Reading Time: < 1 minuteகனடாவில் கல்கரியைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் தனது தாயை படுகொலை செய்துள்ளதாக போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும் இந்த நபர் மற்றுமொரு பெண்ணையும் படுகொலை செய்ய முயற்சித்துள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை downtown பிரதேசத்தில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இந்த படுகொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது. சுமார் 60 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் தாக்குதலுக்கு இலக்கானதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 2 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் வெள்லைத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சனிக்கிழமை நோவா ஸ்கோஷியாவில் (Nova Scotia) உள்ள தங்களது வீட்டை விட்டு வெளியேற சிறுவர்கள் முயன்றபோது அவர்களை ஏற்றியிருந்த வாகனம் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டது. அதில் இருவர் உயிரிழந்த நிலையில் காரில் இருந்த மேலும் 3 பேர் உயிர்தப்பினர். அதே போன்ற சூழ்நிலையில்Read More →

Reading Time: < 1 minuteஇந்தியாவில் உள்நாட்டில் அரிசி விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்திய மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாடிக்கையாளர் ஒருவருக்கு இத்தனை கிலோ அரிசிதான் விற்கப்படும் என்ற கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது. உலகில் அரிசி ஏற்றுமதியில் முக்கிய நாடாக இந்தியா உள்ள நிலையில், இந்த தடை சர்வதேச அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய , ஆபிரிக்க கோடிக்கணக்கானRead More →

Reading Time: < 1 minuteகடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலப்பகுதியில் கனடிய மக்கள் மோசடிகள் காரணமாக 16 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கனடாவில் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அநேக கனடியர்கள் நம்புகின்றனர். ஆறு பேரில் ஒருவர் ஏதாவது ஒரு வகை நிதி மோசடியில் பணத்தை இழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயிரம் டாலர்கள் முதல் பத்தாயிரம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மசூதி ஒன்றின் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. மிஸ்ஸிசாகாவின் பள்ளிவாசல் ஒன்றில் வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய நபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நபருக்கு எதிராக மூன்று தீவிரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. முஹம்மத் மாயிஸ் ஒமர் என்ற நபருக்கு ஓன்றாரியோ உச்சநீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது. தாக்குதல் சம்பவம் ஒன்றுக்கு வழமையாக வழங்கப்படும் தண்டனையை விடவும் அதிகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நாய் கடிக்கு இலக்காகி ஒருவர் பேர் படுகாயம் அடைந்துள்ளார். கனடாவின் ஒஷாவா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் ஒஷாவா பகுதியில் நாய் ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். சம்பவத்தில் காயம் அடைந்த நபர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தர்ஹம் பிராந்திய போலீசார் தெரிவிக்கின்றனர். ஒஷாவாவின் அடிலைட் மற்றும் மேரி வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர்Read More →

Reading Time: < 1 minuteஉலகம் முழுவதும் வாசனை திரவியங்களுக்கென பெயர் பெற்ற இலங்கையில் இருந்து கறுவா மெக்ஸிகோ மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும், பேரு போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி சந்தையில் கசியா கறுவா மற்றும் கறுவா என இரண்டு வகையான கறுவாப்பட்டை உள்ளது மற்றும் இவற்றில், கசியா கறுவாப்பட்டையின் தரம் உண்மையான கறுவாப்பட்டையின் தரத்தை விட குறைவாக இருப்பதால், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் உண்மையான கறுவாப்பட்டைக்கு இன்னும் அதிக கேள்வி உள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வெள்ளம் காரணமாக ரயில் பாதை அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கடுமையான மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஹாலிபெக்ஸ் பகுதியின் ரயில் பாதையின் ஒரு பகுதி நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. நோவா ஸ்கோட்டியாவின் மில்புருக் அருகாமையில் இவ்வாறு ரயில் பாதை அடித்துச் செல்லப்பட்டுள்ளது. ரயில் பாதை அமைந்திருந்த மண் பகுதி முழுமையாக கழுவிச் செல்லப்பட்டுள்ளதனால் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த ரயில் பாதை அந்தப் பகுதி மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமானதுRead More →

Reading Time: < 1 minuteமாநாடு ஒன்றுக்காக கனடா வந்த பிரதிநிதிகள் கனடாவில் புகலிடம் கோரியுள்ளனர். கனடாவில் மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக வருகை தந்த பிரதிநிதிகளில் 15 வீதமானவர்கள் புகலிடம் கோரியுள்ளனர். சர்வதேச எயிட்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்தவர்களில் 15 வீதமானவர்கள் புகலிடம் வழங்குமாறு கோரி விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர். எயிட்ஸ் மாநாட்டில் பங்கேற்ற 251 வெளிநாட்டுப் பிரஜைகள் கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர். சர்வதேச ரீதியாக நடைபெறும் நிகழ்வுகளில் நாடுகளை பிரதிநிதித்துவம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக புதிய புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக றொரன்டோ பெரும்பாக பகுதியில் கடந்த ஜூன் மாதம் வீடுகளின் விற்பனை குறைவடைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் வீட்டு விற்பனை அதிகரித்த போதிலும் இது கடந்த 10 ஆண்டுகளின் சராசரி எண்ணிக்கையை விட குறைவானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் டொரன்டோ பெரும்பாக பகுதியில் 2526 புதிய வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தில் இவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. நாளைய தினம் பெரும்பாலும் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் அறிவிக்கப்படும் என சிரேஸ்ட அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய பிரதி பிரதமர் மற்றும் நிதி அமைச்சரான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தொடர்ந்தும் அந்தப் பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில முக்கிய பதவிகளில் மாற்றம் கொண்டுவரப்படலாம் என எதிர்வுRead More →

Reading Time: < 1 minuteவெலிக்கடை சிறைச்சாலை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வல்வெட்டித்துறையில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன், தேவன் உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளின் நினைவாக மலர் தூவி, பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறையில் இருந்த சிங்கள சிறைக்கைதிகள் , சிறைக்காவலர்கள் உள்ளிட்டRead More →