Reading Time: < 1 minuteசூடானிலிருந்து இதுவரையில் சுமார் 375 கனடியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சூடானில் மிகவும் ஆபத்தான சூழ்நிலை நிலவி வருவதாக கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். கனடிய இராணுவ விமானங்கள் மற்றும் நேச நாடுகளின் விமானங்கள் என்பனவற்றின் மூலம் இவ்வாறு கனடியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கனடியர்களை சூடானிலிருந்து மீட்பதற்கு பல்வேறு வழிகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அனிதRead More →

Reading Time: < 1 minuteகல்கரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். கல்கரியின் வடகிழக்குப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் ஏனைய இரண்டு பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Martindale Boulevard பகுதியில் அமைந்துள்ள சீக்கிய ஆலயமொன்றுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அதனை வழங்குமாறுRead More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் தனியார் காணி ஒன்றினை கொள்வனவு செய்துள்ள பௌத்த பிக்கு ஒருவர், அக்காணியினுள் விகாரை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுன்னாகம் கந்தரோடை பகுதியில் தமிழ் – பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களும், அதன் எச்சங்களும் காணப்படுகின்றன. அவை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. தமிழ் – பௌத்த எச்சங்கள் காணப்படும் இடத்திற்கு அருகில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான சுமார் 06 பரப்புRead More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணத்தில் விபத்துக்கு உள்ளாகிய பெண்மணியின் தங்க ஆபரணங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் உரும்பிராய் வடக்கை சேர்ந்த கனகநாயகம் உமாதேவி (வயது 72) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த பெண் மணி வீட்டில் இருந்து துவிச்சக்கர வண்டியில் வெளியில் சென்று, மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை உரும்பிராய் பகுதியில் அவருக்குRead More →

Reading Time: < 1 minuteஎட்டோபிகோவில் பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாள படங்களை திரையிட்ட அல்பியான் சினிமா (Albion Cinema) இரண்டு மில்லியன் டொலர் செலவில் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் நேற்று மாலை (ஏப்ரல் 28, 2023) திறந்துவைக்கப்பட்டது. இதில் மாகாணசபை உறுப்பினர் லோகன் கணபதி, விஜய் தணிகாசலம் உட்பட திரைத்துறையினர், தொழிலதிபர்கள், திரைப்பட ரசிகர்கள் என பலர் கலந்துகொண்டனர். மிகப்பெரும்திரை, டால்பி அட்மாஸ் ஆடியோ (dolby atmos audio) மற்றும் வசதியான இருக்கைகளுடன் கூடியRead More →

Reading Time: < 1 minuteசரக்கு ரயில் ஒன்றில் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த சிலரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மெக்ஸிக்கோவைச் சேர்ந்த மூன்று பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நயகரா நீர் வீழ்ச்சியை கடக்கும் International Railroad Bridge பாலத்தில் வைத்து சந்தேக நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க இந்த மூவரும் முயற்சித்துள்ளனர். இந்த சந்தேக நபர்கள் மீளவும் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம்Read More →

Reading Time: < 1 minuteறொரன்டோவின் பியர்சன் விமான நிலையத்திற்குள் பிரவேசிப்பதில் தாமதங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் முன்கூட்டியே விமான நிலையத்திற்கு செல்வது தேவையற்ற தாமதங்களை தவிர்க்க வழியமைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை ஊழியர்கள் இன்றைய தினம் பியர்சன் விமான நிலையத்திற்கு எதிரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக விமான நிலையத்திற்குள் உரிய நேரத்தில் பிரவேசிப்பதில் சிரமங்கள் ஏற்படலாம்Read More →

Reading Time: < 1 minuteலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் குருமடாலயத்தில் முன்னெடுக்கப்படும் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கனடா பிரதாமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்பார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலக செய்தித்தொடர்பாளர் குறித்த தகவலை தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்விற்காக லண்டனுக்குச் செல்லும் கனேடிய அரசாங்கக் குழுவின் மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். வெஸ்ட்மின்ஸ்டர் குருமடாலயத்தில் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளில் 2,000 பேர்கள் வரையில் பங்கெடுக்க முடியும். சாரலஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் நாடாளுமன்றRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டனில் காணாமல் போன எட்டு வயது சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்னும் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. Leona Furgason என்னும் பெண், தனது உறவினரான ஒரு பையன், அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிற்குச் சென்றபோது, 8 வயது சிறுமி ஒருத்தியை அவரது சித்தி தாக்கியதைக் கண்டதாக தெரிவித்துள்ளார். அவரது சித்தி அந்த சிறுமியின் தலையைப் பிடித்து சுவரில் மோதியடித்ததாக கூறப்பட்டதைத் தொடர்ந்து Leona பொலிசாரைRead More →

Reading Time: < 1 minuteகனடா அரசாங்கம் நேரிடையாக பிரிட்டன் ராஜ குடும்பத்திற்கு தொகை எதுவும் அளிக்கவில்லை என்றாலும், ஆண்டுக்கு 58 மில்லியன் டொலர் அளவுக்கு செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா அரசாங்கம் பிரிட்டன் ராஜ குடும்பம் சார்பில் செயல்படும் விண்ட்சர் மாளிகையை பராமரித்து வருவதால், ஆண்டுக்கு மில்லியன் கணக்கில் டொலர் செலவிடப்படுகிறது. கனடாவின் கவர்னர் ஜெனரல் அலுவலகம், வரலாற்று கட்டிடங்கள் மற்றும் பிரிட்டன் ராஜ குடும்பத்து உறுப்பினர்கள் கனடா வந்து செல்லும் பயணத்திற்கான செலவுகள்Read More →