Reading Time: < 1 minuteகனடாவில் தொலைபேசி வழியாக மோசடிகள் இடம்பெற்று வருவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிரேஸ்ட பிரஜைகளை ஏமாற்றி அவர்களின் பணத்தை அபகரிக்கும் பல்வேறு சம்பவங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வான்கூவாரைச் சேர்ந்த 76 வயதான ஓய்வு பெற்ற தாதியொருவர் தனது ஒட்டுமொத்த சேமிப்பு பணத்தையும் மோசடிகாரர் ஒருவரிடம் வழங்கியுள்ளார். மூதாட்டியின் நெருங்கிய உறவினர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை விடுதலை செய்ய பணம் தேவை எனவும் கூறி இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.Read More →

Ripudaman Singh Malik

Reading Time: < 1 minuteகனடாவில் சீக்கியர் ரிபுதமான் சிங் மாலிக் (Ripudaman Singh Malik) கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டொராண்டோ, ஏர் இந்தியா கனிஷ்கா விமானத்தில் 1985-ம் ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 329 பேர் கொல்லப்பட்டது, கனடா வரலாற்றின் கருப்பு அத்தியாயம் ஆகும். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு விடுதலையானவர், சீக்கிய தொழில் அதிபர் ரிபுதமான் சிங் மாலிக் (Ripudaman Singh Malik) .Read More →

Reading Time: < 1 minuteகனேடிய குடியிருப்புப் பள்ளிகளில் பழங்குடி கனேடியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எவராலும் மறக்க முடியாது. இதுபோல் இனியும் கனடாவில் இடம்பெறக் கூடாது என்பதில் உறுதியாய் இருப்போம் என கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவில் கத்தோலிக்க திருச்சபைகளால் நடத்தப்பட்ட குடியிருப்பு பள்ளிகளில் பழங்குடியின சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினார். கனடாவின் எட்மண்டன் அருகே உள்ள மாஸ்க்வாசிஸ் – செவன் சோரோஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் கூடியிருந்த சுமார்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதுடன், இவர்களைச் சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் ஆயுததாரி ஒருவரும் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் மேலும் இருவர் காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வான்கூவர் புறநகர்ப் பகுதியான லாங்லி நகரில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரால் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என பொலிஸார் குறிப்பிட்டனர். துப்பாக்கிச்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கத்தோலிக்க தேவாலயங்கள் நடத்திய பாடசாலைகளில் கடந்த 1970ஆம் ஆண்டு வரை பழங்குடியின மாணவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதற்காக போப் ஃபிரான்சிஸ் மன்னிப்பு கோரினார். ஆறு நாட்கள் பயணமாக கனடா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப், நேற்று (திங்கட்கிழமை) முதல் நிகழ்வாக அல்பர்டாவில் எட்மான்டனின் தெற்கு பகுதியில் மிகவும் பாழடைந்த நிலையில் அமைந்திருக்கும் கத்தோலிக்க தேவாலய பாடசாலையில் குழுமியிருந்த பூர்வகுடி மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடையே உரையாற்றினார். இதன்போதே அவர் மன்னிப்புRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை கொடூரமான வன்முறைகளில் தங்கள் உயிர்கள், உடமைகளை இழந்த மற்றும் இடம்பெயர்ந்தவர்களை நினைவு கூருகிறோம் என கறுப்பு ஜூலை 39-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு முழுவதும் பல தசாப்தங்களாக நீடித்த அமைதியின்மை மற்றும் பதற்றங்களைத் தொடர்ந்து, கொழும்பில் தமிழர் படுகொலைகள் இடம்பெற்றன. கறுப்பு ஜூலைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் சராமரி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒன்றாரியோ மாகாணத்தின் வோன் நகரில் (Vaughan) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று அதிகாலை வேளையில் (July 23, 2022) இந்த துப்பாக்கிச் சம்பவம் இடம்பெற்றதாகவும், இதில் மற்றுமொரு பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. யோர்க் பிராந்திய பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 25 வயது மற்றும் 20 வயதானRead More →

Reading Time: < 1 minuteடேவ் ப்ரொக்டர் என்ற நபரே இவ்வாறு 68 நாட்களில் கனடாவை சுற்றி வலம் வந்துள்ளார். கடந்த 1991ம் ஆண்டில் அல் ஹோவி என்ற நபர் 72 நாட்கள் 10 மணித்தியாலங்களில் கனடாவை சுற்றி ஓடி சாதனை நிலைநாட்டியிருந்தார். இந்த சாதனைனயை அறுபத்து ஏழரை நாட்களில் ஓடிக் கடந்து டேவ் ப்ரொக்டர் சாதனை படைத்துள்ளார். தாம் உலகத்தின் உச்சத்தில் இருப்பதாக உணர்வதாகவும், உலகின் மிக அழகான நாட்டுக்கு நன்றி பாராட்ட சந்தர்ப்பம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் Scotiabank அரங்கிற்கு வெளியே டொராண்டோ நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்தில் தமிழர் ஒருவருக்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவம் 26 வயதான தமிழர் கைது செய்யப்பட்டு, புதன்கிழமை டொராண்டோ நீதிமன்ற அறையில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக டொராண்டோ பொலிஸ் சேவை தெரிவித்துள்ளது. சனிக்கிழமை மாலை யோர்க் ஸ்ட்ரீட் மற்றும் ப்ரெம்னர் பவுல்வார்டு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இரவு 7.30 மணிக்குப் பின்னர் டொராண்டோRead More →

Reading Time: < 1 minuteஐரோப்பாவிற்கு எதிராக ரஷ்யா, தனது பிரதான ஆயுதமாக எரிசக்தி வளத்தை பயன்படுத்துவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தியுள்ளார். ஐரோப்பாவிற்கு எரிபொருள் விநியோகம் செய்வதனை ஆயுதமாக ரஷ்யா பயன்படுத்துகின்றது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுத்து வரும் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளை பழிவாங்கும் நோக்கில் ரஷ்யா எரிபொருள் விநியோகத்தைRead More →

Reading Time: < 1 minuteகனேடிய மக்களுக்கு அந்நாட்டு மத்திய வங்கியின் ஆளுனர் ரிப் மேக்களம் (Tiff Macklem) ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மக்களின் வாழ்க்கைச் செலவு தொடர்ச்சியாக உயர்வு அடைந்து செல்லும் எனவும் பணவீக்கவீதம் இந்த ஆண்டு முழுவதும் உயர்வடைந்த நிலையிலேயே நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம வெளியிட்டுள்ள புள்ளிவிபர தகவல்களின் அடிப்படையில் கடந்த 1983 ஆம் ஆண்டின் பின்னர் இந்த ஆண்டு ஜூன் மாதம் பணவீக்கRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் 16 இளைஞர்களை பலிவாங்கிய சாலை விபத்தை ஏற்படுத்திய இந்திய சாரதிக்கு பகல் நேர ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி, Saskatchewanஇல் Jaskirat Singh Sidhu என்ற இந்தியர் ஓட்டிய ட்ரக், பேருந்து ஒன்றின் மீது மோதியது. அந்த பேருந்தில் Broncos ஜூனியர் ஹாக்கி அணியைச் சேர்ந்த இளைஞர்கள் பயணித்தனர். அந்த பயங்கர விபத்தில் 16 பேர் கொல்லப்பட்டதுடன், 13 பேர் படுகாயமடைந்தனர். ஆகவே,Read More →

Reading Time: < 1 minuteகடவுச்சீட்டுக்களின் உலக தர வரிசையில் கனடாவின் கடவுச் சீட்டு எட்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த தரப்படுத்தல் பட்டியலில் ஆசிய நாடுகள் மூன்றினது கடவுச்சீட்டுகள் தொடர்ந்தும் முன்னணி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. லண்டனை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஹண்ட்லி பார்ட்னர்ஸ் (Henley & Partners) என்னும் குடிவரவு ஆலோசனை நிறுவனம் இந்த கடவுச்சீட்டு தரப்படுத்தல் சுட்டியை வெளியிட்டுள்ளது. கனடாவின் கடவுச்சீட்டு அவுஸ்ரேலியா, கிரேக்கம், செக் குடியரசு மற்றும் மால்டா ஆகிய நாடுகளுடன்Read More →