Reading Time: < 1 minuteகனடாவில் பணவீக்கம் மிகச் சிறிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நவம்பர் மாதம் பணவீக்கம் 6.8 வீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னைய ஒக்ரோபர் மாதம் பணவீக்கம் 6.9 வீதமாக காணப்பட்டது. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. மளிகைப் பொருட்களுக்கான விலை தொடர்ந்தும் உயர்வடைந்து செல்லும் நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் மளிகைப் பொருட்களுக்கான விலை 11.4 வீதத்தினால்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வெளிநாட்டவர்கள் வீடுகளை கொள்வனவு செய்வதற்கு தடை விதிக்கப்ப்பட உள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த தடை உத்தரவு அமுல்படுத்தப்பட உள்ளது. கனடாவின் வீட்டு அடைமானம் மற்றும் வீட்டு வசதி அமைப்பினால் இது குறித்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு கனடாவில் வீடுகளை கொள்வனவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 23ம் திகதி இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் 2021க்கு பின்னர் தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 2.7 மில்லியன் டொலர் தொகையை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை, தீவிரமாக மற்றும் நிரந்தரமாக பாதிக்கப்பட்ட 50 பேர்கள் இழப்பீடு கோரியுள்ளதாகவும், அவர்களது கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஜூன் முதல் 2022 டிசம்பர் 1 வரையில் இழப்பீடு கோரி 1,299 பேர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 209 பேர்களின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது. 221 பேர்களின் கோரிக்கை முழுமையாகRead More →

Reading Time: < 1 minuteவான்கூவார் விமான நிலையத்தின் சர்வதேச விமான சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு இந்த வரையறை நீடிக்கும் என விமான நிலையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பனிப்புயல் காரணமாக விமான நிலையத்தில் சேவைகளை வழங்குதில் கடுமையான தாமத நிலை உருவாகியுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் விமான பயணங்கள் அதிகளவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச விமானங்கள் விமான நிலையத்தில் தரையிறங்குவது தற்காலிக அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் கரையோரப் பகுதியில் கடுமையானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சுமார் 215 வாகனங்கள் கொள்ளையிட்ட கும்பல் ஒன்றின் 51 பேரை பொலிஸார் கைது ச்ச்யதுள்ளனர். றொரன்டோ பெரும்பாக பகுதியில் இவ்வாறு திட்டமிட்ட அடிப்படையில் வாகனங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இவ்வாறு கொள்ளையிடப்பட்ட 215 வாகனங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்வாறு களவாடப்பட்ட வாகனங்களின் மொத்த பெறுமதி 17 மில்லியன் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாகன கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட 51 பேருக்கு எதிராக 150 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. சந்தேக நபர்களிடமிருந்து 15Read More →

Reading Time: < 1 minuteசிறார்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் Strep A தொற்று கனடாவில் தீவிரமாக அதிகரித்துவருவதாக மருத்துவ சமூகம் அச்சம் தெரிவித்துள்ளது. ஒன்ராறியோ பொது சுகாதார அமைப்பு இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் உறுதி செய்துள்ளது. மட்டுமின்றி, மாண்ட்ரீலில் உள்ள சுகாதார அதிகாரிகள், இந்த தொற்று தொடர்பில் அறிகுறிகள் காணப்பட்டால் கூடுதல் கவனம் கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். டிசம்பர் 15 வரையில் மாண்ட்ரீலில் நான்கு சிறார்கள் StrepRead More →

Reading Time: < 1 minuteகனடிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு e-visa வசதிகளை இந்திய அரசாங்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. Ottawaவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இதற்கான அறிவித்தலை வெளியிட்டது. செவ்வாக்கிழமை (20) முதல் இணையதளத்தின் ஊடான இந்த சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம்அறிவித்துள்ளது. சுற்றுலா, வணிகம், மருத்து நோக்கங்களுக்காக இந்தியாவிற்கு பயணிக்க விரும்பும் கனடிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர் e-visa விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை COVID தொற்று காரணமாக கனடாRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நபர் ஒருவர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி படுகொலை செய்ததாக, எட்டு சிறுமிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்ட சிறுமிகளில் மூன்று பேர் 13 வயதான சிறுமிகள் உள்ளடங்குவதாகவும், ஏனையர்கள் பதின்ம வயதினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. யோர்க் வீதி மற்றும் யுனிவர்சிட்டி வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 59 வயதான நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நபர் மீதுRead More →