Reading Time: < 1 minuteசீனாவிலிருந்து கனடா வரும் பயணிகள் கோவிட் பரிசோதனை செய்து கொண்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிட் நெகடிவ் அறிக்கை காணப்படும் பயணிகளுக்கு மட்டுமே கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. கனேடிய அரசாங்கம் தற்காலிக அடிப்படையில் இந்த நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது. எதிர்வரும் 5ம் திகதி முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது. சீனா, ஹொங்கொங் மற்றும் மாகோ ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கு இந்த கோவிட் பரிசோதனை சான்றிதழ்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியொருவர் தீ விபத்துச் சம்பவமொன்றில் துணிச்சலாக செயற்பட்டமை அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது. வடக்கு வான்கூவாரில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் தீ விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அதிகாலையில் கட்டிடத்தில் தீ பற்றிக் கொண்டதை அறிந்து கொண்ட சிறுமி உடனடியாக வெளியேறாது, அண்டை வீடுகளுக்கு தீ விபத்து பற்றி தெரியப்படுத்தியுள்ளார். மூன்றாம் மாடியில் குடியிருந்த சக குடியிருப்பாளர்களின் கதவுகளை தட்டியும், சத்தமிட்டும் தீRead More →

Reading Time: < 1 minuteபுத்தாண்டில் புதிய வேலைக்காக தயாராகி வந்த 22 வயது கனேடிய இளம்பெண் ஒருவர் கிறிஸ்துமஸ் தினத்தன்று சாலை விபத்தில் கொல்லப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் அடையாளம் தெரிந்த நிலையில், தற்போது புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 22 வயதான Cecelia Strachan இரவு 10.30 மணியளவில் மேற்கு எட்மண்டனில் 95 அவென்யூவை கடக்கிற போது வாகனம் மோதி குற்றுயிராக மீட்கப்பட்டார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவர் மரணமடைந்தார். இந்த நிலையில்,Read More →