Reading Time: < 1 minuteஅமெரிக்காவும் கனடாவும் அதிகாரப்பூர்வமற்ற எல்லைக் கடவுகளில் புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிப்பதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஒட்டாவா விஜயத்தின் போது, இருநாட்டு தலைவர்களும் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த ஒப்பந்தத்தை அறிவிப்பார்கள். இந்த ஒப்பந்தம் எல்லையின் இருபுறமும் உள்ள அதிகாரிகளை இரு திசைகளிலும் செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களைத் திரும்பப் பெற அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையும் அமெரிக்கத் தரப்பில் உயர்ந்துள்ள நிலையில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபேக் மாகாணத்தில் வரி அறவீட்டுத் தொகைகள் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளன. புதிய வரவு செலவுத் திட்டத்தில் இவ்வாறு வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. கியூபெக் மாகாண நிதி அமைச்சர் எரிக் கிர்ராட் மாகாணசபையில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தார். அரச வருமானங்களை அதிகரிக்கும் அதேவேளை, வரிகளை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கியூபெக் மாகாணத்தின் சாதாரண பொதுமக்களுக்கு இந்த வரிக் குறைப்பு உதவியாக அமையும் எனவும் அர்களினால் பலநூறு டொலர்களை சேமித்துக்Read More →

Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் கட்சியான லிபரல் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். லிபரல் கட்சியின் றொரன்டோ நாடாளுமன்ற உறுப்பினர் ஹான் டொங் இவ்வாறு கட்சியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் தாம் நாடாளுமன்றில் சுயாதீன உறுப்பினராக கடமையாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார். கனடாவில் இறுதியாக நடைபெற்ற இரண்டு பொதுத் தேர்தல்களின் போதும் சீனா தலையீடு செய்தது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சீனத் தலையீடுகளில்Read More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியில் இருந்து திடீரென்று மாயமான பெண்மணி ஒருவர் தொடர்பில் மூன்று வாரங்களாக எந்த தகவலும் இல்லை என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மார்ச் 3ம் திகதி மதியத்திற்கு மேல் சுமார் 8.30 மணியளவில் 53 வயதான இசபெல்லா டான் கடைசியாக காணப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பொலிசார் முன்னெடுத்துள்ள முதற்கட்ட விசாரணைக்கு பின்னர், இசபெல்லா டான் சம்பவத்தன்று உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்றே தெரிவித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக றொரன்டோ நகரம் பெயரிடப்பட்டுள்ளது. றொரன்டோ நகரம் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக பூட்டை பூச்சி தொல்லை அதிகமான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடனாவின் பூச்சி கட்டுப்பாட்டு நிறுவனமான ஒர்கின் கனடா நிறுவனம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் மூட்டைப் பூச்சி கடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பட்டியலில் றொரன்டோ முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த பட்டியலில் முதலாவது இடத்தை றொரன்டோவும்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இட்டோபிகோக் பகுதியில் அமைந்துள்ள ஆடையகம் ஒன்றில் பெருமளவிலான போலி உற்பத்திகள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 2 மில்லியன் டாலர் பெறுமதியான போலி உற்பத்திகள் இந்த கடையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. உலகின் முதல் நிலை பண்டக் குறிகளை கொண்ட ஆடைகள் இந்த விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறு உயர் தரத்தினையுடைய பண்டக்குறி பெயர்களில் விற்பனை செய்யப்பட்ட ஆடைகள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது. போலீசார் முன்னெடுத்த விசாரணைகளில் இந்த உண்மைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கல்கரி பகுதியில் மருத்துவர் ஒருவர் முதல் தடவையாக மிகவும் சிக்கலான சத்திர சிகிச்சை ஒன்றை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். கனடாவில் இவ்வாறான ஒரு சத்திர சிகிச்சை மேற்கொண்ட முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது. நோயாளி சுய நினைவில் இருக்கும் போது நோயாளியின் முள்ளந்தண்டு பகுதியில் ஏற்பட்ட உபாதைக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் மைக்கேல் யங் என்ற முதுகெலும்பு சத்திர சிகிச்சை நிபுணர் இந்த அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பறவை காய்ச்சல் தொடர்பிலான தகவல்கள் பதிவாகியுள்ளன. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பிரம்டன் பகுதியில் பறவை காய்ச்சல் பதிவாகியுள்ளது. பறவைக் காயச்சலினால் பீடிக்கப்பட்ட நீர்ப்பறவையொன்று உயிரிழந்துள்ளது. Professor’s Lake and Duncan Valley Foster South ஆகிய பகுதிகளில் இவ்வாறு பறவை காய்ச்சலுடனான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பறவை காய்ச்சல் மூலம் மனிதர்களுக்கு நோய் பரவும் சாத்தியம் மிக குறைவு என தெரிவிக்கப்படுகிறது. இந்த பறவை காய்ச்சல் காரணமாக பொதுமக்களுக்குRead More →