Reading Time: < 1 minuteஇந்தியாவின் அமிர்தசரஸைச் சேர்ந்த ஒரு தம்பதியரை கனடாவுக்கு அனுப்புவதாக லூதியானாவைச் சேர்ந்த ஒரு ஏஜண்ட் ஏமாற்றிவிட்டதாக பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸைச் சேர்ந்த தியான் சிங் (Dhyan Singh) தன் மனைவியாகிய ஜக்ரூப் கௌர் (Jagroop Kaur) உடன் கனடாவுக்குச் செல்ல விரும்பியிருக்கிறார். அதற்காக, லூதியானாவில், நீரஜ் குமார் (Neeraj Kumar) மற்றும் அவரது மனைவியான பர்வீன் கௌர் (Parveen Kaur) ஆகியோர் நடத்திவந்த பயண ஏஜன்சியை அவர் அணுகியுள்ளார். 2019ஆம்Read More →

Reading Time: < 1 minuteகட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும் கட்டணத்தை ஒரு வருடத்திற்கு 50 வீதத்தால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் குறித்து விமான நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்தள விமான நிலையத்திற்கு அதிகளவு விமானங்களை வரவழைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்Read More →

Reading Time: < 1 minuteபோரில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் சிறுவர் சிறுமியருக்காக கனடிய தம்பதியினர் குதிரை வண்டி சவாரியில் ஈடுபட்டுள்ளனர். கனடாவின் மானிடோபாவைச் சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு இரண்டு வாரங்கள் குதிரை வண்டியில் சவாரி செய்துள்ளனர். உக்ரைனில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த குதிரை வண்டி சவாரி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆர்மன்ட் ஜெரோம் மற்றும் அவரது மனைவி கெல்லி ஆகியோர் இந்த சவாரியை மேற்கொண்டுள்ளனர். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட குதிரை வண்டியைக் கொண்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பல்வேறு இடங்களில் நிலவும் காட்டுத் தீ சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸ் உதவிகளை வழங்கியுள்ளது. குறிப்பாக கியூபெக் மாகாணத்தில் நிலவி வரும் காட்டுத் தீ அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸ் 100 தீயணைப்புப் படைவீரர்களை அனுப்பி வைக்க உள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் இந்த விடயம் தொடர்பில் டுவிட்டர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு தீயணைப்புப் படையினரை அனுப்பி வைப்பது குறித்து கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நன்றி பாராட்டியுள்ளார். இரு நாடுகளுக்கும்Read More →

Reading Time: < 1 minuteதன்னை கனடாவுக்கு அழைத்துச் செல்வாள் என நம்பி, 20 லட்ச ரூபாய் செலவு செய்து, இளம்பெண் ஒருவரை கனடாவுக்கு அனுப்பிவைத்தார் இளைஞர் ஒருவர். ஆனால், அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. இந்தியாவின் பஞ்சாபிலுள்ள லூதியானாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கனடா செல்லும் ஆசையில் இருந்துள்ளார். அப்போது, குடும்ப நண்பர் ஒருவர், தனக்குத் IELTS தேர்வெழுதி வெற்றி பெற்ற பெண் ஒருவரைத் தெரியும் என்றும், ஆனால், அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு, அவரை கனடாவுக்குRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயமாற்று விகிதத்தின் படி டொலர் ஒன்றின் விற்பனை விலை 298 ரூபாய் 85 சதமாக பதிவாகியுள்ளது. இதன் கொள்முதல் விலை 285 ரூபாய் 61 சதம் என மத்திய வங்கி அறிவித்துள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு பாடசாலை மாணவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். கனடாவின் கியூபெக் மாகாணத்தின் சென் லோரன்ஸ் நதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சிறுவர்களே இந்த கோர விபத்தில் சிக்கியுள்ளனர். மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் ஆறு பேர் மீட்கப்பட்டதாகவும் ஐந்து பேர் காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பத்து வயதுக்கும் மேற்பட்ட சிறுவர்களே சம்பவத்தில் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு காணாமல் போயிருந்த சிறுவர்களில் நான்கு பேரைRead More →

Reading Time: < 1 minuteகனடா நாட்டிற்கு படிப்புக்கான விசாவில் சென்ற பஞ்சாப்பை சேர்ந்த கல்லூரி மாணவி நண்பர்களுடன் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். கனடாவில் படிப்புக்கான விசாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பஞ்சாப்பின் ஜலந்தர் மாவட்டத்தில் லோகியான் காஸ் நகரில் குட்டுவால் என்ற கிராமத்தை சேர்ந்த 21 வயதான பெண் படித்து வந்துள்ளார். இவரது தந்தை பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலா நகரில் வேலைக்காக சென்றுள்ளார். பல ஆண்டுகளாக அந்நாட்டிலேயே அவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்,Read More →

Reading Time: < 1 minuteசென்னை ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ள தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தழிழக முதலமைச்சர் மு.கா ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேற்று விபத்துக்குள்ளானதில் 280 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் குறித்த விபத்தில் சிக்குண்டவர்களை மீட்;கும் பணிகள் தொடர்ந்தும்Read More →

Reading Time: < 1 minuteயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைக்கலப்பு சம்பவத்தை அடுத்து, 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் 16 பேருக்கும், மூன்றாம் வருட மாணவர்கள் 15 பேருக்கும் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் விடுதி உட்பட பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதியினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்களின் “மாகோஸ்” வார நிகழ்வுகள் கடந்த 31 ஆம் திகதிRead More →