Reading Time: < 1 minuteஅமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை இரத்துச் செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளமை கொடூரமானது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். கருக்கலைப்பு செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமையை இழக்க நேரிடும் பெண்களுக்கு அவர் அனுதாபம் தெரிவித்தார். அமெரிக்காவில் 1973ஆம் ஆண்டில் ரோ மற்றும் வேட் (Roe v.Wade) இடையிலான வழக்கில், ‘கருக்கலைப்பு என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை, அது அரசியலமைப்பு உரிமை’ என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதேபோல, 1992ஆம்Read More →

Reading Time: < 1 minuteமுன்னிலை உலகின் வாழப் பொருத்தமான நகரங்கள் வரிசையில் மூன்று கனேடிய நகரங்கள் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பட்டியலில் கனடாவின் கல்கரி நகரம் 3ம் இடத்தையும், வான்கூவார் 5ம் இடத்தையும், றொரன்டோ எட்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. நகரங்களின் ஸ்திரத்தன்மை, சுகாதார வசதிகள், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி மற்றும் உட்கட்டுமான வசதிகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பொருளியல் புலனாய்வுப் பிரிவின் வருடாந்த தரப்படுத்தல் பட்டியலில் இந்தRead More →

Reading Time: < 1 minuteகடவுச் சீட்டு பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்போருக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ(Justin Trudeau) உறுதிமொழியொன்றை வழங்கியுள்ளார். கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என அவர் உறுதிமொழி வழங்கியுள்ளார். பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலைமை காணப்படுவதனை தாம் ஒப்புக் கொள்வதாக அவர் (Justin Trudeau) குறிப்பிட்டுள்ளார். கடவுச்சீட்டு விநியோகத்தில் நிலவி வரும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பணவீக்க வீதம் உச்சம் தொட்டுள்ளதாக அந்நாட்டு புள்ளி விபரவியல் திணைக்களம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வருடாந்த பணவீக்க வீதம் நான்கு தசாப்த காலங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மே மாதம் நுகர்வோர் விலைச் சுட்டியானது கடந்த ஆண்டு மே மாதத்தை விடவும் 7.7 வீதமாக உயர்வடைந்துள்ளது. எரிசகத்தி வளங்களின் விலைகள் 34.8 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் பெற்றோலின் விலை 48 வீத்த்தினால் உயர்வடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பால் விலையை அதிகரிப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் பாலின் விலையை இரண்டு சதங்களினால் உயர்த்துவதற்கு கனேடிய பால்பொருள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் பண்ணைப் பாலின் விலை ஒரு லீற்றருக்கு 2 சதங்கள்அல்லது 2.5 வீதமாக உயர்த்தப்பட உள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் பாலின் விலை லீற்றருக்கு 6 சதங்களினால் உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கனடாவில் பால் மாவின் விலை வருடாந்தம்Read More →

Reading Time: < 1 minuteகடந்த அக்டோபரில் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக மெக்சிகோவிலுள்ள ரிசார்ட் ஒன்றிற்கு தன் நண்பர்களுடன் சென்றிருந்த இந்தியப் பெண்ணான அஞ்சலி ரயட் சுட்டுக்கொல்லப்பட்டார். உண்மையில், போதைக் கும்பல்கள் இரண்டிற்கு நடுவே நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது, குண்டு பாய்ந்து அஞ்சலியும் ஜேர்மன் பெண் ஒருவரும் கொல்லப்பட்டனர். தற்போது, இந்த சம்பவம் நடந்த இடத்துக்கு சற்று தொலைவில் அமைந்துள்ள ரிசார்ட் ஒன்றில் கனேடியர்கள் இருவர், ஒரு ஆணும் ஒரு பெண்ணும், கத்திக்குத்துக் காயங்களுடன் உயிரற்றRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் விற்பனை செய்யப்படும் சில வகை சிறுவர் பால் மா பக்கட்டுகள் குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிசுக்களுக்கு வழங்கப்படும் பால் மா பக்கட் வகைகள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சில வகை பால் மா பக்கட்டுகளில் நுண்ணுயிர்களின் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சல்மன்லா வகை பக்டீரியாக்கள் மற்றும் க்ரோனோ பெக்டர் என்னும் நூண்ணுயிர்கள் என்பனவற்றினால் பால் மா வகைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொரன்றோவில் தீவைத்துக் கொளுத்தப்பட்ட ஒரு பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். கடந்த வெள்ளியன்று தீ தொடர்பான புகார் ஒன்றின்பேரில் பொலிசார் Scarboroughவிலுள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்டார்கள். அங்கு சென்று பார்க்கும்போது, ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தீக்காயங்களுடன் இருப்பது தெரியவரவே, உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். இருவருக்கும் பயங்கர காயங்கள் இருந்தும், அந்த ஆணின் நிலைமை சீராக இருப்பதாக பொலிசார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஹமில்டனில் தீ விபத்து காரணமாக வர்த்தக கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது. ஹமில்டன் கிங்ஸ் வீதியில் அமைந்துள்ள நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடம் ஒன்றே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது. இந்த கட்டடம் முன்னதாக சுகாதார தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது. இந்த கட்டடத்தின் பெரும்பகுதி பலகையினால் உருவாக்கப்பட்டது என்ற காரணத்தினால், தீ வேகமாக பற்றிக் கொண்டு பரவியதாக தீயனைப்புப் படையினர் தெரிவிக்கின்றனர். தீ வேகமாக பரவிக் கொண்டதனால் தீயனைப்புப்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மீளவும் கோவிட் பெருந்தொற்று அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவிட் சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில் கோடை காலத்தில் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகும் என தெரிவிக்கப்படுகின்றது. ஒமிக்ரோன் திரிபின் உப திரிபுகளினால் இவ்வாறு தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக ஒமிக்ரோனின் BA.4 மற்றும் BA.5 ஆகிய ஒமிக்ரோனின் உப திரிபுகளினால் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்டRead More →