Reading Time: < 1 minuteஇம்மாதம், மார்ச் மாதம் 7ஆம் திகதி, ஆல்பர்ட்டாவிலுள்ள Stollery மருத்துவமனையில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று அனுமதிக்கப்பட்டது. 11ஆம் திகதி அந்தப் பெண் குழந்தை இறந்துபோனாள். மருத்துவர்கள் அந்தக் குழந்தையின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டபோது, அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று தெரியவந்தது. ஆம், அந்த குழந்தை அடிபட்டதால், அதாவது கடுமையாக தாக்கப்பட்டதால் உயிரிழந்திருந்தாள். ஆகவே, அதை கொலை வழக்காக கருதி பொலிசார் விசாரணை மேற்கொள்ளத் துவங்கியுள்ளார்கள். அந்தக் குழந்தையைத் தாக்கியதுRead More →

Reading Time: < 1 minuteகடந்த ஓராண்டுக்கு முன்னர், வீடு புகுந்து கடத்தப்பட்ட Elnaz Hajtamiri வழக்கில் அதிரடி திருப்பமாக பிராம்டன் பெண் ஒருவர் கைதாகியுள்ளார். ஒன்ராறியோ மாகாண காவல்துறை வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் குறித்த கைது நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய கடத்தல் வழக்கில் சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, ஒரு மாதத்திற்கு பின்னர் ஒன்ராறியோ பொலிசார் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். அந்த சந்தேக நபர்களில் ஒருவர் 35 வயதுடைய தேஷான் டேவிஸ்Read More →

Reading Time: < 1 minuteவெளிநாட்டு திறன்மிகுப் பணியாளர்களைக் கவர்வது எப்படி என்பதை கனடாவிடமிருந்து கற்றுக்கொள்ள ஜேர்மனி விரும்புகிறது. வெளிநாட்டு திறன்மிகுப் பணியாளர்களைக் கவர்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதற்காக, ஜேர்மன் பெடரல் உள்துறை அமைச்சரான Nancy Faeserம், தொழிலாளர் துறை அமைச்சரான Hubertus Heilம், வரும் ஞாயிற்றுக்கிழமை கனடாவுக்குச் செல்ல இருக்கிறார்கள். அதன்படி அவர்கள் தொழிலாளர் சந்தை கொள்கைகள், புலம்பெயர்தல் மற்றும் பொது பாதுகாப்பு ஆகிய விடயங்கள் குறித்து கற்றுக்கொள்வதற்காக, கனேடிய அமைச்சர்களுடன் பல சந்திப்புகளைRead More →

Reading Time: 2 minutesஇலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் கனடா நாட்டுக்கான பிரதிநிதியாக கனடாவைச் சேர்ந்த முன்னாள் வர்த்தகர் ஆனந்தம் இரத்தினகுமார் (முன்னாள் டொராண்டோ SunSonic இணைய சேவை நிறுவன உரிமையாளர்) நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலகத்தில் நேற்று (15) புதன்கிழமை விசேட நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நியமனத்தை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் எஸ். அமுனுகம இளம் வர்த்தகருக்கு வழங்கியுள்ளார். இதனையடுத்துRead More →

Reading Time: < 1 minuteபிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டு விழா நிகழ்வினை முன்னிட்டு கனடாவில் விசேட நிகழ்வு நடைபெறவுள்ளது. எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி முடிசூட்டு விழா நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த விழாவினை முன்னிட்டு கனடாவிலும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸுடன் கடந்த ஐம்பது ஆண்டுகளாக கனடாவிற்கு நெருங்கிய நட்புறவு காணப்படுவுதாக குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் மீதும் முடியாட்சிRead More →

Reading Time: < 1 minuteகனடா பொதுத்தேர்தலில் சீனாவின் தலையீடு தொடர்பில் விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் லிபரல் கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சி ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன. இதில் லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் (Justin Trudeau) தற்போது ஆட்சி நடந்து வருகிறது. இங்கு கடந்த இரண்டு முறை நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் சீனாவின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதாவது தங்களுக்கு ஆதரவாக இருக்கும் லிபரல் கட்சி ஆட்சிக்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீட்டு வன்முறைச் சம்பவமொன்றை தீர்த்து வைப்பதற்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் எட்மோன்ரன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடு ஒன்றில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதன் போது பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 30 வயதான கான்ஸ்பிள் பிரட் ரயன் மற்றம் 35Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் சிறைச்சாலைக்கு புறாவொன்று கழுத்தில் பையுடன் சென்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவில் அமைந்துள்ள சிறைச்சாலை ஒன்றுக்கு இவ்வாறு புறா சென்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட இரண்டாவது புறா இதுவென்பது குறிப்பிடத்தக்கது. சிறைச்சாலைக்கு போதைப் பொருளை கடுத்தவதற்காக இந்தப் புறாக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. பிரிட்ஸ் கொலம்பியாவின் ப்ரேசர் வெலியின் மாட்ஸ்க்யூ சிறைச்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பகுதியில் பாலர் பாடசாலையொன்றும் காணப்படுவதாகவும்,Read More →