Reading Time: < 1 minuteகனடாவின் வான்கூவரில் இருந்து இந்தியாவின் டெல்லிக்கான நேரடி விமான சேவையை ஏர் கனடா நிறுத்துவதாக அறிவித்துள்ளது. குறித்த நடவடிக்கைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், உக்ரைன் போர் விவகாரம் முதன்மையானது என குறிப்பிடப்பட்டுள்ளது. சேவை ரத்து நடவடிக்கையானது ஜூன் 2ம் திகதி தொடக்கம் செப்டம்பர் 6ம் திகதி வரையில் நீடிக்கும் என நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் கனடா தரப்பில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் நடந்து வரும் போர் ஒருRead More →

Reading Time: < 1 minuteஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என தனது நட்பு நாடுகளுடன் இணைந்து கனடாவும் போர்க்கொடி தூக்கியுள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் கொடூரங்கள் அம்பலமான நிலையிலேயே, மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. உக்ரைனில் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக ரஷ்யாவுக்கு எதிரான ஆதாரங்கள் வெளியாகியுள்ளதால், மனித உரிமை கவுன்சிலில் அந்த நாடு நீடிப்பது முறையல்ல எனRead More →

Reading Time: < 1 minuteஉக்ரைன் மீதான போர் தொடர்பில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளுடன் நெருக்கமானவர்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்க கனடா முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஒரு மாதம் கடந்தும் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், ரஷ்யா மற்றும் அதன் ஆதரவு நாடான பெலாரஸ் மீதும் பொருளாதார தடைகளை விதிக்க கனடா மீண்டும் தயாராகியுள்ளது. இந்த முறை, ரஷ்யாவுக்கு நெருக்கமான 9 பேர்கள் மீதும் பெலாரஸ் நாட்டுக்கு நெருக்கமான 9Read More →

Reading Time: < 1 minuteரஷ்ய படையெடுப்பை எதிர்கொள்ளும் வகையில் உக்ரைன் துருக்குகள் ஒருங்கிணைக்கப்படவில்லை என அனுபவம் மிக்க கனேடிய வீரர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். உக்ரைன் ஆதரவாக களமிறங்க சென்ற பல கனேடிய வீரர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியதாகவும், பலர் போரிட ஆயுதம் இல்லாமல், கனடா திரும்பும் நிலையும் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. சர்வதேச அளவில் பிரபலான படைப்பிரிவு என அடையாளப்படுத்தப்படும் உக்ரைனின் பிராந்திய பாதுகாப்பு படையும் முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லை என்றே கனடிய வீரர்கள் தெரிவிக்கின்றனர். உக்ரைன் விவகாரத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடா, பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள், இலங்கைக்குப் பயணம் செய்யும்போது, அங்கு அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுவதால், கவனமாக இருக்குமாறு தங்கள் குடிமக்களை எச்சரித்துள்ளன. கனடா வெளியிட்டுள்ள பயண ஆலோசனையில், சமீபத்தில் இலங்கையில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை குறித்து எச்சரித்துள்ளது. அவசர நிலை உள்ளூர் அதிகாரிகளுக்கு வாரண்ட் இல்லாமலே மக்களைக் கைது செய்யும் அதிகாரத்தைக் கொடுக்கும் என்றும், ஆகவே, மிகவும் கவனமாக இருக்குமாறும் இலங்கையிலிருக்கும் தன் குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளதுRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் தற்போது பொருளாதார சீர்கேடால் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எரிபொருள், எரிவாயு, மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த நிலையில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் கனடாவில் வாழும் இலங்கையர்கள் ‘எமது தாய்நாட்டைக் காப்பாற்றுங்கள்’ என போராட்டம் நடத்தி வருகின்றனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteவவுனியா ஏ9 வீதி கொக்குவெளி இராணுவ முகாம் அருகே நேற்று (02.04.2022) காலை 9.30 மணியளவில் ஹயஸ் ரக வேன் மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கனடா நாட்டு பிரஜை உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ஹயஸ் ரக வாகனம் ஏ9 வீதி கொக்குவெளி இராணுவ முகாம் அருகே ஒரு வாகனத்தினை முந்திச்செல்ல முற்பட்ட போது வாகனம் சாரதியின்Read More →

Reading Time: < 1 minuteஇன்று முதல் கனடாவுக்கு வரும் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படவேண்டிய அவசியம் இல்லை என்று கனடா அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கனடாவுக்கு வருவதற்காக முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. இன்று முதல், அதாவது, ஏப்ரல் 1 முதல், கனடாவுக்கு வரும் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை என அறிவிக்கப்பட்டாலும், கனடாவுக்கு வெளியிலிருந்து வரும் யாரானாலும், அவர்கள் இரண்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் உறைவிடப் பள்ளி விவகாரத்தில் கத்தோலிக்க திருச்சபையின் பங்கிற்காக போப் பிரான்சிஸ் மன்னிப்புக் கோரியுள்ளார். கனேடிய பூர்வக்குடி மக்களின் தலைவர்கள் மற்றும் போப் பிரான்சிஸ் இடையே வாடிகனில் தனிப்பட்ட சந்திப்பு நடந்ததன் பின்னரே இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவர், முழு மனதுடன் நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன், நான் மிகவும் வருந்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். உறைவிடப் பள்ளி விவகாரத்தில் அவரது கருத்தை கேட்க பலர் நீண்ட காலமாக காத்திருந்ததாகவும்Read More →