Reading Time: < 1 minuteகனடாவின் செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளது. பழங்குடியின மக்களின் உரிமைகளை அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் மனித உரிமை நிலைமைகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கனடாவிற்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களுக்கு எதிராக அரசாங்கம் பல வழிகளில் ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது. பழங்குடியின மக்களின் காணிகளையும், வளங்களையும் அபகரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. சமத்துவமின்மை மற்றும் ஒடுக்குமுறை என பலRead More →

Reading Time: < 1 minuteசந்தேக நபர் ஒருவரை கைது செய்யச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். கியூபெக் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் சேவையில் இருபது ஆண்டுகள் அனுபவம் உடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்தி கொன்ற சந்தேக நபரை, சகல பொலிஸ் உத்தியோகத்தர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி கொன்றுள்ளனர். மொன்றியலில் இருந்து 100 கிலோ மீற்றர் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 35Read More →

Reading Time: < 1 minuteஇலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (28) பிற்பகல் முதல் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டுள்ளன. இதேவேளை, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் கையிருப்பு தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வராவிட்டால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சிக்கல் ஏற்படலாம் என இரவோடு இரவாக, பல எரிபொருள்Read More →

Reading Time: 2 minutesதங்களின் தங்கை மீது இருந்த அதீத பாசத்தின் காரணமாக அவரது சகோதரர்கள் செய்த விஷயம் ஒன்று, பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம், நாகூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிங் சாரா என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் அர்ஜுன், பகீரத் மெஹாரியா என மொத்தம் 4 சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே விவசாய தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு தங்களின் தங்கை என்றால் அளவு கடந்த பாசம் என தெரிகிறது.Read More →

Reading Time: < 1 minuteகனடா அமெரிக்க எல்லை பரபரப்படைந்துள்ள நிலையில், எல்லை கடக்க புலம்பெயர்வோர் பலர் பயன்படுத்தும் Roxham Road என்ற இடம் மூடப்பட்டது தெரியாமலே இன்னமும் பணம் செலவு செய்து அப்பகுதிக்கு வருகிறார்கள் புலம்பெயர்வோர். கனடா அமெரிக்க எல்லையில், கியூபெக்கிலுள்ள Hemmingford என்ற இடத்தில் வாழ்ந்துவருகிறார் ஈவ்லின் (Evelyne Bouchard). அவர் வாழும் பகுதிக்கு அருகில்தான் Roxham Road அமைந்துள்ளது. திடீரென அப்பகுதிக்கு கனேடிய பொலிசார் வருவதைக் கவனிக்கிறார் ஈவ்லின். சிறிதுநேரத்தில், எல்லைRead More →

Reading Time: < 1 minuteகனேடிய டொலர் நாணயத்தாளில் பழங்குடியின பெண்களின் உருவப்படத்தை பொறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் பூர்வகுடிகளான பழங்குடியின பெண்களை கௌரவிக்கும் வகையில் நாணயத் தாள்களில் அவர்களின் உருவப்படம் பொறிக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. கனேடிய பூர்வீக மகளிர் அமைப்பினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 20 டொலர் நாணயத்தாளில் பழங்குடியின பெண்களின் உருவங்கள் பொறிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்களது கோரிக்கைக்கு கனேடிய மத்திய வங்கி நல்லதொரு பதிலை அளிக்கும் எனRead More →

Reading Time: < 1 minuteவரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் யோசனை பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லிபரல் அரசாங்கத்தினால் நாளைய தினம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. குறைந்த வருமானம் ஈட்டும் மக்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களை வழங்க உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மளிகைப் பொருட்களுக்காக இவ்வாறு அரசாங்கம் கொடுப்பனவு தொகையொன்றை வழங்க உள்ளது. அரசாங்கத்தின் இந்த திட்டத்தின் கீழ் 11 மில்லியன் மக்கள் நன்மை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டு பிள்ளைகளைக் கொண்டRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் திருடப்பட்ட ஒரு தொகுதி கார்கள் ஆபிரிக்காவின் மொரோக்கோவில் மீட்கப்பட்டுள்ளது. கனடாவின் ஹால்டன் பிராந்தியத்தில திருடப்பட்ட சுமார் 25 வாகனங்கள் மொரொக்கோவில் கனேடிய பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த கார்கள், மத்திய கிழக்கின் டுபாய்க்கு அனுப்பி வைக்கப்படவிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. பிரபல்யமான கார் வகைகளில் ஒன்றான ரோல்ஸ் றயிஸ்; ரக வாகனம் உள்ளிட்ட 2.1 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். கனடாவின் வாகனத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாடகை வீடுகள் தொடர்பில் றோயல் பேங்க் ஆப் கனடா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 2026 ஆம் ஆண்டளவில் கனடாவில் வாடகை வீடுகளுக்கான தட்டுப்பாடு பெருமளவில் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடகை வீடுகளுக்கான தட்டுப்பாடை வரையறுக்க வேண்டுமானால் 3 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 332000 வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. அதாவது ஆண்டுதோறும் வீட்டு நிர்வாணப் பணிகளை 20% அதிகரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 70 ஆயிரம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் நோவா ஸ்கோட்டியா பகுதியில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்று விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த தேவாலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இவ்வாறு தேவாலயம் விற்பனை செய்யப்பட உள்ளது. புனித பேனட் தேவாலயமே இவ்வாறு விற்பனை செய்யப்பட உள்ளதுஃ சுமார் 1300 சதுர மீட்டர் பரப்பளவினை கொண்ட கட்டிடமே இவ்வாறு விற்பனை செய்யப்பட உள்ளது. தற்பொழுது இந்த தேவாலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 30 முதல் 40Read More →

Reading Time: < 1 minuteஉலகின் முன்னணி சமூக ஊடக செயலிகளில் ஒன்றான டிக் டாக் செயலி மீதான தடையினால் தமது பிள்ளைகள் அதிருப்தியடைந்துள்ளதாக கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தமது பிள்ளைகள் டிக் டாக் பயன்படுத்துவது இல்லை என கனடிய பிரதமர் தெரிவித்துள்ளார். அரசாங்க சாதனங்களில் டிக் டாக் பயன்படுத்துவது அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது. கனடாவின் மத்திய அரசாங்கம் இந்த தடையை அறிவித்துள்ளது. இதன்படி தமது பிள்ளைகளினாலும் கூட டிக் டாக் செயலியைRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவின் கீல் (Keele Subway) சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் கத்திக்குத்து சம்பவத்தை அடுத்து ஆண் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சனிக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ரொறன்ரோ பொலிசார் தெரிவிக்கையில், கீல் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் பல்வேறு தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவயிடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பலத்த காயங்களுடன் ஒருவரைRead More →

Reading Time: < 1 minuteகனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உடன்படிக்கையின் மூலம் ஏதிலிகள் குறித்த பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏதிலிக் கோரிக்கையாளர் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையில் புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் மூலம் குடியேறிகள், ஏதிலிகள் கனடாவிற்குள் பிரதான எல்லைப் பகுதிகள் வழியாக பிரவேசிப்பதனை தடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், பூரணமாக ஏதிலிகள் எல்லை வழியாக பிரவேசிப்பதனை தடுத்து நிறுத்தப் போவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பான வழிகளில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் காப்புறுதி செய்து கொள்ளாதவர்களுக்கு மருத்துவ வசதிகளை பெற்றுக் கொள்வதில் பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. சுகாதார காப்புறுதி செய்து கொள்ளாதவர்களுக்கு (Health Ontario) மருத்துவ வசதிகளை வழங்கும் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக ஒன்றாரியோ மாகாணம் அறிவித்துள்ளது. இந்த மாத 31ம் திகதியுடன் சுகாதார காப்புறுதி செய்யாத பிரஜைகளுக்கான சுகாதார வசதி திட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட உள்ளது. எனினும் இந்த நடவடிக்கையானது வசதி குறைந்த மக்களுக்கு பெரும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மதுப்பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மதுபான வகைகளுக்கான வரி பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் பதிவான அதிகூடிய வரி அளவு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பொருளாதார பின்னணியில் இவ்வாறு மதுபான வகைகளுக்கான வரி அதிகரிப்பானது தங்களது தொழிற்துறைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். முடக்க நிலைகள், ஆளணி வளப்பற்றாக்குறை, விநியோகச் சங்கிலி பிரச்சினை, பொருட்களின் விலையேற்றம், பணவீக்கம் போன்ற காரணிகளினால் உணவக தொழிற்துறைRead More →

Reading Time: < 1 minuteகனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதியில், அதிகாரப்பூர்வமற்ற எல்லை கடக்கும் பகுதி வழியாக, பலர் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள்ளும், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள்ளும் நுழைந்துவருகின்றனர். அப்படி எல்லை கடப்பதை தடுக்கும் வகையில் கனடாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளன என நேற்று தகவல் வெளியானது. குறிப்பாக, Roxham Road என்னும் இடம் வழியாக பலர் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள்ளும், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள்ளும் நுழைந்துவருவதால், அந்த பகுதியை மூட திட்டமிடப்பட்டு வருகிறது. ஆனால், அப்படிRead More →

Reading Time: < 1 minuteஉலகின் அதிகளவு செலவு கூடிய பொதுப் போக்குவரத்து சேவையைக் கொண்ட நகரமாக கனடாவின் றொரன்டோ நகரம் இடம்பிடித்துள்ளது. உலக அளவில் மிகவும் செலவு கூடிய பொதுப் போக்குவரத்து சேவையைக் கொண்ட நகரங்களின் வரிசையில் றொரன்டோ மூன்றாம் இடத்தை வகிக்கின்றது. எதிர்வரும் நாட்களில் கனடாவில் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. றொரன்டோ பிரஜைகள் தங்களது மொத்த வருமானத்தில் 3 வீதத்தை போக்குவரத்திற்காக செலவிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாதாந்த போக்குவரத்து கட்டணம்Read More →