Reading Time: < 1 minuteஒன்றாரியோவில் சில மாதங்களின் பின்னர் எரிபொருளின் விலை உயர்த்தப்படவுள்ளது. தென் ஒன்றாரியோ பகுதிகளில் இவ்வாறு எரிபொருள் விலை உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் பெற்றோலின் விலை 10 சதங்களினால் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த நவம்பர் மாதம் 15ம் திகதியின் பின்னர் முதல் தடவையாக இவ்வாறு பெற்றோலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் பெற்றோல் தற்பொழுது 156.5 சதங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், நாளை ஒரு லீற்றர் பெற்றோலின் விலைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் காதலிப்பதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பீல் பிராந்திய பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். ஆன்லைன் டேட்டிங் செயலி ஒன்றின் ஊடாக குறித்த நபர் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தென் ஆபிரிக்காவில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருவதாகவும், அவசர தேவைக்காக பணம் தேவை எனவும் கூறி பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு சுமார் 60000 டொலர் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிப்பதாக அறிவித்துள்ளனர். நாட்டின் மிகப் பெரிய அரசாங்க தொழிற்சங்கமான மத்திய பொதுத்துறை தொழிற்சங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சங்கத்தில் சுமார் 155000 ஊழியர்கள் அங்கம் வகிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அதிகாலை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பமாகும் என தொழிற்சங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நாட்டின் 250 இடங்களில்Read More →

Reading Time: < 1 minuteகனடா அமெரிக்க எல்லை வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்வோர் சிலர் அவசர உதவியை அழைக்கவேண்டிய நிலை உருவானது. நேற்று அதிகாலை 4.00 மணியளவில், கனடா அமெரிக்க எல்லையிலிருந்து சிலர் அவசர உதவியை அழைத்துள்ளனர். அவர்கள் சட்டவிரோதமாக கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையமுயன்றவர்கள் ஆவர். உடனடியாக, மருத்துவ உதவிக்குழுவினருடன் அமெரிக்க பொலிசார் அங்கு விரைந்துள்ளனர். தாங்கள் கடுங்குளிர் காரணமாக ஹைப்போதெர்மியா என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவர்கள் அவசர உதவியRead More →

Reading Time: < 1 minuteமாண்ட்ரீல் நகரின் புறநகர் பகுதி மேயர் ஒருவர் முன்னாள் அரசியவாதி ஒருவரால் தாம் சீரழிக்கப்பட்டதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கனடாவில் Parti Québécois கட்சி சட்டமன்ற உறுப்பினரான Harold LeBel என்பவரால் தாம் சீரழிக்கப்பட்டதாக மேயர் Catherine Fournier தெரிவித்துள்ளார். 2017ல் நடந்த இச்சம்பவம் தொடர்பில் Harold LeBel தற்போது 8 மாத சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். Parti Québécois கட்சியில் இணைந்து சிறப்பாக பணியாற்றி வந்த Catherine FournierRead More →

Reading Time: < 1 minuteஇந்த ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. சீனாவில் 1,425.7 மில்லியன் சனத்தொகை காணப்படுவதாகவும் இருப்பினும் இந்தியாவின் மக்கள் தொகை 1,428.6 மில்லியனை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 2011 க்குப் பிறகு நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாததால், இந்தியாவின் மக்கள்தொகை எண்ணிக்கை ஒரு ஊகம் என்றும் கூறப்படுகின்றது. இதேநேரம்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையிடம் குரங்குகள் கோரப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பாக தமக்கு எந்த தகவல்களும் தெரியாது என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. விலங்குகள் மற்றும் தாவரங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை மேற்பார்வையிடும் சீன நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளதாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், பரிசோதனை நோக்கத்திற்காக தனியார் சீன நிறுவனமொன்றுக்கு, ஒரு இலட்சம் மக்காக் குரங்குகளை இலங்கை ஏற்றுமதி செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அத்தகைய கோரிக்கை குறித்து தமக்கு எந்த தகவல்களும் தெரியாதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நீண்ட இடைவெளியின் பின்னர் பணவீக்கம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் பணவீக்கம் 4.3 வீதமாக பதிவாகியுள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் பணவீக்கம் 5.2 வீதமாக காணப்பட்டது. இந்த ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்க வீதத்தை 3 வீதமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் முதல் தடவையாக வருட வட்டி வீதம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பாரிய வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை தொழிற்சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக எச்சரித்துள்ளது. மத்திய பொதுத்துறை சேவை தொழிற்சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் எதிர்வரும் புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என அறிவித்துள்ளது. கனடிய வருமான முகவர் நிறுவனத்தின் 35000 பணியாளர்கள் உள்ளிட்ட 155000 பணியாளர்கள் இவ்வாறு போராட்டத்தில் குதிக்க உள்ளதாக எச்சரித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வேளாண்மைத்துறையில் பணி செய்ய 30,000 புலம்பெயர்ந்தோர் தேவை என்றும், இல்லையென்றால் கனடாவின் வேளாண்மைத்துறைக்கு எதிர்காலத்தில் சிக்கல்தான் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில், 2033 வாக்கில், சுமார் 40 சதவிகித விவசாயிகள் ஓய்வுபெற இருக்கிறார்கள். அவர்களுடைய இடத்தை நிரப்ப ஆட்கள் தேவைப்படுவதுடன், மற்ற பணிகளை செய்ய சுமார் 24,000 பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். Rehan Khan, பிள்ளைகளுடைய கல்விக்காக, 2018ஆம் ஆண்டு, பாகிஸ்தானிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தார். விவசாயத்தில் 20 ஆண்டுகள்Read More →

Reading Time: < 1 minuteகோடைகாலம் நெருங்கிவரும் நிலையில், பெரும்பாலான மக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுவார்கள். அத்தகைய நபர்களுக்கு உதவும் வகையில் பிரபல நிறுவனம் ஒன்று இந்த ஆண்டின் சிறந்த நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 23 நகரங்களில் கனேடிய நகரங்கள் இரண்டும் தெரிவாகியுள்ளது. மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ள குறித்த பட்டியலை பெண்கள் குழு ஒன்று தெரிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதில் கனடாவின் எட்மண்டன் மற்றும் விக்டோரியா நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதியின் மையத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் றொரன்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரஸ்ய விமானத்தை சுவீகரிக்கப் போவதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ரஸ்யாவிற்கு சொந்தமான பாரிய சரக்கு விமானமொன்று பியர்சன் விமானத்தில் கடந்த ஓராண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷியாமல் அண்மையில் கனடாவிற்கு விஜயம் செய்து, பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவை சந்தித்திருந்தார். இந்த விமானத்தை சுவீகரித்து உக்ரைனின் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும் என பிரதமர் முகநூல் பதிவொன்றை இட்டுள்ளார். AN-124Read More →

Reading Time: < 1 minuteசூடான் நாட்டுக்கான கனடிய தூதரகம் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூடானில், இராணுவத்திற்கும் துணை இராணுவக் குழுக்களுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த மோதல் சம்பவங்களில் இதுவரையில் 185 பேர் கொல்லப்பட்டதுடன் 1100 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். சூடானுக்கான பயணங்களை தவிர்க்குமாறும், ஏற்கனவே அங்கு தங்கியிருப்போர் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறும் கனடிய அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. எத்தனை கனடியர்கள் சூடானில் உள்ளனர் என்பதுRead More →