Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்ரோபர் 1ம் திகதி தொடக்கம் குறைந்தபட்ச மணித்தியால சம்பளம் 16.55 டொலர்களாக உயர்வடைந்துள்ளது. தற்பொழுது ஒன்றாரியோ மாகாணத்தில் குறைந்தபட்ச சம்பளமாக மணித்தியாலம் ஒன்றுக்கு 15.50 டொலர்கள் வழங்கப்படுகின்றது. இந்த தொகை 6.8 வீதத்தினால் உயர்த்தப்பட்டு 16.55 டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. வாரத்திற்கு 40 மணித்தியாலங்கள் பணியாற்றும் ஒருவர் இந்த சம்பள அதிகரிப்பு மூலம் வருடமொன்றுக்கு 2200 டொலர்கள் கூடுதலாக சம்பளம் பெற்றுக்கொள்வார்Read More →

Reading Time: < 1 minute23 வருட சிறைவாசத்தின் பின்னர் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலையான ஒரு வாரத்திற்குள் தனது நீண்டகால காதலியை மணந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த சக்திவேல் இலங்கேஸ்வரன், ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் அண்மையில் விடுதலை செய்யப்பட்டார். இந்த விழாவில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஏராளமானோர் திரண்டிருந்தனர். இளங்கேஸ்வரனின் காதலி 23 ஆண்டுகளாக இலங்கேஸ்வரன் சிறையில் இருந்து விடுதலையாகும் வரை காத்திருந்தார். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவதூறு ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதன்பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். குறித்த விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு பூராகவும் போராட்டத்தை மேற்கொள்ள காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது. போராட்டம் ‘ஜனநாயகத்தை காப்பாற்றுவோம்’ எனும் அமைப்பினூடாக குறித்த போராட்டத்தை நடத்துவதற்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் Akwesasne Mohawk நகரின் சென் லோரன்ஸ் ( St. Lawrence) நதியில் இவ்வாறு ஒரு சிறு குழந்தை உள்ளிட்ட 6 பேரின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட குழந்தையிடம் கனடிய கடவுச்சீட்டு மீட்கப்பட்டுள்ளது. கியூபெக், ஒன்றாரியோ மற்றும் நியூயோர்க் பகுதிகளின் எல்லைப் பகுதியில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மரணத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை. உயிரிழந்தவர்களைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்றில் நான்கு பதின்ம வயதினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கனடாவின் மானிடோபா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் கார் ஒன்றும் ட்ரக் வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காரில் ஐந்து பதின்ம வயதினர் பயணித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த கார் நிறுத்தப்பட வேண்டிய இடத்தில் நிறுத்தாது பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 18 வயதான சாரதியும், 17 வயதான இரண்டு ஆண்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் பேருந்து பயண கட்டணம் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் 12.09 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 4 ரூபாயால் குறைக்கப்படுகிறது. இதற்கமைய 34 ரூபாய் என்ற ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 30 ரூபாயாக குறைவடைந்துள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteமெய்நிகர் வழியிலான அவசர மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேலும் 3 மாதங்களுக்கு ஒண்டாரியோ மாகாண அரசு நீடித்துள்ளது. இந்த வெள்ளிக்கிழமையுடன் அரசின் நிதி ஒதுக்கீடுகள் முடிவடைவதன் காரணமாக, மெய்நிகர் அவசர சிகிச்சை பிரிவுகளை மூடுவதற்கு பல மருத்துவமனைகள் தயாராகி வந்தன. இந்நிலையில், ஜூன் 30ஆம் திகதிவரை நிதியினை வழங்குவதற்கான ஒப்பந்தம், ஒண்டாரியோ மருத்துவ கழகத்துடன் எட்டப்பட்டுள்ளதாக, மாகாண சுகாதார அமைச்சர் சில்வியா ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். மக்களுக்கு அவசியமானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஆசிரியர் ஒருவர் மோசமான செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் ஸ்காபரோ தனியார் பள்ளி ஆசிரியர் இரண்டு மாணவிகளை தொடர் பாலியல் வன்கொடுமை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் பல சந்தர்ப்பங்களில் மாணவர்களை குறித்த ஆசிரியர், பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். போன்ட் அகடமி என்னும் தனியார் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றிய 50 வயது ஆசிரியர் மீதுRead More →

Reading Time: < 1 minuteஉளுந்தூர்பேட்டை அருகே மரணமடைந்ததாக சொல்லப்பட்ட முதியவர் உயிருடன் வந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுமானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலித் தொழிலாளியான இவருக்கு 65 வயதாகிறது. இவருக்கு கவுண்டமணி (வயது 30) மற்றும் செந்தில் (வயது 28) என இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். சமீபத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சுப்பிரமணி வீட்டிலிருந்து வெளியேறியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் வான்கூவார் நகரில் மயான பூமியின் விலைகள் பெருமளவில் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காணி நிலங்களுக்கு நிகரான அடிப்படையில் இறந்தவர்களை நல்லடக்கம் செய்யும் காணிகளுக்கான விலைகளும் வெகுவாக உயர்வடைந்துள்ளன. வான்கூவாரின் பேர்னாபே பகுதியில் ஒருவரை அடக்கம் செய்வதற்கான காணித் துண்டின் விலை 54000 டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. வான்கூவர் நகருக்குள் ஒருவரை அடக்கம் செய்யும் காணி துண்டு 70 ஆயிரம் டாலர் வரை செல்கின்றது. இணைய வழியில் மயான பூமிகள் இவ்வாறுRead More →

Reading Time: < 1 minuteறொரன்டோவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். றொரன்டோவின் Junction Triangle பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் சலனமற்ற நிலையில் இருந்த ஆண் ஒருவரை தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளனர். குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தீ விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு, றொரன்டோ தீயணைப்பு படையினர் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளனர். தீ விபத்திற்கான காரணங்கள் இதுவரையில்Read More →

Reading Time: < 1 minuteசமீபத்தில் கனடா அமெரிக்க எல்லையிலுள்ள, புலம்பெயர்வோர் எல்லையைக் கடக்க பயன்படுத்தும் Roxham Road மூடப்பட்டது. கனடாவும் அமெரிக்காவும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, கனடா அமெரிக்க எல்லையிலுள்ள, புலம்பெயர்வோர் எல்லையைக் கடக்க பயன்படுத்தும் Roxham Road என்னும் பகுதி மூடப்பட்டது. இது வேறு விதமான அபாயங்களை உருவாக்கும் என அப்போதே புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்புகள் எச்சரித்திருந்தன. இந்நிலையில், Roxham Road மூடப்பட்டதால், வேறொரு பகுதி வழியாக மக்கள்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையின் பல பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று(30) பிற்பகல் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.7 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, களுத்துறை, பேருவளை, பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சமூக ஊடகப் பயனாளர்கள் தங்களது பகுதிகளிலும் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டதாகRead More →