Reading Time: < 1 minuteறொரன்டோ பொதுப் போக்குவரத்து சேவையில் அதிரடியாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் களமிறக்கப்பட்டுள்ளன. றொரன்டோ ட்ரான்சிட் கமிஷன் அல்லது ரீ.ரீ.சீ பொதுப் போக்குவரத்து சேவையில் இவ்வாறு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். றொரன்டோ நகரில் சுமார் 50 பாதுகாப்பு படையினர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக 20 சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் அண்மைக் காலமாக பல்வேறு பிரச்சினைகள் உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பொது போக்குவரத்துRead More →

Reading Time: < 1 minuteகனேடிய பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் கனேடிய பொருளாதாரம் 0.1 வீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த டிசம்பர் மாதம் நாட்டின் பொருளாதாரம் நான்காம் காலாண்டில் 1.6 வீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. மூன்றாம் காலாண்டு பகுதியில் வருடாந்த அடிப்படையில் நாட்டின் பொருளாதாரம் 2.9 வீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் பொதுத்துறை, போக்குவரத்து, நிதி மற்றும் காப்புறுதி ஆகிய துறைகளின் உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி பதிவாகியுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteதிருமண பந்தத்தில் இணைந்து கொண்டு 73 ஆண்டுகளின் பின்னர் தம்பதியினர் பிரிந்து வாழ நேரிட்டுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டாவாவைச் சேர்ந்த ஜோன் மற்றும் கெவன் தம்பதியினரே இவ்வாறு சூழ்நிலை காரணமாக 19 மாதங்கள் பிரிந்து வாழ நேரிட்டுள்ளது. இந்த இருவரும் தனித் தனியான பராமரிப்பு மையங்களில் வாழ நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தம்பதியினரின் பிள்ளைகள் இருவரையும் சேர்த்து வைப்பதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 73 ஆண்டு காலRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். யோர்க் பிராந்தியத்தின் விட்சேர்ச்-ஸ்டோப்வில்லி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் இருந்தால் அதனை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யோர்க் பிராந்தியRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவதற்கு சட்ட ரீதியான அனுமதி வழங்கப்படுகின்றது. தனிப்பட்ட ரீதியிலான பயன்பாட்டுக்காக ஒரு சிறு அளவிலான சட்டவிரோத போதைப் பொருட்களை வைத்திருக்க அனுமதி வழங்கப்படுகின்றது. கனடாவில் முதல் தடவையாக இவ்வாறான ஓர் பரீட்சார்த்த நடைமுறை பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் அறிமுகம் செய்யப்படுகின்றது. 18 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதினை உடையவர்கள் 2.5 கிராம் எடையுடைய சட்டவிரோத போதைப் பொருட்களை வைத்திருக்க அனுமதி வழங்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவைச் சேர்ந்த பெண் சட்டத்தரணியொருவர், யார் என்றே தெரியாத நபர் ஒருவருக்கு தனது ஓர் சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார். சட்டத்தரணியின் இந்த உயரிய பண்பு அனைவரினாலும் பாராட்டப்பட்டு வருகின்றது. கரோலின் புருக்ஹோல்டர் ஜேம்ஸ் என்ற பெண் சட்டத்தரணியே இவ்வாறு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார். வாழ் நாளில் என்றுமே சந்திக்காத நபர் ஒருவரின் உயிரை காப்பாற்ற இந்த சட்டத்தரணி தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறுநீரகRead More →

Reading Time: < 1 minuteகனேடிய நகரம் Mississauga-தின் மேயர் ஹேசல் மெக்கல்லின் தனது 101வது வயதில் மறைந்த நிலையில் அவரது மறைவுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். Mississauga நகரின் மேயராக பணியாற்றி வந்தவர் ஹேசல் மெக்கல்லின். பல பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய ஹேசல் ”பெண்ணியவாதி” என்ற சொல்லை வெறுத்தார். அவர் ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறையில் தனது அணுகுமுறையை பொதுவாக அரசியலற்ற சொற்களில் விவரித்தார். அதாவது, ‘ஒரு மனிதனைப் போலRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கோவிட் பெருந்தொற்று காலத்தில் பிறந்த சிறுவன் ஒருவனின் ஆசையை, பல்பொருள் அங்காடி நிர்வாகம் நிறைவேற்றியுள்ளது. ஒன்றாரியோவின் பிட்கோன் பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடித் தொகுதியின் நிர்வாகம் இந்த நெகிழ்ச்சி செயலை மேற்கொண்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று காரணமாக தனது சிறிய வீட்டிலேயே மூன்று பிறந்தநாட்களை கொண்டாடிய சிறுவன், பல்பொருள் அங்காடியில் 4ம் பிறந்த நாளை கொண்டாட வேண்டுமென பெற்றோரிடம் தனது விருப்பத்தை கூறியுள்ளான். எனினும் சனநடமாட்டம் அதிகமாக காணப்படும் பல்பொருள்Read More →

Reading Time: < 1 minuteறொரன்டோவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தினால் பன்னிரெண்டு பேர் தற்காலிகமாக இடம்பெயர நேரிட்டுள்ளது. றொரன்டோவின் மேற்கு பகுதி வீடொன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.43 மணியளவில் கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பின் பிகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தீயணைப்பு படையினர் தெரிவிக்கின்றனர். கூரைப் பகுதி உள்ளிட்ட வீடு முழுவதும் தீப்பற்றிக் கொண்டதாகவும், அருகாமையில் இருந்த வீடுகளிலிலும் தீ பரவிக் கொண்டதாகவும் தீயணைப்புப் படையினர் தெரிவிக்கின்றனர். இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடா – அமெரிக்க எல்லையில் கடுமையான குளிரில் சடலமாக மீட்கப்பட்ட புலம்பெயர் நபரின் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 3 டசின் மக்களுக்கும் அதிகமானோர் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். கியூபெக்கின் St-Bernard-de-Lacolle நகரின் மரங்கள் அடர்ந்த பகுதியில் இந்த மாத துவக்கத்தில் 44 வயதான Fritznel Richard என்பவரின் சடலம் மீட்கப்பட்டது. மாகாண பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், அவர் அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில், கடும் குளிரில் சிக்கி இறந்திருக்கலாம் என கண்டறிந்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்ராறியோவில் மொத்தம் 12,000 சிறார்கள் அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பதாக கூறி உதவி கோரியுள்ளனர். மாகாணத்தின் நான்கு முதன்மையான மருத்துவமனைகள் தெரிவிக்கையில், இது மிக நெருக்கடியான சூழல், கண்டிப்பாக மாகாண நிர்வாகம் உதவ முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். சுவாச நோய்கள், காய்ச்சலால் ஏற்படும் தொடர் வியாதிகள் உட்பட பாதிக்கப்பட்ட சிறார்களால் ரொறன்ரோ, ஹாமில்டன், லண்டன், ஒட்டாவா உட்பட முக்கிய நகரங்களில் பல மருத்துவமனைகள் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் றொரன்டோ மற்றும் தென் ஒன்றாரியோ பகுதிகளில் குறிப்பிடத்தக்களவு பனிப்புயல் தாக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான எதிர்வுகூறலை வெளியிட்டுள்ளது. டெக்ஸாஸ் பகுதியில் உருவாகும் தாழமுக்க நிலை ஒன்றாரியோ மாகாணத்தில் பனிப்பொழிவினையும் புயல் காற்றினையும் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. எதிர்வரும் புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் 15 சென்றி மீற்றருக்கு மேற்பட்ட பனிப்பொழிவினை எதிர்பார்க்கRead More →

Reading Time: < 1 minuteகாதலின் வெறுப்பையும், கோவத்தையும் வெளிப்படுத்த கரப்பான் பூச்சிக்கு பெயர் வைக்கலாம் என கனடா பூங்கா ஒன்று தெரிவித்துள்ளது. இந்த வியப்பையூட்டும் திட்டம் டொராண்டோவில் அமைந்திருக்கும் உயிரியல் பூங்காவில் தான் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி நம்முடைய வெறுப்பை சம்பாதித்த மனிதர்களின் பெயரை கரப்பான்பூச்சிக்கு சூட்ட டொராண்டோ உயிரியல் பூங்காஅனுமதித்துள்ளது. வாழ்க்கையில் நமக்கு பிரச்சனைகளை கொடுப்பவர்களை பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. முன்னாள் காதலிகள், காதலர்கள், மட்டுமல்லாது எரிச்சலூட்டும் முதலாளிகள், எல்லாவற்றிலும் மூக்கைRead More →