Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் வீடு கொள்வனவு செய்ய காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. வீடு கொள்வனவு செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளிடம் இதுவரையில் அறவீடு செய்யப்பட்டு வந்த வரித் தொகை 20 வீதம் எனவும், இந்த தொகை 25 வீதமாக உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாண நிதி அமைச்சர் பீட்டர் பீதென்பெவ்லி இந்த வரி அதிகரிப்பு குறித்து அறிவித்துள்ளார். முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி கடந்த மார்ச் மாதம் 15 வீதமாகRead More →

Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ(Justin Trudeau) அவர்கள் நேற்று கனடடிய மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த செய்தியில் தானும் தனது மனைவி சோபியும் இனிய தீபாவளியை தெரிவித்து கொள்வதாகவும்-தெற்காசிய இந்து மக்கள் கனடாவுக்கு செய்துள்ள சேவை மற்றும் பங்கையும் பாராட்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், “விளக்குகளின் கொண்டாட்டம், தீபாவளி என்பது இருளின் மீது ஒளியின் வெற்றியையும், தீமையின் மீது நன்மையையும், தவறுக்கு மேல் சரியானதையும் போற்றும் ஒருRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சீட்டிலுப்பு மூலம் மேயர் பதவிக்கு ஒருவர் தெரிவு செய்யப்பட்ட சம்வமொன்று பதிவாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் கேனல் பிளட்ஸ் (Canal Flats,) என்னும் கிராமத்தில் இவ்வாறு மேயர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேயர் பதவிக்காக போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்கள் தலா 158 வாக்குகளைப் பெற்றுக் கொண்டனர். இந்த வாக்குகள் மீளவும் எண்ணப்பட்டதுடன் அப்பொழுதும் வாக்குகள் சம அளவில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. மீள வாக்குகளை எண்ணத் தேவையில்லை எனவும் சீட்டிலுப்பு மூலம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவைச் சேர்ந்த பிரஜையொருவர் அடுத்த அடுத்த ஆண்டில் இரண்டு தடவைகள் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளார். ஒன்றாரியோவின் மில்டனைச் சேர்ந்த அன்டானியோ பெய்னி என்பவரே இவ்வாறு பரிசு வென்றுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு மில்லியன் டொலர் பரிசு வென்றெடுத்திருந்தார். அண்மையில் நடைபெற்ற லொட்டே மெக்ஸ் பரிசு சீட்டிலுப்பில் அவர் மீண்டும் பரிசு வென்றுள்ளார். இரண்டாவது தடவையாகவும் பரிசு வென்றெடுத்தமை பெரும் அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக அன்டானியோRead More →

Reading Time: < 1 minuteஈரானிய மக்களுக்கு ஆதரவினை வெளியிட்டு கனடாவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஈரானிய – கனேடிய அமைப்புக்கள் என்பன கூட்டாக இணைந்து இந்தப் போராட்டங்களையும், பேரணிகளையும் முன்னெடுத்துள்ளன. றொரன்டோ, வின்னிபிக், ஹாலிபிக்ஸ், மொன்ட்ரியல் உள்ளிட்ட கனடாவின் அநேக பகுதிகளில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஈரானிய அரசாங்கம் மாற்றுக் கொள்கைகளை பின்பற்றுவோருக்கு எதிராக கடுமையான அடக்குமுறைகளை பின்பற்றி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் மாஷாRead More →

Reading Time: < 1 minuteகனடா நோவா ஸ்கோட்டியாவின் ஹலிபக்ஸ் பிராந்தியத்தின் டர்ட்மவுத் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். போர்ட்லாண்ட் வீதிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்தில் 27 வயதான பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த குறித்த பெண்ணுக்கு உயிராபத்து கிடையாது என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் காரணமாகRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவின் கிழக்கு லண்டன் பகுதியல் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு காயமடைந்தவர்களில் இரண்டு சிறார்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு லண்டனின் வேட்ரன் நினைவுப் பூங்கா மற்றும் ஒக்ஸ்போர்ட் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறிய பஸ், கார் ஒன்று மற்றும் பிக்கப் ரக வாகனமொன்று ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் லொத்தர் சீட்டிலுப்பில் 70 மில்லியன் டொலர் பணப்பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் இந்த அதிர்ஸ்ட டிக்கட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. லொட்டோ ஜாக்பொட் லொத்தர் சீட்டிலுப்பில் சில வாரங்களாக முதல் பரிசு வென்றெடுக்கப்படவில்லை. இதனால் பரிசுத் தொகை அதிகரித்துச் சென்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சீட்டிலுப்பில் ஒருவர் 70 மில்லியன் டொலர் பரிசினை வென்றெடுத்துள்ளார். எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள சீட்டிலுப்பில் ஜாக்பொட் பரிசுத் தொகை 50Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சில்லறை வியாபாரத்தில் சாதக மாற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சில்லறை வியாபாரம் 0.7 வீதமாக அதிகரித்துள்ளது. இலத்திரனியல் வர்த்தகம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், செப்டம்பர் மாதத்தில் சில்லறை விற்பனையானது 0.5 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. பணவீக்கம் மற்றும் பொருட்களின் விலை ஏற்றம் என்பனவற்றினால் கனேடியர்கள் பொருட் கொள்வனவின் போது அதன் தாக்கத்தை நேரடியாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் றொரன்டோவில் அமைந்துள்ள பில்லி பிஸொப் என்னும் விமான நிலையமே இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டது. சந்தேகத்திற்கு இடமான பொருள் காரணமாக இவ்வாறு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெடிபொருள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒர் பொதியை கண்டு பிடித்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த சந்தேகத்திற்கு இடமான வெடிபொருள் காரணமாக பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது எனRead More →

Reading Time: < 1 minuteபிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸிற்கு விசுவாசமாக செயற்படுவதாக பதவிப் பிரமாணம் செய்ய முடியாது என கனேடிய அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர். கனடாவின் அரசியல் அமைப்பின் பிரகாரம் புதிய அரசியல்வாதிகள் பதவியில் அமர்த்தப்படும் போது பிரித்தானிய முடிக்குரியவர்களுக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதி மொழி வழங்கப்பட வேண்டும். எனினும் இவ்வாறு உறுதிமொழி வழங்க முடியாது என கியூபிக்கோ கட்சியின் சில உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாகாணசபை சட்டத்திற்கு அமைய உறுதிமொழி வழங்கி பதவிப்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் உயர்வடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக கனடாவில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கோவிட் 19 மற்றும் முடக்க நிலைமைகளினால் இவ்வாறு குடும்ப வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கனடாவில் ஒரு லட்சம் பேருக்கு 336 பேர் குடும்ப வன்முறைகளினால் பீடிக்கப்படுகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் கனடாRead More →

Reading Time: < 1 minuteஅழகி போட்டியில் வென்றால் கனடாவில் வாழும் இந்தியருடன் திருமண செய்து வைத்து அங்கேயே வாழ ஏற்பாடு செய்து தரப்படும் என்ற விளம்பரம் வெளியிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டாவில் தான் இது தொடர்பான விளம்பரங்கள் பல இடங்களில் இடம்பெற்றிருந்தன. அதில், வரும் 23ஆம் திகதி நடைபெறும் அழகி போட்டியில் வெற்றி பெறும் பெண்ணுக்கு கனடாவில் வசிக்கும் என்.ஆர்.ஐ மாப்பிள்ளையையை திருமணம் செய்து வைக்கப்படும் எனவும் பின்னர்Read More →