Reading Time: < 1 minute33 பேரை அவுஸ்ரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற 5 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 33 பேரும் தலா 2 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவின் வடக்கு பகுதியில் நிலடுக்கம் பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 4.3 மக்னிடியூட் என்ற அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. முன்னதாக 4.7 மக்னியூட் அளவில் நில அதிர்வு பதிவானதாக அறிவிக்கப்பட்ட போதிலும், பின்னர் 4.3 மக்னியூட் அளவில் நில அதிர்வு பதிவானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அச்சறுத்தல் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மக்களினால் பெரிதாக உணரப்படவில்லைRead More →

Reading Time: < 1 minuteசீன ராஜதந்திரி ஒருவரை நாடு கடத்துவதாக கனடா அறிவித்துள்ளது. கனடாவிற்கான சீனத் தூதரகத்தில் பணியாற்றி வரும் ஸாவொ வெய் என்ற சீன ராஜதந்திரியே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் சொங் மற்றும் அவரது குடும்பம் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் மீது சீனா அரசியல் தலையீடுகளை செய்யும் முனைப்புக்களில் இந்த ராஜதந்திரி செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நாட்டின் சட்டங்களுக்கு ஸாவோ வெய்,Read More →

Reading Time: < 1 minuteமானிடோபாவின் பாஸ் என்றழைக்கப்படும் சிறைச்சாலையிலிருந்து கைதிகள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் சென்ற இருவரும் குற்றப் பின்னணி உடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலையிலிருந்து மூன்று பேர் தப்பிச் சென்றதாகவும் அதில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாஸ் மற்றும் ப்ளோன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். ஏதேனும் சந்கேதத்திற்கு இடமான விடயத்தை அவதானித்தால் அதனை உடனடியாக பொலிஸாருக்க அறிவிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்தப்Read More →

Reading Time: < 1 minuteஅகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், 92 ஆயிரத்து 435 இலங்கையர்கள் அகதி முகாம்களுக்கு உள்ளோ அல்லது அதற்கு வெளியேயோ தமிழ் நாட்டில் தங்கியுள்ளனர் என்றார். தமிழகத்தில் தற்போது மொத்தம் 106 அகதிகள் முகாம்கள் இயங்கி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். தமிழக அகதிகள் முகாம்களில் தற்போது 19,046Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் எட்மோன்டனில் தாய் ஒருவரும் பிள்ளையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 11 வயது பிள்ளை மற்றும் தாய் மீது கொடூர கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. க்ரோவ்வேட் பிலேயின்ஸ் பாடசாலைக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 35 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் சுமார் 30000 பேர் வரையில் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காட்டுத் தீ காரணமாக இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இவ்வாறு பெருமளவிலான மக்கள் இடம்பெயர நேரிட்டுள்ளது. உலங்கு வானூர்திகளின் உதவியுடனும், தீயணைப்புப் படையினரின் உதவியுடனும் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாகாணத்தின் வடக்கு பகுதியில் தொடர்ந்தும் கட்டுத்தீ பரவுகை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாகாணத்தில் மொத்தமாக 108 காட்டுத்Read More →

Reading Time: < 1 minuteமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. இனவழிப்புக்கு உள்ளான இனத்தின் வரலாற்றினையும் வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாடாக இதனை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர். 1948ம் ஆண்டு முதல் தமிழர் என்ற ஒரேRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் 20 டொலர் நாணயத் தாளில் மன்னார் சார்ள்ஸின் உருவப்படத்தை பொறிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மன்னரின் முடிசூட்டு விழாவின் போது மத்திய அரசாங்கம் இது குறித்து அறிவித்துள்ளது. 20 டொலர் நாணயத்தாளிலும், நாணயக் குற்றிகளிலும் மன்னரின் உருவப்படத்தை பொறிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என சமஷ்டி அரசாங்கம் அறிவித்துள்ளது. அடுத்த நாணயதாள் வடிவமைப்பு நடவடிக்கைகளின் போது மஹாராணி இரண்டாம் எலிசபத்தின் உருவப்படம் பொறிக்கப்பட்டது போன்று மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் உருவப்படம் பொறிக்கப்படும் என பிரதமர்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தற்போது பெரும் விவாதத்தில் சிக்கியுள்ள கனேடிய நிறுவனத்திற்கு தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த தாயார் ஒருவர் தமது மகன் இணையமூடாக வாங்கிய பொதியை பயன்படுத்தியதால் மரணமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். டோனியா ஜோன்ஸ் என்ற அந்த தாயார் தெரிவிக்கையில் தமது மகன் 17 வயதான அந்தோணி ஜோன்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள அந்த கனேடிய நிறுவனத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மிகவும் மகிழ்ச்சிகரமான நகரமாக ஒன்றாரியோ மாகாணத்தின் கெல்டன் (Caledon) நகரம் பெயரிடப்பட்டுள்ளது. நாட்டில் அதிக மகிழ்ச்சியான நகரமும், மகிழ்ச்சியற்ற நகரமும் ஒன்றாரியோ மாகாணத்தில் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பெயின்ட்2ஹோம்ஸ் என்னும் ரியல் எஸ்டேட் இணைய தளமொன்று மேற்கொண்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கனடாவின் சுமார் நூறு பெரிய நகரங்கள் தொடர்பில் இந்த கருத்துக் கணிப்பு முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரியல் எஸ்டேட், பொருளாதாரம், சுகாதாரம், சுற்றுச்சூழல், அமைவிடம்,Read More →

Reading Time: < 1 minuteசீனா மற்றும் பாகிஸ்தான் நடமாட்டத்தைக் கண்காணிக்க எல்லைப் பகுதியில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உளவுத்துறையை வலுப்படுத்தவும் போர் ஏற்படும் சூழலில் டிஜிட்டல்மயமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றியும் இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. செயற்கைக்கோள்கள், டிரோன்கள் ராடார்கள் மூலமாக சமிக்ஞைகளைப் பெற ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் எல்லைகளில் ஒரு டஜனுக்கும் அதிகமான ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது என பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா அடிக்கல் நட்டிருந்தார். தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்களால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த போராட்டம்Read More →