Reading Time: < 1 minuteரொறன்ரோவில் பாலியல் சேவையை பெற்றுக்கொண்டு பணம் செலுத்த மறுத்ததாக கூறி ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் டர்ஹாம் பொலிசார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவலில், 32 வயதான ஜனார்த்தனன் சத்தியந்தன் மீது $5,000க்கு கீழ் மூன்று திருட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், மூன்று முறை பாலியல் சேவையை பெற்றுக்கொண்டு பணம் செலுத்த மறுத்த குற்றத்திற்காகவும் வழக்கு பதியப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. பிப்ரவரி மாதம் டர்ஹாம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் றொரன்டோவில் பொலிஸார் மதுபானம் களவாடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் கைப்பற்றப்பட்ட மதுபான வகைகளை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் களவாடியுள்ளனர். றொரன்டோவின் 51ம் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. களவாடப்பட்ட இரண்டு போத்தல் மதுபான வகைகளை கைப்பற்றிய போலிஸார், அதனை களவாடிய சந்தேக நபரையும் கைது செய்திருந்தனர். 55 வயதான கொன்ஸ்டபிள் பிரயன் ஜேம்ஸ், 27 கொன்ஸ்டபிள் வயதான தோமஸ் விக்டர் என்றRead More →

Reading Time: < 1 minuteஅபாயகரமான பொருள் கொண்ட பொதிகள் மாகாணம் முழுக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து பொது பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது ஒன்ராறியோ மாகாண காவல்துறை. தொடர்புடைய பொதிகளில் சோடியம் நைட்ரைட் இருப்பதாகவும், தற்கொலை எண்ணம் போன்ற ஆபத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும் பொலிசார் கூறுகின்றனர். மேலும், அந்த பொதிகளை எதிர்பாராத வகையில் பெற்றவர்கள் அல்லது அப்படியான ஒருவரை தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையைத் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார்கள். மாகாணம் முழுவதும் உள்ள பத்துக்கும் மேற்பட்டRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்தும் திட்டத்திற்கு கனேடிய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இன்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எரிக் வோல்ஸ், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துடன் இணைந்து இலங்கை மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையில் விவசாயRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் மிகவும் தேடப்பட்டு வருவோர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. றொரன்டோ பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட உள்ளனர். கனடாவில் தேடப்பட்டு வருவோரின் பட்டியலில் அதிக எண்ணிக்கையிலானவாகள் றொரன்டோவில் தேடப்பட்டு வருவோர் என்பது குறிப்பிடத்தக்கது. கொலை, கொலை முயற்சி மற்றும் சட்டவிரோத ஆட்கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்காக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 1987ம் ஆண்டு முதல் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்களின் அடிப்படையில் தேடப்பட்டு வருவோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை விட்பியில் டர்ஹாம் பிராந்திய பொலிசார் தேடுதல் உத்தரவை நிறைவேற்றிய பின்னர் 1 மில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள திருடப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். ஏப்ரல் 27, வியாழன் அன்று, விட்பியின் வாரன் ரோடு மற்றும் ஹாப்கின்ஸ் ஸ்ட்ரீட் பகுதியில் திருடப்பட்ட லெக்ஸஸ் எஸ்யூவியை பொலிசார் கண்டுபிடித்தனர். விசாரணையில் மேலும் பல திருட்டு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். பொலிசார் அடுத்த நாள் ஒருRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக் மாகாணத்தில் இரண்டு தீயணைப்பு படைவீரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். காணாமல் போன தீயணைப்புப் படைவீரர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு உதவிகளை வழங்கி வந்த தீயணைப்புப் படைவீரர்கள் இருவர் இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக வான் வழியாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் நோக்கில் இரண்டு விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பரிசிலுப்பு ஒன்றில் சுமார் மூன்று மில்லியன் டொலர் பரிவு வென்றவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். பிரபல விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான புளு ஜேய்ஸ் கழகத்தின் பரிசிலுப்பில் இவ்வாறு நபர் ஒருவர் 2.87 மில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசு வென்றெடுத்துள்ளார். ஏப்ரல் மாதத்திற்கான 50/50 பரிசு சீட்டிலுப்பில் இவ்வாறு பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது. Jays Care Foundation அமைப்பினால் இந்த சீட்டிலுப்பு நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த சீட்டு கொள்வனவு செய்யப்பட்டRead More →

Reading Time: < 1 minuteபயிற்சிக்காக வெளிநாடு சென்ற 67 விசேட வைத்தியர் நிபுணர்கள் இந்த வருடம் இலங்கைக்கு திரும்பவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்கள் வெளிநாட்டில் தங்கி இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைசாத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, பயிற்சிக்காக வெளிநாடு சென்ற சுமார் 400 வைத்தியர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் நபர் ஒருவர் சராமாரி கத்தி குத்துத் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று ரொறன்ரோவின் மேற்கு பகுதியான ருனிமேட் மற்றும் எனட்டீ வீதிகளுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. கூரிய ஆயுதமொன்றினால் நபர் ஒருவர் எழுமாறான அடிப்படையில் நபர்களை தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் அவர்களுக்கு உயிராபத்து கிடையாது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தRead More →