Reading Time: < 1 minuteகனடாவின் பொருளாதார நிலைமை குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் நான்காம் காலாண்டு பகுதியில் நாட்டின் பொருளாதாரம் மந்த கதியான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக எதிர்பார்க்கப்பட்ட அளவினை விடவும் கடந்த ஆண்டு நான்காம் காலாண்டின் பொருளாதார வளர்சசி குறைவாகவே காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து காலாண்டு பகுதிகளில் தொடர்ச்சியாக வளர்ச்சி பதிவாகியிருந்த நிலையில் 2022ம் ஆண்டின் இறுதிக் காலாண்டுRead More →

Reading Time: < 1 minuteஅரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அனைத்து சாதனங்களிலிருந்தும் சீன செயலியான TikTok செயலியை தடை செய்வதற்கு கனடா தீர்மானித்துள்ளது. இணையப் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளதால் குறுகிய வடிவ வீடியோ பயன்பாடான டிக்டாக் செயலியை அதிகாரப்பூர்வ மின்னணு சாதனங்களிலிருந்து நீக்கப்படுவதாக கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள சி.என்.என். அறிக்கையின்படி, “டிக்டாக் செயலியை அதிகாரப்பூர்வ மின்னணு சாதனங்களிலிருந்து நீக்கப்படுவதாகவும், டிக்டாக் செயலிக்கான தடை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது”Read More →

Reading Time: < 1 minuteறொரன்டோவில் இலக்ரிஷன்களாக கடமையாற்றி வரும் 12 பேருக்கு லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த எட்டு மாதங்களாக இந்த மின் பணியாளர்கள் ஒன்றாக லொத்தர் சீட்டிலுப்பில் விளையாடி வருகின்றனர். இந்த 12 பேரும் ஒன்றாக இணைந்து தெரிவு செய்த அனைத்து இலக்கங்களும் பொருந்தியதன் காரணமாக இவர்களுக்கு ஒரு மில்லியன் டொலர் பணப்பரிசு கிடைக்கப் பெற்றுள்ளது. லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றெடுக்கப்பட்டதாக நண்பர் ஒருவர் கூறியதாகவும் அதனை தான் நம்பவில்லைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் குறிப்பிட்ட வகை சொக்லெட்களை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வகை சொக்லெட்கள் ஒன்றாரியோ மாகாணத்தில் விற்பனை செய்யப்படுவதாக கனேடிய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது. செலன்டோ ஒர்கானிக் (Salento Organics) என்ற பண்டக் குறியைக் கொண்ட சொக்லெட் வகைகளை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சொக்லெட் பொதியில் குறிப்பிடப்பட்டுள்ள சேர்மானங்களில் குறிப்பிடப்படாத ஒர் பால் வகை இந்த சொக்லெட்களில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. chocolate pineapple bites,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடுமைப் பனிப்பொழிவுடனான காலநிலையில் சிக்கிக் கொண்ட இரண்டு சுற்றுலாப் பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இவ்வாறு பனிமலையொன்றில் சிக்கியுள்ளனர். மலைப் பகுதியில் 24 மணித்தியாலங்கள் சிக்கியிருந்து உயிருடன் மீட்கப்பட்டமை அதிசயமானது என மீட்பு பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சுற்றுலாப் பயணிகள், வான்கூவாரின் நோர்வன் நீர்வீழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது இருள் சூழ்ந்து கொண்டதனால் வழி தவறிவிடடனர். தங்களிடமிருந்த அலைபேசியையும்Read More →

Reading Time: < 1 minuteஎதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் மதுபான வகைகளின் விலைகள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பணவீக்க வீதத்திற்கு அமைவாக கலால் வரித் தொகை உயர்த்தப்படுவது ஆண்டு தோறும் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகும். பியர், வைன் மற்றும் மதுபான வகைகளின் விலைகள் 6.3 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளது. விநியோகஸ்தர் விலை, ஏற்றுமதி இறக்குமதி வரி, கப்பல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மதுபான வகைகளுக்கான விலை அதிகரிப்பு நிர்ணயம் செய்யப்படும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணம் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 91 வயதான மூதாட்டி ஒருவர் உலக சாதனைப் படைத்துள்ளார். 91 வயதான அலிடா கிங்ஸ்வுட் என்ற மூதாட்டி உலக உள்ளக ரோயிங் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார். லைட்வெயிட் 90-94 பிரிவின் 2000 மீற்றர் போட்டியில் அலிடா இவ்வாறு உலக சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். போட்டியில் பங்குபற்றிய அலிடாவிற்கு உள்ளுர், வெளியூர் மற்றும் ஏனைய போட்டியார்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவினைRead More →

Reading Time: < 1 minuteபரவும் பறவைக் காய்ச்சலால் பொதுமக்களுக்கு ஆபத்து மிக மிக குறைவு என்றாலும், எச்சரிக்கை தேவை என கனேடிய நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பறவைக் காய்ச்சலுக்கு உலக அளவில் பல மில்லியன் கணக்கான பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கனடாவில் மட்டும் 7.2 மில்லியன் எண்ணிக்கை கடந்துள்ளது என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளன. மிக அதிக பாதிப்பு அமெரிக்க மாகாணங்களில் என குறிப்பிட்டுள்ள நிபுணர்கள் தரப்பு, இது பல நாடுகளுக்கும் வியாபித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteஉலகின் முதல் நிலை தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் நடவடிக்கை குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கவலை வெளியிட்டுள்ளார். குறிப்பாக சில சில கனேடியர்களின் கணக்குகள் ஊடாக செய்திகளை பெற்றுக் கொள்வதற்கு google நிறுவனம் சில வரையறைகளை அமுல்படுத்தி வருகின்றது. இந்த நடவடிக்கை தொடர்பில் பிரதமர் ட்ரூடோ கவலை வெளியிட்டுள்ளார். google நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஒரு மிகப்பெரிய தவறு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கனடாவை சேர்ந்தRead More →

Reading Time: < 1 minuteஇந்த தீ விபத்து சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தில் மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். கிங்ஸ்டன் மற்றும் லோரன்ஸ் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள அடுக்கு மாடி குடியிருப்புத் தொகுதியில் இந்த விபத்து சம்பவம் பதிவாகி உள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாக தீயணைப்பு படையினர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் எட்மண்டன் பகுதியை சேர்ந்த பெண் ராணுவ வீரர் ஒருவர் தமது மூன்று பிள்ளைகளை கொல்ல முயன்ற வழக்கில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளார். கடந்த 2015ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது மூன்று பிரிவுகளில் கொலை வழக்கும், வீட்டுக்கு நெருப்பு வைத்ததாக கூறி இரண்டு பிரிவுகளில் வழக்கும் பதியப்பட்டிருந்தது. இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணையும் முடிவுக்கு வந்த நிலையில், மிக விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.Read More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணம் அனலைதீவில் தங்கியிருந்த கனடா பிரஜைகளின் இல்லத்திற்குள் நுழைந்த வாள்வெட்டு குழு பெருந்தொகைப் பணதை கொள்ளையிட்டதுடன் கனடாப் பிரஜை மீதும் வாள்வெட்டு மேற்கொண்டுள்ளனர். கனடாவில், இருந்து கடந்த இரண்டு மாதங்களிற்கு முன்னர் அனலைதீவிற்கு சென்ற குடும்பம் தமது வீடு புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கடவுச் சீட்டு பெறுமதியான பொருட்கள் கொள்ளைஇந்நிலையில் வீட்டிற்குள் 12 மணியளவில் கதவை உடைத்து உட்புகுந்த நால்வர் அடங்கிய கும்பலே வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு 3Read More →

Reading Time: < 1 minuteகனடாவை நோக்கி பெரும் எண்ணிக்கையிலான உக்ரைன் ஏதிலிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறிப்பாக கனடாவின் வானகூவார் பகுதியில் இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான உக்ரைன் பிரஜைகள் சரணாகதி அடைந்து வருகின்றனர். போரின் தாக்கம் காரணமாக 951 உக்ரைன் பிரஜைகள் கனடாவின் வான்கூவரில் தஞ்சம் புகுந்துள்ளனர். கூடுதல் அளவில் ஏதிலிகள் வான்கூவாரில் படையெடுப்பதன் காரணமாக அவர்களை தங்க வைப்பதற்கு போதியளவு வசதிகள் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த டிசம்பர் மாதம் வரையில் வாரமொன்றுக்குRead More →