Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்ராறியோவில், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்களை ஏமாற்றும் ஒரு கும்பல் ஒரு நூதன மோசடியில் ஈடுபட்டுவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ரொரன்றோவைச் சேர்ந்த Saja Kilaniயிடம் ஒரு பையன் ஒரு உதவி கேட்டுள்ளான். தான் டெக்சியில் வந்ததாகவும், டெக்சி சாரதி கட்டணத்தொகையை பணமாக பெற மறுப்பதாகவும், கிரெடிட் கார்டு மூலம் மட்டுமே தொகையைப் பெறுவேன் என கூறிவிட்டதாகவும், தன்னிடம் கிரெடிட் கார்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஷாம்பூ வகைகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கபபட்டுள்ளது. இவ்வாறு ஆபத்து நிறைந்த ஷாம்பூ உள்ளிட்ட தலை மயிர் பராமரிப்பு பொருட்கள் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய சுகாதாரத் திணைக்களம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஷாம்பூ, கண்டிஷனர், ஹேர் ஆயில் போன்றவற்றில் இந்த நச்சுப் பொருள் கலந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நச்சுப் பொருளின் ஊடாக புற்றுநோய் ஏற்படக்கூடிய ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் குயின் எலிசபத் அதிவேக நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருந்த வாகனமொன்றின் சக்கரம் திடீரென கழன்று வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பிக்கப் ரக வாகனமொன்றில் பயணம் செய்த 77 வயதான நபர் ஒருவர் வாகன சக்கரம் வாகனத்தில் மோதியதனால் விபத்துக்கு உள்ளாகியுள்ளார். மிஸ்ஸிசாகுவா மற்றும் ஓக்வெலி எல்லைப் பகுதியின் வின்ஸ்டன் சேர்ச்சில் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வாகனத்தின் சக்கரம் கழன்று வீழ்ந்ததனை வாகனம் செலுத்தி வந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் பொலிசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. வீடு ஒன்றில் இருந்து நபர் ஒருவர் பொலிசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். சம்பவம் ஒன்று தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் டொரன்டோ போலீசார் எக்லின்டன் மற்றும் கென்னடி வீதிகளுக்கு அருகாமையில் இருந்த வீடு ஒன்றிற்கு சென்றுள்ளனர். இவ்வாறு அந்த வீட்டிற்கு சென்றபோது பொலிசார் மீது வீட்டினுள் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் வேறு எவரும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் தனது 85ம் வயதில் பட்டம் பெற்று மூதாட்டியொருவர் அசத்தியுள்ளார். ஒன்றாரியோவின் மார்க்கம் பகுதியைச் சேர்ந்த இந்த மூதாட்டி அண்மையில் யோர்க் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுக்கொண்டார். ஹோர்டனிஸ் வெலாரி என்கிலின் (Hortense Valerie Anglin)என்ற மூதாட்டியே கலைத்துறையில் இளங்கலை பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் ஒவ்வொரு பயணத்தையும் அனுபவித்து ரசித்த்தாகவும், இந்த தருணம் அர்த்தபூர்வமானதும், ஆனந்தமானதுமான தருணம் எனவும் அவர் பட்டம் பெற்றுக் கொண்டதன்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவில் கனேடியர் ஒருவருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பிற்கு ஆட்களை திரட்டியதாக இந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் சிரியாவில் சுமார் ஆறுக்கும் மேற்பட்ட அமெரிக்கா மற்றும் கனேடியர்களை தீவிரவாத இயக்கத்தில் இணைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அப்துல்லாஹி அஹமட் அப்துல்லாஹி என்பவரே தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. சிரியாவில் கடத்தல் மற்றும் படுகொலைகளைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் பற்றிய தகவல்களை வழங்கினால் இரண்டரை லட்சம் டாலர் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் மிகவும் தேடப்பட்டு வரும் நபராக குறித்த குற்றவாளி அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். லிட்டில் இத்தாலி என்னும் பகுதியின் ◌ஹோட்டல் ஒன்றில் கடந்த 2018 ஆம் ஆண்டு துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராபிப் அலாகில் Rabih Alkhalil என்ற நபரை இவ்வாறு போலீசாரினால் தேடப்பட்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவிலுள்ள ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருக்கும் விரைவில் நிரந்தர குடியிருப்பு அனுமதி கிடைக்கச் செய்ய வகை செய்யும் திட்டம் ஒன்று கனடாவிடம் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 2021ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், கனேடிய சமுதாயங்களுக்கு பங்களிப்பைச் செய்யும் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருக்கு குடியிருப்பு அனுமதி வழங்குவதை சாத்தியமாக்கும் திட்டங்கள் குறித்து விசாரிக்குமாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau )கனேடிய புலம்பெயர்தல் மற்றும் குடியுரிமை அமைச்சரைக் கேட்டுக்கொண்டார். தற்போது, அதை சாத்தியமாக்க முடியுமாRead More →

Reading Time: < 1 minuteஉலகின் மிகச்சிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான புக்கர் விருது (Booker Prize) மேடையில் நேற்றுத் தமிழ் ஒலித்தது. இலங்கையரான ஷெஹான் கருணாதிலக (Shehan Karunatilaka) இம்முறை இந்த விருதுக்குத் தெரிவாகியிருந்தார். அவரது உரையின் இறுதி வரிகளில் “இலங்கை சொந்தங்களே, நாம் எமது கதைகளைக் கூறுவோம். கூறிக்கொண்டே இருப்போம்” எனத் தமிழிற் கூறி முடித்தார். அதற்கு முன்னர் சிங்களத்திற் சில வரிகளை அவர் தனது உரையிற் சேர்த்திருந்தார். அவரது நன்றியுரை ஆங்கிலத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் உணவுப்பொருட்களின் விலைகள் பாரியளவில் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் நிலையில், மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் முதனிலை மளிகைப் பொருள் விற்பனை நிறுவனமான லொப்லோவ் (Loblaws) இவ்வாறு பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி வரையில் சுமார் 1500 பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் சராசரியாக உணவுப் பொருட்களின் விலைகள் 10 வீதமாக உயர்வடைந்துள்ளதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாழும் 1.4 மில்லியன் கனேடியர்களுக்கு கோவிட் 19 அறிகுறிகள் நீண்ட நாட்களாக தென்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கயேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மிக நீண்ட நாட்களுக்கு நோய் அறிகுறி தென்படுவதாக இந்த கருத்து கணிப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர். கனேடிய பொது சுகாதார முகவர் நிறுவனத்தின் தகவல்களை உள்ளடக்கி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோவிட் தொற்று உறுதியாகி மிக நீண்ட காலங்களுக்கு ஒரு சிலருக்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள Laval நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஏதோ பிரச்சினை என தகவல் கிடைத்ததையொட்டி பொலிசார் அங்கு விரைந்துள்ளனர். திங்கட்கிழமை மாலை 6.00 மணியளவில் அவர்கள் அந்த வீட்டுக்கு விரைந்தபோது, சுயநினைவற்ற நிலையில் இரு பிள்ளைகளும் ஒரு ஆணும் கிடப்பதைக் கண்டு, அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அவர்களில், 13 வயது பெண் மற்றும் 11 வயது பையன் ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் Saskatchewan மாகாண பிரீமியரான Scott Moe, தங்கள் மாகாணத்துக்கு அதிக எண்ணிக்கையில் புலம்பெயர்ந்தோர் வேண்டும் என்று கூறியுள்ளார். Saskatchewan மாகாண புலம்பெயர்தல் அமைச்சரான Jeremy Harrison ஏற்கனவே பெடரல் அரசுக்கு ஒரு ஆவணத்தை அனுப்பியுள்ளதாகவும், அதில், தங்கள் மாகாண புலம்பெயர்தலை தாங்கள் கட்டுப்படுத்த விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக Scott Moe தெரிவித்தார். முதலாவது, எங்களுக்கு கூடுதல் புலம்பெயர்ந்தோர் வேண்டும், இரண்டாவது, புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்ளும் நடைமுறையின்மீது நாங்கள் கூடுதல் தாக்கம் செலுத்தRead More →