Reading Time: < 1 minuteகனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த முன்னாள் மாணவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள அதே நேரத்தில், ஏற்கனவே சில மாணவர்கள் நாடுகடத்தப்பட்டுவிட்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. சர்வதேச மாணவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் நிலை கனடாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்கள் சுமார் 700 பேருடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திற்குள்ளானார்கள். இந்திய தரப்பிலிருந்தும் கனடா தரப்பிலிருந்தும்Read More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பாரியளவிலான விமானங்கள் வந்து இறங்க வேண்டும் என்பது தொடர்பிலும் அதிகளவான ஆசனங்களை கொண்ட விமானங்களை சேவையில் ஈடுபடுத்த்துவதன் முக்கியத்துவம் குறித்தும் நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளது. அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வா தலைமையில் நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மக்களுக்கு பாதிப்பில்லாதவாறு விமான நிலைய விஸ்தரிப்பை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் வலியுறுத்தினர். விமான நிலையத்தின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மிக அதிக செலவுடைய நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாழ்க்கை செலவு குறித்த 2023 Mercer Cost of living கருத்து கணிப்பு மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில் மிகவும் செலவு கூடிய நகரங்களாக டொரன்டோ மற்றும் வன்கூவர் ஆகிய நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. உலகின் அதிக செலவு கூடிய நகரங்களின் வரிசையில் சர்வதேச அளவில் டொரன்டோ 90 ஆம் இடத்தை வகிப்பதுடன் கடந்த ஆண்டை விடவும் ஒரு படிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் மக்கள் எந்த விடயங்களுக்காக அதிகளவில் கவலையடைகின்றார்கள் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, கனடாவில் பணப்பிரச்சினையால் மக்கள் அதிகளவில் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பணப் பிரச்சினை மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் நித்திரையை பாதிப்பதாக கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 40 வீதமான மக்கள் பணப் பிரச்சினையினால் தாங்கள் அழுத்தங்களுக்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர். சுகாதாரம்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மனிடோபா மாகாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்று வியாழக்கிழமை (15-06-2023) இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கார்பெர்ரி நகருக்கு அருகில் ட்ரக் வண்டி ஒன்றும் மினி வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வின்னிபெக்கிற்கு மேற்கே இரண்டு மணிநேரம் தொலைவில் உள்ள கார்பெரிக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலை 1 மற்றும் நெடுஞ்சாலை 5Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவின் South Okanagan என்ற இடத்தில் வாழ்ந்துவரும் ஹர்தீப் சிங் சஹால், கமல்தீப் கௌர் தம்பதியர் இம்மாதம் 13ஆம் திகதி கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்தனர். பின்னர், நாடுகடத்தல் ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. திடீரென கிடைத்த மகிழ்ச்சியான செய்தி இந்நிலையில், செவ்வாயன்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி ஒன்று ஹர்தீப் குடும்பத்துக்கு கிடைத்துள்ளது. ஆம், நாடுகடத்தல் காலவரையறையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அரசு அவர்களுக்குத் தெரிவித்துள்ளது. மேலும், அவர்கள் ரத்து செய்யப்பட்ட பணி அனுமதிகளைRead More →

Reading Time: < 1 minuteசிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் கண்காட்சியொன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி அமைந்துள்ள விவசாய திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றது. சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் நாள் என்ற தொனிப்பொருளில் குறித்த கண்காட்சி வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது. சிறுதானிய உணவுகளான கம்பு, திணை, வரகு, சாமை என பல வகையான சிறுதானியங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் இங்கு காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. மேலும், சிறுதானியங்களில் இருந்து எவ்வாறு உணவு தயாரிப்பது என்பதும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.சிறுRead More →

Reading Time: < 1 minuteஎதிர்வரும் வெள்ளிக்கிழமை கனடாவின்மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் மொத்த மக்கள் தொகை நாற்பது மில்லியனாக பதிவாகும் என புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு முன்னதாக இவ்வாறு மக்கள் தொகை நாற்பது மில்லியனாக பதிவாகும் என தெரிவித்துள்ளது. கனடிய தினம் அனுஸ்டிக்கப்பட உள்ள நிலையில் மக்கள் தொகையில் இவ்வாறான ஓர் மைல்கல் எட்டப்பட்டுள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பிரதானி அனில் ஆரோரா தெரிவித்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கோடாரியுடன் ரயிலில் ஏறிய நபர் ஒருவரினால் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டது. கல்கரியின் மார்டின்டேல் எல்.ஆர்.டி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறிய நபரினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது. கோடாரியைக் கொண்டு குறித்த நபர் பயணிகளை அச்சுறுத்தியுள்ளார். ஆடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடாரியைக் கொண்டு பயணிகளை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் பயணிகள் எவரும் காயமடையவில்லை என கல்கரி பொலிஸார் தெரிவிக்கின்றனர். கோடாரியைக் கொண்டு பயணிகளை தாக்க முயற்சித்த நபரைRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவில் இரண்டு இளைஞர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தென் ஒன்றாரியோவின் சட்பரி பகுதியின் கார்சன் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த கத்தி குத்துச் சம்பவத்தில் 17 வயதான சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களையும் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி 17 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளான். இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இவ்வாறு கத்தி குத்துRead More →