Reading Time: < 1 minuteஉக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி ஓராண்டு கடந்த பின்னர் முதல் முறையாக கனேடிய ராணுவ தளபதி ஒருவர் அந்த நாட்டுக்கு பயணப்பட்டுள்ளார். இது தொடர்பில் சனிக்கிழமை வெளியாகியுள்ள அறிக்கையில், உக்ரைன் நாட்டின் எதிர்கால தேவைக்கு ஏற்ப கனேடிய ராணுவம் ஆதரவு அளிக்கும் என ஜெனரல் வெய்ன் ஐர் உறுதி அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2022 பிப்ரவரி 24ம் திகதிக்கு பின்னர் ஜெனரல் வெய்ன் ஐர் உக்ரைன் செல்வது இதுவே முதல்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் வீடு கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீடுகளின் விலைகள் 18 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளது. எவ்வாறெனினும், கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது வீட்டு விலைகளில் 5 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது. ரொறன்ரோ பிராந்திய ரியல் எஸ்டேட் சபை வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தகவல்களின் மூலம் இதுRead More →

Reading Time: < 1 minuteநல்ல வேலை, கைநிறைய ஊதியம், தங்குமிடம் வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டதை நம்பி கனடாவுக்கு வேலைக்கு வந்த புலம்பெயர்ந்தோரில் ஒருவர், பொலிசாரை நாடியதால் ஒரு பெரிய கடத்தல் கும்பல் சிக்கியுள்ளது. பொலிசாருக்கு தகவல் கொடுத்த வெளிநாட்டுப் பணியாளர்ரொரன்றோ பகுதியில் நல்ல வேலை இருப்பதாக ஆசைகாட்டி அழைத்துவரப்பட்ட மெக்சிகோ நாட்டவர் ஒருவர், மூட்டைப்பூச்சிகளும் கரப்பான் பூச்சிகளும் நிறைந்த ஒரு அறையில் ஒரு பாயில் இருவர் முடங்கிக்கொண்டு தூங்கும் ஒரு நிலையும், சொன்னதைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பனிச்சறுக்கு மற்றும் பனிமலையேறும் விளையாட்டில் ஈடுபட சென்ற மூன்று பேர் பனிப்பாறை சரிவில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு பனிப்பாறை சரிவு விபத்தில் சிக்கியவர்களில் பயண வழிகாட்டி தவிர்ந்த ஏனைய அனைவரும் வெளிநாட்டுப் பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் இன்வெயர்மீர் பகுதியில் இந்த பனிப்பாறை சரிவு சம்பவம் பதிவாகியுள்ளது. பனிப்பாறை சரிவில் சிக்கி காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் விபத்துச் சம்பவமென்று குறித்த காணொளியை எடுப்பதற்காக சென்ற படப்பிடிப்பாளர் ஒருவர் விபத்தி சிக்கி படுகாயமடைந்துள்ளார். ஒன்றாரியோவின் வெலிங்டன் வீதி மற்றும் மால்ட்பே வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. Guelph பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட விபத்து குறித்த காட்சிகளை படம்பிடித்துக் கொண்டிருந்த போது, வாகனமொன்றில் மோதுண்டு குறித்த படப்பிடிப்பு ஊடகவியலாளர் காயமடைந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த ஊடகவியலாளர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபலRead More →

Reading Time: < 1 minuteநான் உங்கள் பேரன், எனக்கு உதவி வேண்டும் என்று கூறி, பாட்டி ஒருவரை ஏமாற்ற முயன்றுள்ளார் இளைஞர் ஒருவர். ஆனால், பாட்டியில் சாதுர்யமான செயலால், இன்று கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் அவர். இது ஒரு அருமையான விழிப்புணர்வு செய்தி… பாட்டிக்கு வந்த தொலைபேசி அழைப்பு ஒன்ராறியோவின் விண்ட்சரில் வாழும் Bonnie Bednarik என்னும் பெண்மணிக்கு நேற்று முன்தினம் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. தொலைபேசியில் அழைத்தவர், பாட்டி, நான்தான் உங்கள் பேரன்,Read More →

Reading Time: < 1 minuteபுற்று நோயாளர்கள் எவ்வளவு காலம் உயிர் வாழ்வார்கள் என்பது தொடர்பில் துல்லியமான எதிர்கூறல்களை வெளியிட முடியும் என கனடிய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பிய புற்றுநோய் பிரிவு என்பன கூட்டாக இணைந்து ஓர் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவை கொண்ட புதிய தொழில்நுட்பம் ஒன்றின் ஊடாக புற்று நோயாளர்கள் எவ்வளவு காலம் உயிர் வாழ்வார்கள் என்பது குறித்து துல்லியமான மதிப்பீடுகளையும்Read More →

Reading Time: < 1 minuteசீனாவுக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்பு ட்ரூடோ அறக்கட்டளை பெற்ற நன்கொடையை திருப்பி அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ லிபரல் கட்சி தலைவர் ஆன பிறகு சீன அரசு அவர் மீது செல்வாக்கு செலுத்தி வருவதாக பெயர் குறிப்பிடப்படாத தேசிய பாதுகாப்பு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை ஒன்றில், சீன அரசாங்கத்தின் அறிவுறுத்தலால் அந்த நாட்டின்Read More →