கார் ஒன்றில் இளம்பெண் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்தக் காரிலிருந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டார். சனிக்கிழமையன்று, கனடாவின் கியூபெக்கிலுள்ள Wickham என்னுமிடத்தில், Robyn-Krystle O’Reilly (34) என்னும் இளம்பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலிருந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர், Robyn-Krystleஇன் கணவர் என்றும், அவரது பெயர் Kevin Romagosa (39) என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.Read More →