Reading Time: < 1 minuteஉக்ரைன் போருக்குத் தப்பி புதுவாழ்வைத் துவங்குவதற்காக அகதியாக கனடா வந்த சிறுமி ஒருத்தி, வாழ்வு துவங்கும் முன் விபத்தொன்றில் பரிதாபமாக பலியாகியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை காலை, மொன்றியலிலுள்ள Ville-Marie பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டிருந்திருக்கிறாள் மரியா (Maria Legenkovska, 7) என்ற சிறுமி. மரியா, உக்ரைன் போருக்குத் தப்பி, தன் தாய் மற்றும் சகோதரிகளுடன் கனடாவுக்கு அகதியாக வந்த ஒரு சிறுமியாவார். அவளது தந்தை இன்னமும் உக்ரைனில் ரஷ்யப்Read More →

Reading Time: < 1 minuteறொரன்டோவில் தொடாச்சியாக வாடகை உயர்வடைந்து செல்லும் நிலையை அவதானிக்க முடிகின்றது. கனடாவின் வாடகை சந்தையில் அதிகூடிய வாடகை கொண்ட இரண்டாவது நகரமாக றொரன்டோ காணப்படுகின்றது. கனடா முழுவதிலும் வாடகைத் தொகை 12 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. சராசரியாக வீட்டு வாடகைத் தொகை 2024 டொலர்களாக பதிவாகியுள்ளது. மாதாந்த மற்றும் வருடாந்த அடிப்படையில் தொடர்ச்சியாக அதிகளவில் வாடகைத் தொகை அதிகரிக்கும் இரண்டு நகரங்களாக வான்கூவார் மற்றும் றொரன்டோ ஆகியன பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டுடன்Read More →

Reading Time: < 1 minuteநாட்டில் பல மக்கள் மின்சாரம், வெப்பம் அல்லது ஓடும் நீர் இல்லாத குளிர்காலத்தை எதிர்கொள்வதால், உக்ரைனின் அடிப்படைக் கட்டமைப்பை மீண்டும் கட்டமைக்க உதவுவதற்காக கனடா $115 மில்லியன் வழங்குகிறது. நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட்(Chrystia Freeland), பாரிஸில் நடைபெறும் சர்வதேச உறுதிமொழி மாநாட்டில், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கங்கள் தங்கள் உறுதிமொழிகளை வழங்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட உள்ளார். ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய பொருட்களின் இறக்குமதியின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாழும் ஆசையிலிருக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது, கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு. 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சூப்பர் விசா திட்டம், கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள், தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியையும் தங்களுடன் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு தங்கவைக்க அனுமதி அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. அதே நேரத்தில், பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிக்காக ஆண்டுதோறும் மருத்துவக் காப்பீட்டுக்கு கட்டணம்Read More →

Reading Time: < 1 minuteறொரன்டோவில் போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. றொரன்டோ பொது சுகாதார திணைக்களம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக மித மிஞ்சிய அளவில் போதைப் பொருள் பொருட்களை பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 5ம் திகதி முதல் 11ம் திகதி வரையில் அதிக அளவில் போதைப் பொருள் பயன்படுத்திய காரணத்தினால் ஒன்பது மரணங்கள் சம்பவித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. போதைப் பொருட்களை புகைப்பதனால்Read More →

Reading Time: < 1 minuteறொரன்டோ பெரும்பாக பகுதியில் பத்து சென்றிமீற்றர் அளவில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கனேடிய சுற்றாடல் திணைக்களம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. கனடாவை தாக்கும் பனிப்புயல் நிலைமையினால் றொரன்டோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 70 கிலோ மீற்ற என்ற வேகத்தில் காற்ற வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. யோர்க், டர்ஹம், பீல், ஹால்டன் மற்றும் தென் ஒன்றாரியோ பிராந்தியங்களிலும் கடுமையான பனிப்பொழிவு மற்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மேரி நக் (mary ng) பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். அமைச்சருக்கான நெறி முறைகளை மீறி தனிப்பட்ட நண்பருக்கு சார்பாக செயற்பட்டமைக்காக அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார். நண்பரின் நிறுவனமொன்றுக்கு ஒப்பந்தங்களை வழங்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அமைச்சர் மேரி ஒப்புக்கொண்டுள்ளார். ஊடக மற்றும் தொடர்பாடல் பயிற்சி வழங்குதல் தொடர்பிலான ஒப்பந்தம் நண்பரான அமென்டா அல்வாரோவின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மற்றும்Read More →

Reading Time: < 1 minuteசீரற்ற காலநிலை காரணமாக கனடாவின் சில பகுதிகளின் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பனிப்புயல் தாக்கம் காரணமாக நோவா ஸ்கோட்டியா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு போன்ற பகுதிகளின் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும், 40 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 40மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யும்Read More →

Reading Time: < 1 minuteறொரன்டோவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் 73 வயதான பெண் கொல்லப்பட்டுள்ளார். சைனாடவுன் ஸ்பெடினா மற்றும் டுன்டாஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதசாரி ஒருவரின் மீது வாகனம் மோதுண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும், உயிர் காப்பு உதவியாளர்களும் காயமடைந்த பெண்ணுக்கு முதலூதவி வழங்க முயற்சித்துள்ளனர். எனினும் வாகனம் மோதுண்டு ஏற்பட்ட காயங்களினால் சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். 56 வயதான நபர் ஒருவரே வாகனத்தைச்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மணிக்கு 234 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனத்தைச் செலுத்திய சாரதியொருவரை பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர். கனடாவின் மார்க்கம் பகுதியின் வீதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு தடவைகள் இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை மீறி வாகனம் செலுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மார்க்கமின் 404ம் இலக்க மற்றும் 407ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலைப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சாரதிக்கு 30 நாட்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாடகை வீட்டில் வசிக்கும் குறைந்த வருவாய் கொண்டவர்களுக்கு அரசு ஒரு உதவியை அறிவித்துள்ளது. திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் உதவி நேற்று, அதாவது,திங்கட்கிழமை முதல், கனடாவில் வாடகை வீட்டில் வசிக்கும் குறைந்த வருவாய் கொண்டவர்களுக்கு அரசு 500 டொலர்கள் உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. யார் இந்த உதவித்தொகையை பெற தகுதியுடையவர்கள்? இந்த உதவித்தொகையைப் பெற விரும்புவோர், குறைந்தபட்சம் 15 வயதுடையவர்களாகவும், 2022ஆம் ஆண்டில், தங்கள் 2021ஆம் ஆண்டின் வருவாயில் 30Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கிறிஸ்மஸ் மரங்களுக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மாற்றம் காரணமாக கிறிஸ்மஸ் மர செய்கைக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் அதிக எண்ணிக்கையில் இந்த மரங்கள் வளர்க்கப்படுகின்றன. சாதாரணமாக விற்பனை செய்யப்படக்கூடிய ஓர் மரமானது 8 முதல் 12 ஆண்டுகள் வரையில் வளர்க்கப்பட வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மாற்றத்தினால் தற்பொழுது கிறிஸ்மஸ் மரங்களை செய்கை செய்வதில் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மாகாண முதல்வர்கள், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்திக்க கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர். கூட்டாக இணைந்து இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சுகாதார செலவுகளை பகிர்ந்து கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது. சுகாதார பராமரிப்பு செலவுகளை மேலதிகமாக ஏற்றுக் கொள்ள முடியாது என மாகாண முதல்வர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். சில மாகாணங்களில் வரவு செலவுத் திட்டத்தில் சாதக நிலையை காணப்பட்டாலும் மேலதிக சுமையைRead More →