கனடா வரவிருந்த பிரஜை இலங்கை விமானநிலையத்தில் உயிரிழந்துள்ளார்!
Reading Time: < 1 minuteஇலங்கை வழியாக கனடா செல்வதற்காக இந்திய பிரஜையொருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில், விமானத்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை (1) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். சம்பவத்தில் கே. ஜோர்ஜ் (65) என்ற இந்தியப் பிரஜையே உயிரிழந்துள்ளார். விமானத்தில் இருந்து தவறி விழுந்த இந்திய பிரஜை சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர். ShareTweetPin0Read More →