Reading Time: < 1 minuteகனடாவின் யோர்க் பிராந்தியத்தின் நியூமார்க்கட் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். டேவிஸ் ட்ரைவ் மற்றும் கெலி வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது. அருகாமையில் அமைந்துள்ள பண்ணையொன்றிலிருந்து சில குதிரைகள் தப்பித்து வீதியில் இறங்கியுள்ளன. வேகமாக பயணம் செய்த வாகனம் குதிரைகளில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துச் சம்பவத்தில் 60 வயதான நபர் ஒருவர் உயரிழந்துள்ளார். சில குதிரைகள் மீது மோதுண்ட வாகனம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கலைப் பொக்கிஷமொன்றின் மீது மேபல் சிரப் வீசி நூதன முறையில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் எண்ணெய் குழாய் திட்டம் முன்னெடுக்கப்படக் கூடாது எனக் கோரி இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. புகழ்பூத்த ஓவியர் எமலி காரின் (Emily Carr) ஓவியம் மீது மேபல் சிரப் வீசி எறியப்பட்டுள்ளது. வான்கூவார் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள “Stumps and Sky” என்ற பிரபல்யமான ஓவியம் மீது இவ்வாறு மேபல் சிரப் வீசி எறியப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகம்போடியாவிற்கும் லாவோசிற்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக கனடா அரசாங்கம் உறுதி வழங்கியுள்ளது. கம்போடியாவிலும், லாவோஸிலும் நிலக்கண்ணி மற்றும் கொத்தணி குண்டுகளை அகற்றுவதற்கு உதவிகள் வழங்குவதாக கனடா அறிவித்துள்ளது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். சுமார் ஒரு மில்லியன் டொலர் உதவி வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். விட்னாம் சிவில் யுத்தம் மற்றும் உள்நாட்டு சிவில் போர்கள் காரணமாக கம்போடியாவில் நிலக்கண்ணி வெடிகள் மற்றும் கொத்தணி குண்டுகள் புதைக்கப்பட்டுள்ளன. இவ்வாறானRead More →

Reading Time: < 1 minuteகனடாவிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட திடீர் மரணம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சனிக்கிழமை மாலை வேளையில் Oshawaவில் நடந்துள்ளது. இதனையடுத்து கொலை வழக்குகளை விசாரணை செய்யும் புலனாய்வு குழு அங்கு விரைந்து வந்து விசாரித்து வருகின்றனர். ஒன்ராறியோ Winlord placeல் உள்ள வீட்டில் திடீர் மரணம் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்த தகவலின் பேரில் அங்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். பொது பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை,Read More →

Reading Time: < 1 minuteஉலகில் பணி ஓய்வுக்கு பின்னர் குடியேறத்தகுந்த 50 நாடுகளில் கனடாவும் ஒன்று என ஐரோப்பிய நிறுவனம் ஒன்று தங்கள் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. குறித்த ஆய்வறிக்கையில், விலைவாசி உயர்வு, வாழ்க்கைத் தரம், விசா பெறுவதில் சிக்கலின்மை, பொழுதுபோக்குக்கான கட்டணங்கள், வாடகை, காலநிலை, சுகாதார மேம்பாடு, விருந்தோம்பல், மொழி சிக்கல் உட்பட பல காரணிகளை மொத்தமாக ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே அந்த 50 பகுதிகளை தெரிவு செய்துள்ளனர். இந்த பட்டியலில் கனடா 22வதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில், அது தொடர்பாக கனடாவின் மூத்த மருத்துவர் ஒருவர் சில ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளார். கனடாவில் ப்ளூ மற்றும் RSV என்று அழைக்கப்படும் சுவாசப்பாதையில் தொற்றை உருவாக்கும் Respiratory syncytial virus என்னும் வைரஸ் தொற்று ஆகியவை, வழக்கமான சீஸனில் இருப்பதைவிட அதிகரித்துள்ளதாக கனடாவின் பொது சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ளது. மருத்துவமனைகள் ப்ளூ, கோவிட் மற்றும் RSV வைரஸ் தொற்று காரணமாக நிரம்பி வழிந்துவரும் நிலையில்,Read More →

Reading Time: < 1 minuteட்விட்டரைத் தொடர்ந்து மெட்டா நிறுவனமும் தனது ஊழியர்கள் 11,000 பேரை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. சிலருக்கு இது செய்தி, பலருக்கு வாழ்க்கை; இதுபோல ஒரு நிறுவனம் ஆயிரக்கணக்கானவர்களை வீட்டுக்கு அனுப்பும் விடயம், பலருக்கு வெறும் செய்தியாக இருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட இழப்பின் வலி அவர்களுக்கு மட்டுமே புரியும். ஆம், அப்படி மெட்டா நிறுவனத்தால் வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்களில் ஒரு இந்தியரின் பரிதாபக் கதை இது. ஹிமான்ஷு (Himanshu V) என்னும் அந்தRead More →

Reading Time: < 1 minuteஉடல் உறுப்பு தானம் செய்வது குறித்து கனேடிய மக்கள் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. மரணத்தின் பின்னர் உடல் உறுப்புக்கள் மற்றும் உடல் திசுக்களை தானமாக வழங்குவதனை பலரும் விரும்புகின்றனர். கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 84 வீதமானவர்கள் மரணத்தின் பின்னர் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்படுவதனை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். 68 அல்லது மூன்றில் இரண்டு கனேடியர்கள் மரணத்தின்Read More →