Reading Time: < 1 minuteகடந்தவார இறுதி நாட்களில் றொரன்டோவில் இடம்பெற்ற துப்பாக்கி வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் றொரன்டோ மேயர் ஜோன் டோரி கவலை வெளியிட்டுள்ளார். வார இறுதியில் பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் அதில் ஒருவர் உயிரிழந்திருந்தார். எல்லா வகையிலான துப்பாக்கி வன்முறைகளும் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 15 வயது சிறுவன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு மிகவும் வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சிறுவனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் புதிய அரச தலைவராக மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு குறித்த ஆவணத்தில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் ஆளுனர் நாயகம் மேரி சிமோன் ஆகியோர் கையொப்பிட்டனர். கனடாவின் அரச தலைவராக மன்னர் சார்ள்ஸை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு Rideau Hallல் நடைபெற்றது. அரச தலைவராக மன்னர் சார்ள்ஸை அறிவிக்கும் வகையில் 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன. 1957ம் ஆண்டு பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் 15 வயது சிறுவன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான். ரொறன்ரோவைச் சேர்ந்த சால்டோன் சமுதா (Shalldon Samuda) என்ற 15 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளாம்பவத்தில் உயிரிழந்துள்ளான். நோர்த் யோர்க்கின் டவுன்சீவிவ் பார்க், கெலீ வீதி மற்றும் செப்பர்ட் அவன்யூ ஆகியனவற்றிற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான். இந்தRead More →

Reading Time: < 1 minuteபிரித்தானியாவின் மகாராணி காலமானதன் காரணமாக கனேடிய நாணயங்களில் தாக்கம் ஏற்படுத்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் நாணயத் தாள்களில் பிரித்தானிய மகாராணியின் உருவம் காணப்படுகின்றது. கனடாவின் அரச தலைவராகவும் மகாராணி கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த அரச தலைவராக மகாராணியின் புதல்வர் இளவரசர் சார்ள்ஸ் கடமையாற்ற உள்ளார். இந்த பதவி மாற்றத்துடன் நாணயத் தாள்களில் உடனடி மாற்றங்கள் செய்யப்படாது என தெரிவிக்கப்படுகின்றது. 20 டொலர் நாணயத் தாள்களில் மகாராணியின் உருவப்படம்Read More →

Reading Time: < 1 minuteஎனக்கு உலகில் மிகவும் பிடித்தமானவர்களில் பிரித்தானிய மகாராணியும் ஒருவராவார் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளாக மிகச் சிறந்த வழியில் சேவையாற்றியுள்ளார் எனஅவர் புகழாரம் சூட்டியுள்ளார். இறுதியாக பிரித்தானிய மகாராணியை சந்தித்த போது அவருடன் பேசிய தருணங்கள் பசுமையான நினைவுகளாய் நீடித்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மகாராணியின் மறைவு குறித்து பிரதமர் ட்ரூடோ அமைச்சர்களுக்கு அறிவித்துள்ளார். மகாராணியின் இறுதிக் கிரியைகள் நடைபெறும் தினத்தில் கனடாவில்Read More →

Reading Time: < 1 minuteஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பி ஓடி, ஐக்கிய இராஜ்ஜியத்தில் தற்காலிகமாகத் தங்கி அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளில் மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கும் சுமார் 1,000 ஆப்கானியர்களை ஏற்றுக்கொள்ள கனடா முடிவு செய்துள்ளது. அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் மனிதாபிமான நகரத்தில் தங்கியுள்ள 5,000 ஆப்கானியர்களில் ஒரு தொகுதியினரை குடியேற்றுவதற்கான அமெரிக்காவின் கோரிக்கைக்கு ஒட்டாவா ஒப்புக்கொண்டுள்ளது. இவ்வாறு கனடாவில் குடியேற அனுமதிக்கப்படவுள்ள ஆப்கானியர்களை தெரிவு செய்யும் பணிகளை கனடா முன்னெடுத்து வருவதாகக்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீட்டு அடகுக் கடன் பெற்றுக் கொண்டவர்கள் சிக்கல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பணவீக்க நிலைமைகளினால் கனேடிய மத்திய வங்கி அண்மைய மாதங்களில் பல தடவைகள் வட்டி வீதங்களை உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரையில் ஐந்து தடவைகள் வங்கி வட்டி வீதங்களை உயர்த்தியுள்ளது. இவ்வாறான ஓர் பின்னணியில் மாறும் அடகுக் கடன் வட்டி வீதம் என்ற அடிப்படையில் அடகுக் கடன் பெற்றுக் கொண்டவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கRead More →

Reading Time: < 1 minuteகனடாவை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம் தொடர்பில், தேடப்பட்டுவந்த இரண்டாவது சந்தேக நபரும் பொலிஸாரால் பிடிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 32 வயதான மைல்ஸ் சாண்டர்சன், நேற்று (புதன்கிழமை) பிற்பகல் சஸ்காட்சுவான் மாகாணத்தில் ஒரு நெடுஞ்சாலையில் அதிவேக துரத்தலுக்குப் பிறகு உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர். சாண்டர்சன் ஒரு வாகனத்தைத் திருடியது குறித்து பொலிஸ்துறைக்கு முந்தைய நாள் புகார் கிடைத்ததாகவும், இதன்பின்னர் தீவிரமாக தேடிவந்த பொலிஸார், அவரை ரோஸ்டெர்ன் நகருக்கு அருகேRead More →

Reading Time: < 1 minuteஞாயிற்றுக்கிழமை கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் “கொடூரமான மற்றும் இதயத்தை உடைக்கும் சம்பவம் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) வருத்தம் தெரிவித்துள்ளார். “இன்று சஸ்காட்செவனில் நடந்த தாக்குதல்கள் கொடூரமானவை மற்றும் இதயத்தை உடைக்கும் செயல் என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார். கனேடிய மாகாணமான சஸ்காட்செவன் பகுதியில் கத்திக்குத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் குறைந்ததுRead More →

Reading Time: < 1 minuteமத்திய கனடாவில் உள்ள சஸ்காட்செவனில் நடந்த பாரிய கத்திக்குத்து சம்பவத்தில் குறைந்தது 10பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15பேர் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் மற்றும் அருகிலுள்ள வெல்டன் கிராமத்தில் 13 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டனர். டேமியன் சாண்டர்சன் மற்றும் மைல்ஸ் சாண்டர்சன் என பெயரிடப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் ஆயுதம் ஏந்தியவர்களாகவும் ஆபத்தானவர்களாகவும் கருதப்படுகின்றனர். ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் – வெல்டனின் வடகிழக்கில் சுமார்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் வீட்டு விற்பனை 34 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக நகரின் ரியல் எஸ்டேட் சபை தெரிவித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது நகரின் வீடு விற்பனை சுமார் 34 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும், கடந்த ஜுலை மாதம் வீட்டு விற்பனையை விடவும் ஓகஸ்ட் மாத வீட்டு விற்பனை 15 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5627 வீடுகள் விற்பனை செய்பய்பட்டுள்ளதாகவும் கடந்த ஆண்டுRead More →

Reading Time: < 1 minuteஆசிய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருளைத் திருப்பிக் கொடுக்குமாறு கனேடிய உணவு பாதுகாப்பு ஏஜன்சி மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அது, Mr. Right நிறுவனத்தின் Kaempferia Galanga Powder என்னும் ஒருவகை இஞ்சிப் பொடி ஆகும். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இந்த மசாலாவுடன் தொடர்புடைய உணவைச் சாப்பிட்டதால்தான் ஒன்ரறியோவின் Markham நகரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்ட 12 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாகனமொன்றில் மோதுண்டு பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரிச்மன்ட்ஹில்லின் மெகென்ஸீ மற்றும் யொங் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பெண் பாதசாரியொருவர் உயிரிழந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 2009-2011 ஹொண்டா சிவிக் ரக கறுப்பு நிற வாகனமொன்று குறித்த பெண்ணைRead More →