Reading Time: < 1 minuteஈரானுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஈரானில் அண்மையில் மாஷா அம்னி என்ற யுவதி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு வெளியிடும் நோக்கில் கனேடிய அரசாங்கம், ஈரான் மீது தடைகளை விதித்துள்ளது. ஈரானின் ஒன்பது நிறுவனங்கள் மற்றும் 25 தனிநபர்கள் மீது கனடா இவ்வாறு தடைகளை அறிவித்துள்ளது. 22 வயதான மாஷா அம்னிRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக் மாகாண தேர்தலில் தற்போதைய முதல்வர் பிரான்கோயிஸ் லெகார்ட் இரண்டாவது அபார வெற்றியை பதிவு செய்துள்ளார். பெரும்பான்மை பலத்துடன் லெகார்ட்டின் Coalition Avenir Québec (CAQ) கட்சி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பணவீக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கும் முன்னுரிமை அளிக்கப் போவதாக வெற்றியின் பின்னர் அவர் மக்களிடம் தெரிவித்துள்ளார். மாகாண மக்கள் தெளிவான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளதாக அவர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு பல மணி நேரம் மூடப்பட்டிருந்த அம்பாசிடர் பாலமானது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் இருந்து அமெரிக்காவை இணைக்கும் அம்பாசிடர் பாலத்தில், ஒரு வாகனத்தில் காணப்பட்ட மர்ம பொதி தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் வின்ட்சர் காவல்துறை முதன்முதலில் குறித்த நடவடிக்கை தொடர்பில் சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்தது. கனேடியப் பகுதியில் உள்ள பாலம்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய பெண் ஒருவர் காப்பீடு தொடர்பான உதவி ஒன்றிற்காக அரசு அலுவலகம் ஒன்றை அழைத்துள்ளார். அவர் 2019ஆம் ஆண்டே இறந்துபோனதாக ஆவணங்களில் பதிவாகியுள்ளதாக அந்த அரசு அலுவலர் தெரிவித்துள்ளார். Saskatchewanஇல் வாழும் Coreen Shatz, காப்பீடு தொடர்பான உதவி ஒன்றிற்காக அரசு அலுவலகம் ஒன்றை அழைத்துள்ளார். மறுமுனையில் அவருக்கு பதிலளித்தவர் கூறிய விடயத்தால் அதிர்ச்சியில் உறைந்துபோனார் அவர். ஆம், அரசு ஆவணங்களின்படி, 2019ஆம் ஆண்டு, ஜூலை மாதமே Coreen இறந்துபோனதாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக் மாகாணத்தில் இன்றைய தினம் தேர்தல் நடைபெறுகின்றது. மாகாண அரசாங்கத்தை தெரிவு செய்யும் நோக்கில் இன்றைய தினம் கியூபெக் மாகாண மக்கள் வாக்களிக்க உள்ளனர். கடந்த ஐந்து வாரங்களாக மாகாண அரசியல்வாதிகள் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் காலை 9:30 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்காளர்கள் தங்களது வாக்குகளை அளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தல் நடைபெறும்Read More →

Reading Time: < 1 minuteஈரானில் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி வேண்டி கனடாவில் ஆயிரக்கணக்கானவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். நேற்றைய தினம் ஒன்றாரியோவின் ரிச்மண்டில் பகுதியில் பெரும் எண்ணிக்கில்லான மக்கள் அணி திரண்டு ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஈரானைச் சேர்ந்த பெண் ஒருவர் உரிய முறையில் ஹிஜாப் அணிய தவறியதாக கூறி அந்நாட்டு அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்திருந்தனர். இவ்வாறு பெண் கைது செய்யப்பட்ட விவகாரம்Read More →

Reading Time: < 1 minuteரஸ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் தீர்மானத்திற்கு கனேடிய அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. உக்ரைனின் சில பகுதிகளில் ரஸ்யா பொதுவாக்கெடுப்பு நடாத்துவது குறித்து கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட போரில் ரஸ்யா தோல்வியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தோல்வியை மூடி மறைத்துக் கொள்ள தனது வரைபடத்தை மீளப் புதுப்பித்துக்கொள்ள ரஸ்யா முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். உக்ரைனின் நான்கு பிராந்தியங்களைச் சேர்ந்தRead More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோவில் உள்ள குறைந்தபட்ச ஊதியத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஊதிய உயர்வை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஊதியம் 50 சென்ட் அதிகரிப்பு செய்யப்படுவதுடன் குறைந்தபட்ச ஊதியம் 15.50 டொலராக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 18 வயதிற்குட்பட்ட மாணவர்களும் 50 சென்ட் அதிகரிப்பு செய்யப்படுவதுடன், அவர்களுக்கு 14.60 டொலர் ஊதியம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த இந்தRead More →

Reading Time: < 1 minuteரஷ்யா, உக்ரைன் போருக்காக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டுவருகிறது. ரஷ்யாவில் வாழும் இரட்டைக் குடியுரிமை கொண்டோர் ரஷ்ய இராணுவத்தில் கட்டாயத்தின் பேரில் சேர்க்கப்படும் அபாயம் உள்ளதால், உடனடியாக அவர்களை வெளியேறுமாறு கனடா அரசு வலியுறுத்தியுள்ளது. ரஷ்யாவில் வாழும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு கனடா அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் போருக்காக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டுவருகிறது. கட்டாயத்தின்பேரில் ரஷ்யர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். போருக்குச் செல்ல விருப்பமில்லாத ரஷ்யர்கள் நாட்டைRead More →