Reading Time: < 1 minuteஒரு தொகுதி உக்ரைன் ஏதிலிகள் கனடாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மூன்று விசேட விமானங்களில் இவ்வாறு உக்ரைன் ஏதிலிகள் கனடாவிற்கு அழைத்து வரப்படுவதாகவும் இதில் முதல் விமானம் கனடாவை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 300 உக்ரைன் ஏதிலிகள் இவ்வாறு கனடாவை வந்தடைந்துள்ளனர். இவ்வாறு கனடாவை வந்தடைந்த உக்ரைன் பிரஜைகள் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளனர். உக்ரைன் ஏதிலிகள் வின்னிபிக் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். பிரதிப் பிரதமர் கிறிஸ்டியாக ப்ரீலாண்ட் உக்ரைன் பிரஜைகளை வரவேற்றுள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteவடக்கு ஒன்ராறியோவில் இரண்டு பேருடன் கடந்த மாதம் மாயமான சிறிய விமானத்தின் சிதைவுகள் லேக் சுப்பீரியர் மாகாண பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒன்ராறியோ பிராந்திய பொலிசார் தெரிவிக்கையில், மாயமான விமானம் தொடர்பில் தங்களின் ஹெலிகொப்டர் ஒன்றும், பொதுமக்கள் பயன்படுத்தும் ஹெலிகொப்டர் ஒன்றும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும், அந்த வேளையில் குறித்த சிதைவுகள் பார்வையில் பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், அந்த விமானத்தில் பயணம் செய்த இருவரது சடலங்களும் (John Fehr மற்றும்Read More →

Reading Time: < 1 minuteஇந்த வார இறுதியில் கனடாவின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டு மாகாணங்களில் சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மழையால் ஏற்பட்ட புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 8ஆக உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை பிற்பகல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த புயல்கள் மற்றும் சூறாவளியினால், ஒன்ராறியோ மற்றும் கியூபெக்கின் சில பகுதிகளில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன. மணிக்கு 132 கிமீ (82 மைல்) வேகத்தில் வீசிய காற்று, மரங்கள், வீடுகள், மின்Read More →

Reading Time: < 1 minuteஉலகில் இதுவரை 11 நாடுகளில் சுமார் 80 பேர் குரங்கு அம்மை (monkeypox) நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் 50 சந்தேகத்திற்கிடமான நோயாளிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதுவரை இத்தாலி, சுவிடன், ஸ்பெயின், போர்த்துக்கல், அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குரங்கு அம்மை நோய்த் தொற்றுRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத் தேர்தலில் போட்டியிடும் நான்கு கட்சிகளில் இரண்டு கட்சித் தலைவர்களுக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. பசுமைக் கட்சியின் தலைவர் மைக் சிரினியருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. பணியாளர் ஒருவரிடமிருந்து சிரினியருக்கு கோவிட் தொற்று பரவிவியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. சுய தனிமையில் இருப்பதாகவும், இலேசான இறுமல் ஏற்பட்டுள்ளதாகவும் வேறும் பாதிப்புக்கள் எதுவும் கிடையாது எனவும் சிரினியர் தெரிவித்துள்ளார். என்.டி.பி. கட்சியின் தலைவர் அன்ட்ரே ஹொர்வாத் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக்கில் குரங்கு அம்மை தொற்றால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதை சுகாதாரத்துறை முதன் முறையாக உறுதி செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சமீபத்தில் பரவி வரும் குரங்கு அம்மை தொற்றானது கனடாவிலும் முதன் முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இருவருக்கு குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 20 பேர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் குரங்கு அம்மை அறிகுறிகள் தொடர்பில் கவனம் கொள்ளRead More →

Reading Time: < 1 minuteசீனாவை சேர்ந்த சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஹூவாய் (Huawei Technologies) மற்றும் ZTE ஆகியவற்றின் 5G தொலைத்தொடர்பு வலையமைப்பை தடை செய்யவுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. தேசியப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கனடா அறிவித்துள்ளது. எங்கள் 5G வலையமைப்பில் இருந்து ஹூவாய் மற்றும் ZTE ஐ விலக்க நாங்கள் உத்தேசித்துள்ளோம் என்று கனடா தொழில் அமைச்சர் பிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின் நேற்று ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் கூறினார். ஏற்கனவே 5GRead More →

Reading Time: < 1 minuteறொரன்டோவில் ஒரு மணித்தியால இடைவெளியில் இரண்டு வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது. நோர்த் யோர்க் மற்றும் ஸ்காப்ரோ ஆகிய பகுதிகளில் வாகனக் கொள்கை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அல்பிரட் அவன்யூ, லோங்மோர், ஷெப்பர்ட் அவன்யூ என்பனவற்றுக்கு அருகாமையில் நேற்று மாலை 4.30 மணியளவில் முதல் வாகனக் கொள்ளைச் சம்பவம் பதிவாகியுள்ளது. சந்தேக நபர்களில் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் இருந்தார் எனவும், white Lexus IS 250 AMDT 138 ரகRead More →