ஒன்றாரியோ மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்!
Reading Time: < 1 minuteஒன்றாரியோ மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த எச்சரிக்கையை மக்களுக்கு விடுத்துள்ளனர். மாகாணம் முழுவதிலும் மோசமான காலநிலை நிலவி வருவதாகவும் இதனால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை எவ்வளவு துரித கதியில் மாற்றம் பெறுகின்றது என்பதனை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →