Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் ரொரன்றோ நகரில் அமைந்துள்ள சுரங்க ரயில் நிலையம் ஒன்றில், திடீரென ஒருவர் கத்தியால் பயணிகளை தாக்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பொலிசாருக்கு கிடைத்த தகவல் நேற்று மதியம் 2.00 மணியளவில், ரொரன்றோ சுரங்க ரயில் நிலையத்தில், ஒருவர் பயணிகளை கத்தியால் தாக்குவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு விரைந்த பொலிசார், தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்தார்கள். இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் காயமடைந்த நிலையில்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இந்த ஆண்டில் அதிக விலைக்கு உணவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளமை குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. றொரன்டோவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரே ஆர்டரில் ஊபர் ஈட்ஸ் ஊடாக 1048.01 டொலர் பெறுமதியான உணவுப் பண்டங்களை ஆர்டர் செய்துள்ளார். இதுவே கனடாவில் ஆர்டர் செய்யப்பட்ட அதிக விலையுடைய ஆர்டர் என்பது குறிப்பிடத்தக்கது. வான்கூவாரில் ஜப்பானிய ரெஸ்டூரன்ட் ஒன்றில் 1039.01 டொலர் பெறுமதியான உணவுப் பண்டமும், மொன்றியலில் 893.54 டொலர் பெறுமதியான உணவுப்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மிஸ்ஸிசாகுவாவில் மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர். றோயல் வின்ட்ஸோர் மற்றும் சவுத்டவுன் வீதி என்பனவற்றிற்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் இரவு 9.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் குறித்து அறிந்து கொண்ட பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்த போது, வாகன தரிப்பிடத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சளிக்காய்ச்சல் காரணமாக சிறுவர்கள் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் கடந்த நவம்பர் மாதம் குறைந்தபட்சம் ஐந்து சிறுவர்கள் சளிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் சளிக்காய்ச்சல் பருவ காலம் கனடாவில் தீவிரமாக காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் குறைந்த வயதுடைய சிசுக்கள் மத்தியில் சளிக்காய்ச்சல் மரணங்கள் மாகாணத்தில் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கோவிட் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னரான காலத்தில் சளிக்காய்ச்சல் காரணமாக சிறுவர்கள் மத்தியில் ஏற்பட்டRead More →

Reading Time: < 1 minuteதங்கள் மகளை கனடாவுக்கு அனுப்பியதற்காக வருந்துவதாக, கனடாவில் கொலை செய்யப்பட்ட இந்திய இளம்பெண் ஒருவரின் பெற்றோர் கண்ணீர் விட்டுக் கதறியுள்ளனர். தங்கள் பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பும் ஒரு பைத்தியக்காரத்தனம் இந்தியாவில் பலருக்கும் இருக்கிறது என்கிறார் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட பவன்பிரீத் கௌர் (Pawanpreet Kaur, 21) என்னும் இளம்பெண்ணின் தந்தையான தேவிந்தர் சிங். பிள்ளைகளை முதலில் கனடாவுக்கு அனுப்பிவிட்டு, அவர்கள் மூலம் குடும்பமே கனடாவுக்கு செல்ல இது ஒரு வழி எனRead More →

Reading Time: < 1 minuteகனேடிய தேசிய கால்பந்தாட்ட அணியின் கோல் காப்பாளர் மிலான் போர்ஜானை ( Milan Borjan ) குரேஷிய கால்பந்தாட்ட ரசிகர்கள் இழிவுபடுத்தியிருந்தனர். குரேஷியின் அணியின் ஆதரவாளர்கள் போர்ஜானை மிக இழிவான வார்த்தைகளினால் தூற்றியிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை (பீபா) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கோல் காப்பாளர் போர்ஜானை இழிவுபடுத்தியமைக்காக குரேஷிய கால்பந்தாட்ட ஒன்றியத்திற்கு, சர்வதேச கால்பந்தாட்ட பேரவை அபராதம் விதித்துள்ளது. இந்த சம்பவத்திற்காக 50000 சுவிஸ்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பாடசாலை ஒன்றிற்குள் கடுமையான மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. Oakville பகுதியின் கெரத் வெப் (Garth Webb Public School on West Oak) பொது பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை வளாகத்திற்குள் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஹால்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது மூன்று பேர் காயமடைந்த நிலையில் இருப்பதனை அவதானித்துள்ளனர். இந்தRead More →

Reading Time: < 1 minuteபிரித்தானியாவின் முன்னாள் மகாராணி இரண்டாம் எலிசபத்தை கௌரவிக்கும் வகையில் கனடாவில் புதிய நாணயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு டொலர் பெறுமதியான நாணயக் குற்றியில் மகாராணியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு என பொறிகப்பட்டுள்ள இந்த நாணயம் இந்த மாத இறுதியில் புழக்கத்தில் விடப்பட உள்ளது. பிரித்தானிய மகாராணியின் மறைவினை நினைவு கூரும் வகையில் நாணயத்தினை சுற்றி கறுப்புநிற வளையமொன்றுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாணயத்தின் ஒரு பக்கம் மறைந்த மகாராணியின் தலையும்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய மத்திய வங்கி தனது வட்டி வீதத்தினை அரை வீதத்தினால் இன்று உயர்த்தியுள்ளதாக (Dec 7, 2022) அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இன்றுமுதல் மத்திய வங்கியின் வட்டிவிகிதம் 4.25% ஆக உயர்வடைகின்றது. பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு உயர்வடைந்துள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பணவீக்கத்திற்கு எதிரான போரில் மத்திய வங்கி இந்த ஆண்டு 7 வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது எதிர்வரும்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தின் கோர்ன்வெல் பகுதியில் சிறிய விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. கோர்ன் வெல்லுக்கு அருகாமையில் 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. The Cessna 150 என்ற சிறிய விமானம் இவ்வாறு விபத்துக்குளானதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விமானத்தில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானத்தில் பயணம் செய்த 26 வயதான நபர் ஆபத்தான நிலையில் விமானம் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பிRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் இட்டாபிகொக் பகுதியில் துப்பாக்கி முனையில் செல்போன்களை களவாடிய நபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஹமில்டனைச் சேர்ந்த 26 வயதான அன்ட்றூ பால்மர் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இட்டாபிகொக்கின் குயின்ஸ்வே மற்றும் கிப்லிங் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள செல்போன் கடையொன்றில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகக் கவசம் மற்றும் கையுறை என்பனவற்றை அணிந்த குறித்த நபர் கடைக்குள் சென்று பணியாளர்களை மிரட்டி பல செல்போன்களைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக மின்சாரக் கட்டணத்தை அறவீடு செய்த நிறுவனம் அதனை மீளச் செலுத்த தீர்மானித்துள்ளது. ஒன்றாரியோ சக்திவள நிறுவனமான Elexicon Energy Inc என்ற நிறுவனம் இவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு மீள பணத்தை செலுத்த உள்ளது. வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதலாக அறவீடு செய்யப்பட்ட 2.6 மில்லியன் டொலர்களை இவ்வாறு மீளச் செலுத்த தீர்மானித்துள்ளது. டர்ஹம் பிராந்தியத்தைச் சேர்ந்த 173000 வாடிக்கையாளர்களிடம் இவ்வாறு கூடுதலாக அறவீடு செய்யப்பட்ட கட்டணம் மீளச் செலுத்தப்பட உள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஒண்டாரியோ ஹமில்டனின் பாடசாலைகளில் முக கவசம் அணியும் நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹமில்டன் பொது பாடசாலை சபையினால் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக கவசம் அணிந்து பாடசாலைக்கு வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹமில்டனின் வென்ட்வோர்த் மாவட்ட பாடசாலை சபையின் உறுப்பினர்கள் தற்காலிக அடிப்படையில் இந்த முக கவச நடைமுறையை அறிமுகம் செய்ய பரிந்துரை செய்துள்ளனர். வென்ட்வோர்த் பாடசாலைகளில் இந்த முக கவச நடைமுறைRead More →