Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாண சாரதிகளுக்கு பொலிஸார் விசேட அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். வாகன அனுமதிப்பத்திர தகடுகளை புதுப்பித்துக் கொள்ளுமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்த அனுமதிப்பத்திரம் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றாரியோ மாகாணத்தில் அனுமதிப்பத்திர தகடுகளுக்கு கட்டணம் அறவீடு செய்யும் நடைமுறை கடந்த மார்ச் மாதம் ரத்து செய்யப்பட்டது. எனினும், அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டியது கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களது அனுமதிப்பத்திர தகடுகளை புதுப்பிக்கத் தவறும் சாரதிகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வரலாறு காணாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதால் உணவு மற்றும் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் 50 ஆயிரம் கனட டாலர்களுக்கு குறைவாக ஆண்டு வருமானம் பெறுபவர்களில் பாதி பேர் போதுமான உணவை வாங்க முடியாமல் சிரமப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பண வீக்கத்திற்கு ரஷ்யா-உக்ரைன் மோதலே காரணம் என கனடா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஉக்ரைனுக்கு கனடாவினால் மட்டுமே உதவி செய்ய முடியாது என பிரதி பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் தெரிவித்துள்ளார். ரஷ்ய இயற்கை எரிவாயு குழாய் தொடர்பில் எடுக்கப்பட்ட கனடாவின் நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த எரிவாயு குழாய்கள் மூலம் ஜெர்மனிக்கு எரிபொருள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பழுதடைந்திருந்த எரிவாயு குழாய்கள் கனடாவில் பழுதுபார்க்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை கடினமானது என்ற போதிலும் சரியான தீர்மானத்தைRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்டின் (Doug Ford) வீடு விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இட்டோபிகொக்கில் அமைந்துள்ள இந்த வீட்டின் சந்தைப் பெறுமதி 3.2 மில்லியன் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போர்ட் (Doug Ford) , மறைந்த தனது தாயாரின் வீட்டிற்கு செல்ல உள்ளதாகவும், தற்போது வசிக்கும் வீட்டை விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனது பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் எனவும் அவர்கள் திருமண வயதினை அடைந்து விட்டதாகவும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவிற்குள் வரும் பயணிகளை மீண்டும் கட்டாய கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடைமுறையை அமுல் செய்வதாக கனடா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எதிர்வரும் 19ம் திகதி முதல் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். எழுமாறான அடிப்படையில் இந்த கட்டாய கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்னதாக இந்த நடைமுறையை கனேடிய பொதுச் சுகாதார முகவர் நிறுவனம் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கனடாவின் நான்கு பிரதான விமான நிலையங்களிலும்Read More →

Ripudaman Singh Malik

Reading Time: < 1 minute329 பேர் பலியான 1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா குண்டு வெடிப்புடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் நிரபராதியென விடுவிக்கப்பட்ட கனேடிய சீக்கிய தொழிலதிபர் ரிபுதாமன் சிங் மாலிக் கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவில் நேற்று வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். உள்ளூர் நேரப்படி காலை 9:30 மணிக்கு (16:30 GMT) பிரிட்டிஷ் கொலம்பியா – சர்ரே பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பொலிஸார் அங்கு விரைந்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் இடம்பெற்ற விமான விபத்து சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சிறிய ரக விமானம் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என கணடிய போலீசார் தெரிவிக்கின்றனர். 69 மற்றும் 65 வயதுடைய இரண்டு ஆண்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் விபத்து இடம் பெற்றபோது இந்த இருவர் மட்டுமே விமானத்தில் பயணம் செய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அல்பர்ட்டாவின் டிட்ஸ்பரி பகுதியில் இடம்பெற்ற இந்த விமான விபத்து சம்பவம் தொடர்பில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 9 தினங்களில் குரங்கமை நோய் 59 வீதத்தினால் அதிகரித்துள்ளது கனடிய பொது சுகாதார முகவர் நிறுவனம் இந்த தகவல்களை வெளியேற்றுள்ளது. கனடாவில் தற்போது மொத்தமாக 477 குரங்கம்மை நோய் தொற்று ரீதியாளர்கள் பதிவாகியுள்ளனர் கடந்த நான்காம் திகதி முதல் இதுவரையில் 177 பேர் குரங்கம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது 59 வீத அதிகரிப்பு எனவும் கனடிய பொது சுகாதார முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை நோயாளிகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் படகு ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளார்கள், ஒருவரைக் காணவில்லை. கனடாவில் வாழ்ந்துவரும் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்கள் நான்கு பேர், ஞாயிற்றுக்கிழமை ஆல்பர்ட்டாவிலுள்ள ஏரி ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்கள். அப்போது திடீரென வானிலை மோசமடைய, அவர்கள் கரைக்குத் திரும்ப முயலும்போது, துரதிர்ஷ்டவசமாக அவர்கள் சென்ற படகு கவிழ்ந்துள்ளது. இந்த துயர சம்பவத்தில் Angamaly என்ற இடத்தைச் சேர்ந்த Jio PailyRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் புதிய கோவிட் திரிபு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவிட் திரிபுகளில் ஒன்றான அமிக்ரான் திரிபின் உப திரிபான BA.2.75 என்னும் உப திரிபு ஒன்று குறித்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை உப திரிபு இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த உபதிரிபானது அவுஸ்திரேலியா ஜெர்மனி பிரித்தானியா அமெரிக்கா போன்ற பத்து நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கனடாவில் இந்த வகை திரிபினால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவிலுள்ள ஆக்ஸ்ஃபோா்டு-அஸ்ட்ராஸெனெகா நிறுவனத்தின் சுமார் 1.36 கோடி கரோனா தடுப்பூசிகளைத் தூக்கிவீச அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அந்த மருந்துகளைப் பெற்றுக்கொள்ள உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் யாரும் முன்வராததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2 கோடி தடுப்பூசிகளைப் பெறுவதற்காக அஸ்ட்ராஸெனெகா நிறுவனத்துடன் கனடா அரசு கடந்த 2020-இல் ஒப்பந்தம் மேற்கொண்டது. எனினும், அந்தத் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால் ரத்தக்கட்டு மரணம் நிகழக்கூடும் என்று அச்சத்தால், மற்ற நிறுவனங்களின் கரோனா தடுப்பூசிகளின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கோடைகால கொண்டாட்டங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் மீண்டும் ஓர் கோவிட் பெருந்தொற்று அலை ஏற்படக்கூடிய அபாயம் உருவாகி உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோவிட் பெருந்தொற்று தொடர்பில் அவதானமாக நடந்து கொள்ள தவறினால் மீண்டும் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை மக்கள் தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டியது மிகவும் அத்தியாவசியமானது என மொன்றியலை மையமாகக் கொண்ட மருத்துவ நிபுணர் டாக்டர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பண்ணையில் புகுந்து சில பன்றிகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஸ்டார்போர்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஹுரான் ஈஸ்ட் பகுதியில் அமைந்துள்ள பண்ணையொன்றில் இவ்வாறு பன்றிகள் களவாடப்பட்டுள்ளன. இந்த பண்ணையிலிருந்து சுமார் 44 பன்றிகள் களவாடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பண்ணையின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார். இனந்தெரியாத நபர்கள் பண்ணைக்குள் புகுந்து பன்றிகளை களவாடியுள்ளனர். ஒவ்வொரு பன்றியும் சுமார் 60Read More →