Reading Time: < 1 minuteகனடாவில் இன்னும் 1 மில்லியன் வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் திறமையான புலம்பெய்ர்ந்தோருக்கு இது அரிய வாய்ப்பு எனவும் வீட்டுவசதி அமைச்சர் அகமது ஹசென் தெரிவித்துள்ளார். நாட்டின் கட்டுமானத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும், குடியிருப்புகளின் தேவை உயர்ந்துள்ளதால் திறமையான புலம்பெயர்ந்தோருக்கு இது அரிய வாய்ப்பு எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தற்போது வரையில் 1 மில்லியன் வேலைவாய்ப்புகள் கனடாவில் நிரப்பப்படாமல் உள்ளது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஹசென், இதனால் கனடாவுக்கு புலம்பெயர்ந்தோர்கள், தொழில் திறமைRead More →

Reading Time: < 1 minuteஈரான் மீது கனடா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் பிரயோகித்துள்ளன. பயணிகள் விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்திய சம்பவம் தொடர்பிலான சர்ச்சை இன்னமும் தொடர்கின்றது. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் 176 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பில் ஈரான் நடுவர் தீர்ப்பாயம் ஒன்றின் விசாரணைகளுக்கு இணங்க வேண்டுமென கனடா, பிரிட்டன், சுவீடன் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் கோரியுள்ளன. வர்த்தக விமானங்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் குடும்பம் ஒன்று, யார் என்ற தெரியாத 10 பேரை வீட்டுக்கு அழைத்துச் சென்று உபசரித்துள்ளனர். ஒன்றாரியோவை அண்மையில் பனிப் புயல் தாக்கிய போது நிர்க்கதியான பத்து பேருக்கு இவ்வாறு உபசரிப்பு அளிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு, விமான பயணங்கள் ரத்து, விபத்துக்கள் என மக்கள் இந்தப் பணிபுயல் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டது. ஒன்றாரியோவின் பிளன்ஹிம் பகுதியைச் சேர்ந்த டெனி வெர்வெயிட் குடும்பத்தினர்,Read More →

Reading Time: < 1 minuteகனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ விடுமுறையை கழிக்கும் கரீபியன் தீவுகளின் ஜமெய்க்காவில் அவசர கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கோஷ்டி மோதல் சம்பவங்கள் காரணமாக அந்த நாட்டின் பல பகுதிகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டிருந்தது. பதற்ற நிலை தொடர்ந்தும் நீடிக்கும் காரணத்தினால் அவசரகால நிலை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கிங்ஸ்டன் உள்ளிட்ட ஆறு முக்கிய பகுதிகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ம் திகதி முதல் பிரதமர் ட்ரூடோ குடும்பம் ஜமெய்க்காவில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒரே ஆண்டில் இரண்டு இரட்டைக் குகழந்தைகளை பெற்றெடுத்த தம்பதியினர் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பிரம்டனைச் சேர்ந்த நிக்கலோசன் – ரேவா தம்பதியினரே இவ்வாறு இரண்டு இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். இந்த இரண்டு இரட்டைக் குழந்தைகளும் இந்த 2022ம் ஆண்டுடில் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகளை ரேவா ஈன்னெடுத்தார். இந்த குழுந்தைகளுக்கு கய்ரா மற்றும் சாமார்Read More →

Reading Time: < 1 minuteசீன கோவிட் நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானிப்பதாக கனடா அறிவித்துள்ளது. சீனப் பிரஜைகள் கோவிட் பரிசோதனையின் பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர் என்ற அமெரிக்காவின் நடைமுறையை தற்போதைக்கு பின்பற்றப் போவதில்லை என தெரிவித்துள்ளது. அண்மைய நாட்களில் கனடாவில் கோவிட் குறித்த பயணக் கட்டுப்பாடுகள் பாரியளவில் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் சீனாவில் தொடர்ச்சியாக கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில், கனடாவின் பொதுச் சுகாதார அலுவலகம் இது குறித்து அறிவித்துள்ளது. கோவிட்Read More →

Reading Time: < 1 minuteபிறக்கவிருக்கும் புத்தாண்டில் கனடாவில் குடியிருப்புகளின் விலை சரிவடைய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாடகைதாரர்கள் தொடர்பில் பேரிடியான தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் குடியிருப்புகளின் விலையில் சரிவு காணப்படும் என சந்தை தொடர்பான ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஆனால், 2022 போன்று வாடகை கட்டணங்கள் மேலும் இறுக்கமடையும் என்றே நிபுணர்கள் கணித்துள்ளனர். கனடாவிலேயே இரண்டாவதாக மிக அதிகம் வாடகை வசூலிக்கப்படும் பகுதி ரொறன்ரோ. இங்கு ஒற்றை படுக்கையறை கொண்ட வீட்டுக்கு சராசரியாக இந்த டிசம்பரில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து கரிசனை வெளியிடப்பட்டுள்ளது. பொலிஸார் அதிகளவில் துப்பாக்கிச் சூடுகளை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு முதல் இதுவரையில் இடம்பெற்ற பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 25 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப் பகுதியில் கனடாவில் பொலிஸாரினால் மொத்தமாக 87 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 46 மரணங்கள் சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த துப்பாக்கிச்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மொன்றியலில் ஆண் மற்றும் பெண் ஒருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கொலை மற்றும் தற்கொலைச் சம்பவமாக இது அமைந்திருக்க கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மொன்றியல் நகரின் கிழக்கு பகுதியின் நொட்ரே டேம் அவன்யூ பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இருவரும் 45 வயதினை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தீ விபத்துக்குள்ளான நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும்Read More →

Reading Time: < 1 minuteகோவிட் சட்டங்களை மீறிய கனேடியர்களுக்கு இந்த ஆண்டு சுமார் 15 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோவிட்19 தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டவர்களுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கனேடிய பொதுச் சுகாதார திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. கோவிட் குறித்த பல்வேறு சுகாதார கட்டுப்பாடுகளை கனடா இந்த ஆண்டு தளர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கோவிட் தடுப்பூசி ஏற்றுகை, அரைவ் கன் செயலி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுகாதார தரப்பினர் கடுமையானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பனிப்புயல் காரணமாக நகரமொன்று முழுமையாக உறைந்து போயுள்ளது. நயகராவின் சிறிய நகரமொன்று முற்று முழுதாக உறைந்து போயுள்ளது. பனிப்புயல் காரணமாக இந்த நகரை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வீடுகளின் கூரைகள், வாகனங்கள் என அனைத்து பகுதிகளிலும் பனிப்படர்ந்துள்ளது. Fort Erie நகரின் கிறிஸ்டல் பீச் பகுதி இவ்வாறு பனிப்புயலினால் உறைந்து போயுள்ளது. இவ்வாறான மோசமான காலநிலையை அண்மைய காலங்களில் தாங்கள் எதிர்நோக்கியது கிடையாது என பிரதேசRead More →

Reading Time: < 1 minuteகனடா பிரம்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். பெல்மொரால் ட்ரைவ் டோர்ப்ராம் வீதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. ஒரு வாகனத்தில் மூன்று பேர் பயணித்துள்ளதாகவும் மற்றைய வாகனத்தில் ஒருவர் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரதான விமான நிலையங்களில் ஒன்றான பியர்சன் விமான நிலையத்தின் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பல பயணிகளது பயணப் பொதிகள் தொலைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுமையான குளிருடனான காலநிலையினால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். சில பயணிகள் தங்களது பயணப் பொதிகளுக்காக சில நாட்கள் காத்திருக்க நேரிட்டுள்ளது. பயணிகளின் பொதிகளை காவிச் செல்லும் இயந்திரப் பட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு பயணப்Read More →