Reading Time: < 1 minute88 எஃப்-35 போர் விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்கா மற்றும் ஆயுத தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுடன் கனடா தனது ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இந்த 19 பில்லியன் கனேடிய டொலர்கள் ஒப்பந்தம் 30 ஆண்டுகளில் றோயல் கனடிய விமானப்படையில் மிகப்பெரிய முதலீட்டைக் குறிப்பதாக பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார். நாட்டின் வயதான கடற்படையை மேம்படுத்த முற்படும் கனேடிய அரசாங்கத்திற்கு முதல் நான்கு எஃப்-35 விமானங்கள் 2026இல் வழங்கப்படும்Read More →

Reading Time: < 1 minuteறொரன்டோ நகரின் ரயில் நிலையமொன்றில் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பெண் காயமடைந்துள்ளார் என றொரன்டோ பொலிஸார் தெரிவிக்கின்றனர். யொங்-ப்லூர் ரயில் நிலையத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கழிவறையில் வைத்து மற்றமொரு பெண் இந்த தாக்குதலை நடத்தியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உயிராபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. விசாரணைகள் நடத்தப்பட்ட நேரத்தில் குறித்த ரயில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவிலிருந்து நாளொன்றிற்கு 30க்கும் மேலானோர் நாடுகடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நாடுகடத்தப்படுவதிலிருந்து கடைசி நேரத்தில் தப்பிய இளம்பெண் ஒருவர் தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். நடுகடத்தப்பட உத்தரவிடப்பட்ட இளம்பெண் ஃபாத்துமா (Fatumah Najjuma, 29), கனடாவில் கோவிட் காலகட்டத்தில் முன்னணியில் நின்று மக்களைக் காக்க போராடிய ஒரு இளம்பெண். ஆனாலும், ஜனவரி 7ஆம் திகதி அவர் தனது சொந்த நாடான உகாண்டாவுக்கு நாடுகடத்தப்படவேண்டும் என திகதி குறிக்கப்பட்டது. கனடா மக்களுக்காக கோவிட்Read More →

Reading Time: < 1 minuteஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின்(Fumio Kishida) முதல் உத்தியோகபூர்வ கனடா விஜயம் அடுத்த வாரம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் இந்த ஆண்டு G7 குழுவின் தலைமை பதவியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், கிஷிடா (Fumio Kishida)பல நாடு சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். G7 ஆனது உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளுக்கு பொருளாதாரக் கொள்கையை ஒருங்கிணைக்க ஒரு மன்றமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்காக ரஷ்யாவைத் தண்டிப்பதில் முக்கிய பங்குRead More →

Reading Time: < 1 minuteமெக்ஸிக்கோவில் சிக்கியுள்ள கனேடியர்களில் சிலர் நாடு திரும்பத் தொடங்கியுள்ளனர். சுற்றுலாப் பயணிகளாக மெக்ஸிக்கோ சென்ற கனேடியர்கள் அங்கு ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் காரணமாக, நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். வன்முறைகளினால் முக்கியமான விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மெக்ஸிக்கோவின் வடகிழக்கு பகுதியில் இரண்டு விமான நிலையங்கள் தற்பொழுது திறக்கப்பட்டுள்ளது. கடல் கரையோர ஹோட்டல்களில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம், நாடு திரும்பத் தொடங்கியுள்ளனர். வன்முறைகள் இடம்பெறும் பகுதிகளில் தங்கியிருக்கும் கனேடியர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் குடியிருப்புகளை ஆண்டின் ஆறு மாதங்களுக்கு மேல் காலியாக வைத்திருந்தால் வரி செலுத்த வேண்டும் என்ற விதி இந்த ஆண்டு முதல் அமுலுக்கு வருகிறது. இதனால், பிப்ரவரி 2ம் திகதி வரையில், உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலியாக வைத்திருக்கலாமா என்பது தொடர்பில் முடிவெடுக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளை காலியாக வைத்திருக்க முடிவு செய்துள்ள உரிமையாளர்கள் அந்த குடியிருப்பின் மதிப்பிடப்பட்ட தொகையில் இருந்து 1% வரியாக செலுத்த நேரிடும்.Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தில் வாழ்ந்து வரும் மதுப் பிரியர்கள் இணைய வழியில் மதுபானம் கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபானம் அருந்துவதற்கான சட்ட ரீதியான வயது எல்லையை பூர்த்தி செய்தவர்கள் இவ்வாறு இணைய வழியில் மதுபானம் கொள்வனவு செய்ய முடியும். ஊபர் ஈட்ஸ் செயலியின் ஊடாக LCBO நிறுவனத்திடமிருந்து இணைய வழியில் மதுபானம் கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 19 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு கொள்வனவுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கனடாவின முன்னணி ரயில் சேவைகளில் ஒன்றான Go ரயில் சேவை நிறுவனம் இது பற்றி அறிவித்துள்ளது. பயணிகள் உரிய நேரத்திற்கு முன்னதாகவே ரயிலில் ஏறிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிவிக்கப்படும் நேரத்திற்கு முன்னதாகவே கதவுகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 9ம் திகதி திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது. புறப்படும் நேரத்திற்கு ஓரு நிமிடத்திற்கு முன்தனாகவே கதவுகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் கனடாவில் 104000 புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கனடாவின் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கை 5.0 வீதமாக குறைவடைந்துள்ளது. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. நான்கு மாத காலப் பகுதியில் மூன்று தடவைகள் வேலையற்றோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. முழு நேர வேலை வாய்ப்புக்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருளியலாளர்கள் எதிர்வுகூறியதனை விடவும் வேலையற்றோர்Read More →

Reading Time: < 1 minuteகனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் முகவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 38 பேர் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு 2021 – 06 – 10 ஆம் திகதி கர்நாடகாவின் மங்களுரில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை விடுதலை செய்த நீதிமன்றம் இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. 15 நாள்கள் அவகாசம் அதற்கானRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள சிறை ஒன்றிற்குள் ஒரு புறா பறந்துவந்தது. அந்த புறாவின் கழுத்தில் இருந்த பொருள் என்னவென்று அறிந்த அதிகாரிகள் திகைத்துப்போனார்கள். புறாவின் கால்களில் கட்டிய ஓலை அல்லது காகிதத்தில் செய்திகள் அனுப்பப்படும் வழக்கம் உலக நாடுகள் பலவற்றில் நீண்ட காலமாகவே இருந்துவருகிறது. அந்த காலகட்டம் திரும்பிவிட்டதோ என சந்தேகிக்கும் சம்பவம் ஒன்று சமீபத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா சிறை ஒன்றில் நிகழ்ந்தது. சென்ற வாரம், பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ளRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் இட்டாபிகோக் பகுதியில் சாரதியொருவர் பாதசாரி மீது வாகனத்தை மோதி, தப்பிச் சென்றுள்ளார். இந்த விபத்தில் 59 வயதான நபர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இட்டாபிகோக்கின் செகன்ட் ஸ்ட்ரீட் மற்றும் லேக் சோர் பகுதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடின நிறமுடைய போர்ட் பிக்கப் ரக வாகனத்தில் பயணம் செய்த சாரதியே இந்த விபத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாதையை கடக்க முயற்சித்தRead More →

Reading Time: < 1 minuteமெக்ஸிக்கோவில் வாழ்ந்து வரும் கனேடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெக்ஸிக்கோவில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில் கனேடியர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளை விமான நிலையத்திற்கு ஏற்றிச் செல்லவிருந்த பஸ்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மெக்‌ஸிக்கோவின் பிரபல போதைப் பொருள் கடத்தல்காரர் ஒவிடியோ என்பவரை கைது செய்த காரணத்தினால் அந்தப் பகுதிகளில் வன்முறைகள் வெடித்துள்ளன. விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவையற்ற நடமாட்டத்தை தவிர்க்குமாறு கனேடியர்களிடம் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. மெக்ஸிக்கோவின்Read More →