Reading Time: < 1 minuteமகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதி வாய்ந்தவர்களை எப்படி தேர்ந்தெடுக்கின்றனர் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் அதிகமான கவனம் பெற்ற வாக்குறுதி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதே. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டாலும் உரிமைத் தொகை திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லையே என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த சூழலில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் மாதம்Read More →

Reading Time: < 1 minuteநாளாந்தம் மது அருந்துவது உடல் நலனுக்கு கேடில்லை என கனேடிய ஆய்வு நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. நாள்தோறும் ஒரு கிளாஸ் பியர் அல்லது வைன் அருந்துவது உடல் நலனை பாதிக்கப் போவதில்லை என ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. அல்கஹோலினால் மனிதனின் ஆயுள் குறுகுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அவ்வாறான ஆபத்துக்கள் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தளவு, நடுநிலையான அளவில் மது அருந்துவோருக்கும், மது அருந்தாதோருக்கும் இடையில் மரணமடையும் சாத்தியப்பாடுகளில் பாரியளவு மாற்றமில்லைRead More →

Reading Time: < 1 minuteகனடா அமெரிக்க எல்லையில் 8 பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களில், உயிரிழந்த இந்தியர்களின் அடையாளங்கள் வெளியாகியுள்ளன. கடந்த வியாழக்கிழமை, அதாவது 30.3.2023 அன்று, கனடாவின் கியூபெக் மாகாணப்பகுதியில் அமைந்துள்ள St Lawrence நதிக்கரையோரமாக 8 உயிரற்ற உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது, உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர்களில், நான்கு பேர் இந்தியாவின் குஜராத்திலுள்ள Manekpur என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என அப்பகுதி பொலிஸ்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் 16 வயதான இளம் நீச்சல் வீராங்கனை இரண்டு உலக சாதனைகளை படைத்துள்ளார். சம்மர் மெக்கின்டோஸ் என்ற வீராங்கனை இவ்வாறு இரண்டு உலக சாதனை படைத்துள்ளார். உலக ஜூனியர் மற்றும் கனேடிய தேசிய நீச்சல் சாதனைகளை மெக்கின்டோஸ் படைத்துள்ளார். 200 மீற்றர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் மெக்கின்டோஸ் ஜூனியர் உலக சாதனையை படைத்துள்ளார். 200 மீற்றர் தூரத்தை 1.53.91 என்னும் நேரப் பெறுதியில் கடந்து சாதனை படைத்துள்ளார். சிலRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஒவ்வொரு 48 மணித்தியாலங்களுக்கு ஒரு பெண் என்ற அடிப்படையில் கொலைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையில் சுமார் 850 பெண்கள், சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆண்களின் தாக்குதல்களுக்கு இலக்காகி பலியாகும் பெண்களின் எண்ணிக்கை கனடாவில் வெகுவாக உயர்வடைந்துள்ளது. நீதி மற்றும் பொறுப்பு கூறலுக்காக கனேடிய பெண் கொலை கண்காணிப்பு அமைப்பினால் இந்தRead More →

Reading Time: < 1 minuteவெளிநாட்டு ஊழியர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் கட்டணச் சலுகையை அதிகரிப்பதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் மே மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அனுப்பிய பணத்தின் அடிப்படையில் மேலதிக கடமைக்கான சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஇந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ நெட்டிசன்களை கவர்ந்திருக்கிறது. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணையRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்ளைச் சம்பவங்களை தவிர்க்க விசேட சட்டம் அறிமுகம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சாரதிகள், எரிபொருள் நிரப்ப முன்னதாக, அதற்கான பணத்தை செலுத்துவதனை கட்டாயமாக்க உத்தேச சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் தீபக் ஆனந்த் இந்த பரிந்துரையை செய்துள்ளார். இந்த சட்டத்தின் மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணியாற்றுவோர் தாக்குதல்களுக்கு இலக்காவதனை தடுக்க முடியும் என அவர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மிக மெதுவாக வாகனத்தைச் செலுத்தியதாக சாரதி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில், குறித்த சாரதி மெதுவாக வாகனம் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணம் செய்ய வேண்டிய தடத்தில் குறித்த சாரதி 60 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்தார் என குற்றம் சுமத்பத்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தை மெதுவாக செலுத்துவது விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம்Read More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணம் இருபாலையில் கிருஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 13 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட சிறுமிகள் 14 பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்த சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் சேர்க்கப்பட்டவர்களே இவர்கள் என்றும் அவர்கள் கட்டாய மதமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருபாலை பகுதியில் உள்ள கானான் ஐக்கிய சபை என்ற கிருஸ்தவ சபையினால் அனுமதியின்றி சிறுவர் இல்லம்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்த இந்தியர்கள் உள்பட 8 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சியில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், கனடா எல்லை வழியாக இந்தியா மற்றும் ரோமேனியா நாடுகளை சேர்ந்த 2 குடும்பத்தினர் 7 பேர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக செல்ல முயற்சித்துள்ளனர். கனடாவில்Read More →

Reading Time: < 1 minuteவிண்ணப்பித்த 700 மாணவர்களின் அனுமதி ஆஃபர் கடிதங்கள் (admission offer letters) போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்படும் அபாயத்திற்குள்ளாகியிருக்கிறார்கள். நடந்தது என்ன? இந்த மாணவர்கள், 2019 -19 காலகட்டத்தில் கனடாவுக்கு வந்துள்ளார்கள். அவர்கள் படிப்பை முடித்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போதுதான் தாங்கள் அனைவரும் ஏமாற்றப்பட்ட விடயம் அவர்களுக்குத் தெரியவந்துள்ளது. அவர்களுடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் (admission offer letters) போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்படRead More →

Reading Time: < 1 minuteமன்னாரில் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் மன்னார் மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையில் மன்னார் மற்றும் தலைமன்னார் பிரதான வீதி ஆகிய இடங்களில் குறித்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்களிடம் இருந்து 16 கிலோ கிராமுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யபட்டிட்டவர்கள் மன்னாரை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் 37Read More →