Reading Time: < 1 minuteகனடா- அல்பர்டா பிராந்தியத்தில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீயை விரைந்து கட்டுப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.. அல்பர்டாவில் இந்த ஒரே மாதத்தில் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் பற்றி எரியும் காட்டுத்தீயால் இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அதோடு தீயணைப்பு பணியில் அந்நாட்டு ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், எட்மான்டனில் நேரில் ஆய்வு செய்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தீயணைப்பு பணிக்காகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த நபர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அனிஞ்சியன்குளம் மல்லாவியை பிறப்பிடமாக கொண்ட 39 வயதான நபரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. வீதியில் திடீரென பாய்ந்து ஓடிய மான் ஒன்றின் மீது வாகனம் மோதி நிலை குலைந்தே விபத்து ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது. இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த நபர் கனடாவிற்குRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்ளவில்லை 305.43 ஆகவும் விற்பனை விலை 318.79 ஆகவும் பதிவாகியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி டொலரின் பெறுமதி 362.66 ரூபாயாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். தென்மேற்கு ஒன்றாரியோவின் அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பிக்அப் ரக வாகனமொன்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 51 வயதான ஆண் ஒருவரும், 52 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கியூபெக், ஒன்ராறியோ மற்றும் மனிடோபா பகுதிகளில் உள்ள 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் முன்னெடுக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிக்கையில், மனிடோபாவில் Portage–Lisgar மற்றும் Winnipeg South Centre, கியூபெக்கில் Notre-Dame-de-Grâce–Westmount, ஒன்ராறியோவில் Oxford ஆகிய நான்கு நாடாளுமன்ற தொகுதிகளில் எதிர்வரும் ஜூன் 19ம் திகதி இடைத்தேர்தல் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். ஒரு தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் மரணமடைந்ததால் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3 தொகுதிகளில் உறுப்பினர்கள்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ வடக்கு எட்டோபிகோக் பகுதியில் சனிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான இளம்பெண்ணின் அடையாளம் தெரிந்ததாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது இரவு சுமார் 11.15 மணியளவில் நடந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் துப்பாக்கி குண்டுகள் துளைத்திருந்ததை உறுதி செய்துள்ளனர். மேலும், இளம்பெண் ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் உயிருக்கு போராடியபடி இருந்துள்ளார். இதனையடுத்து முதலுதவியும் உயிர்காக்கும் நடவடிக்கைகளும் உடனடியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்றைய தினம் (15) ஆசியாவிற்கான விஜயத்தை ஆரம்பிக்கின்றார். தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் விஜயம் செய்ய உள்ளார். ஜப்பானில் நடைபெறவுள்ள ஜீ7 நாடுகள் தலைவர்கள் மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்க உள்ளார். உலகம் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையையும் எதிர்நோக்கி வரும் நிலையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நாளை முதல் எதிர்வரும் 18ம் திகதி வரையில் பிரதமர் ட்ரூடோ,Read More →

Reading Time: < 1 minuteகிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வ இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றது. இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களால் தயாரிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி கோவில் முன்றலில் வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ நகர மேயர் பதவிக்காக மொத்தமாக 102 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எதிர்வரும் ஜூன் மாதம் 26ம் திகதி ரொறன்ரோ மேயர் பதவிக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மேயர் பதவி வகித்து வந்த ஜோன் டோரி பதவியை ராஜினாமா செய்ததனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவ்வாறு தேர்தல் நடத்தப்பட உள்ளது. தற்போதைய முன்னாள் நகராட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் தேர்தல் களத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஆண் ஒருவரை கொடூரமாக தாக்கிய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோர்த் யோர்க் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஈஸ்ட் ஹைவேய் பகுதியில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளதாகத் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கத்தி தாக்குதலுக்கு இலக்கான குறித்த ஆண் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீடற்றவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. மேலும், வீடற்றவர்களுக்கு உதவும் பணியாளர் தொகையும் சடுதியான அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது. 2021ம் ஆண்டுடன் நிறைவடைந்து ஐந்தாண்டு காலப் பகுதியில் வீடற்றவர்களுக்கு உதவும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பணியாளர் எண்ணிக்கை சுமார் 60 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. வீடற்றவர்களுக்கு உதவிகளை வழங்கும் அதிகமான பணியாளர்கள் பெரும் நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.Read More →

Reading Time: < 1 minute2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை பாடசாலைகள் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான முதல் தவணைக்கான மூன்றாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கை ஜூன் 12 ஆம் திகதி மீண்டும்Read More →