Reading Time: < 1 minuteபொருளாதார மேம்பாட்டுக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். பேருவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்த கடுமையான தீர்மானங்களின் பயனை நாட்டு மக்கள் தற்போது பெற்றுக்கொண்டுள்ளார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். பொருளாதார முன்னேற்றத்தின் பயனை மக்களுக்குRead More →

Reading Time: < 1 minuteபேரிடர் காலங்களில் தனித்து அல்லாமல், அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு குறித்த சர்வதேச மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய போதே பிரதமர், நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். நெருக்கமான உலகில் ஒரு பிராந்தியத்தில் நேரிடும் பேரழிவு, மற்றொரு பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவிடும் வகையில், உள்கட்டமைப்புகள் அமைய வேண்டும்Read More →

Reading Time: < 1 minuteருமேனிய குடும்பத்தினர், கனடாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயம் காரணமாகவே மிக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது. கனடிய அமெரிக்க எல்லை பகுதியில் அண்மையில் படகு ஒன்று கவிழ்ந்து இரண்டு சிறார்கள் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இளம் தந்தை ஒருவர் ருமானியாவிற்கு நாடு கடத்தப்படக்கூடிய நெருக்கடியை எதிர்நோக்கிய காரணத்தினால் அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு செல்ல முயற்சித்துள்ளார். இவரது 2Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸார் அறிவித்துள்ளனர். பிணையில் விடுதலை செய்யப்படும் நபர்களினால் வன்முறைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மாகாண முதல்வர்களுடன் அவசர சந்திப்பு ஒன்று நடாத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளது. அவசர சந்திப்பு ஒன்றுக்கு அனுமதி வழங்குமாறு மாகாண பொலிஸ் பிரதானிகள், மாகாண முதல்வர்களிடம் எழுத்து மூலம் கோரியுள்ளனர். அண்மைய நாட்களாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள்Read More →

Reading Time: < 1 minuteபோருக்குத் தப்பி வரும் உக்ரைன் பெண்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாகக் கூறி, பதிலுக்கு அவர்களிடம் பாலியல் ரீதியிலான பதிலுதவிகளை எதிர்பார்க்கும் ஆண்களைக் குறித்த செய்திகள் பல வெளியாகிவருகின்றன. தற்போது, உக்ரைன் அகதிகள் சிலருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள பெண் ஒருவரே, அவர்களிடம் பாலியல் ரீதியான விடயங்கள் தொடர்பில் அணுகியதாக பொலிசாருக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஒன்ராறியோவின் லண்டன் பகுதியில் வாழும் ஒரு பெண், சில உக்ரைன் இளம்பெண்களுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார். அவர்களில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒஷோவா பகுதியில் நோய் காரணமாக செல்லப்பிராணி ஒன்று உயிரிழந்துள்ளது. கனடாவின் பொது சுகாதார திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. காட்டுப் பறவை ஒன்றை கடித்த காரணத்தினால் நாயாயொன்றுக்கு பறவை காய்ச்சல் நோய் பரவியுள்ளது. வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த நாய் ஒன்று இவ்வாறு பறவை காய்ச்சல் நோய்க்கு உட்பட்டுள்ளது. நோயினால் பாதிக்கப்பட்ட நாய் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனடாவின் பிராம்டன் மற்றும் கெலிடன் ஆகிய பகுதிகளில் இரண்டுRead More →

Reading Time: < 1 minuteபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தினால் மக்கள் அடிமைகளாகவும், துன்புறுத்தலுக்கும் ஆளாக நேரிடும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நீதித்துறை மேற்பார்வையின்றி நீண்ட கால காவலில் வைக்க அனுமதிக்கும் வகையில் இந்த சட்டம் காணப்படுவதாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட மிகவும் கடுமையானது என்றும் கூறியுள்ளார். இந்த சட்டமூலத்தை ஆதரிக்கும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்கள் நாட்டிற்கும் அதன் மக்கள் மீதும் அன்பு இல்லாதவர்களாக கருதப்படுவார்கள் என்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடா அமெரிக்க எல்லையில் இந்தியர்கள் உட்பட 8 பேர் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். கனடாவும் அமெரிக்காவும் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, கனடா அமெரிக்க எல்லையில் புலம்பெயர்வோர் எல்லை கடக்கப் பயன்படுத்தும் Roxham Road என்னும் பகுதி மூடப்பட்டது. இது வேறு விதமான அபாயங்களை உருவாக்கும் என புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்புகள் எச்சரித்தன. Roxham Road மூடப்பட்டதால், வேறொருRead More →