Reading Time: < 1 minuteரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் கனடா மற்றும் ஏனைய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதாக கனேடியப் பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. பெலாரஸ், ​​கிரிமியா மற்றும் மேற்கு ரஷ்யா பகுதிகளில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் எல்லைப் பகுதிகளில் குறிப்பிடத்தக்கRead More →

Reading Time: < 1 minuteரொரன்டோ – ஸ்கார்பரோ உயர்தரப் பாடசாலையில் 12ஆம் வகுப்பு 18 வயது மாணவன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மிட்லாண்ட் & லோரன்ஸ் அவென்யூவிற்கு அருகில் உள்ள டேவிட் & மேரி தோம்சன் கல்லூரியில் திங்கட்கிழமை (14 Feb, 2022) பிற்பகல் 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. பாதிக்கப்பட்ட 18 வயது மாணவன் பாடசாலையின் பின் கதவுகளுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சடலமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.Read More →

Reading Time: < 1 minuteகொவிட்-19 சுகாதார நடவடிக்கைகள் தொடர்பாக நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களின் தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்காக கனேடிய அரசாங்கம் முதன்முறையாக அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. அவசரகாலச் சட்டம் இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கு வழங்கலாம், ஆனால் அதற்கு வழிவகுக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் அரசாங்கம் அவர்களைக் கொண்டுவரவில்லை என்று பிரதமர ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். ஆனால், அது குடிமக்களின் சுதந்திர நடமாட்டம் அல்லது ஒன்றுகூடுவதற்கான உரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். மேலும்Read More →

Reading Time: < 1 minuteதடுப்பூசி எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் பாலத்தில் குவிந்திருந்த போராட்டக்கார்களை கனேடிய பொலிசார் அகற்றியதைத் தொடர்ந்து, அந்த பாலத்தில் மீண்டும் போக்குவரத்து துவங்கியுள்ளது. கனடா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான சரக்குப் போக்குவரத்தில் 25 சதவிகிதம், கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள விண்ட்சர் என்ற இடத்தையும், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள Detroit நகரத்தையும் இணைக்கும் Ambassador Bridge என்னும் பாலத்தின் வழியாகத்தான் நடந்து வருகிறது. கனேடிய சாரதிகள் கட்டாயம் கொரோனாRead More →

Reading Time: < 1 minuteகனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிரதான கடவையை போராட்டக்கார்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில் அதனை அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். ஒன்ராறியோவில் உள்ள அம்பாசிடர் பாலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கனரக வாகன சாரதிகள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்திற்கு எதிரான நீதிமன்றின் தடை உத்தரவை அமுல்படுத்துமாறு அதிகாரிகள் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளனர். இருப்பினும் கனடியக் கொடிகளை அசைத்த மக்கள் கூட்டம் இந்த உத்தரவை மீறி பாலத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து போராட்டத்தில்Read More →

Reading Time: < 1 minuteகொவிட் கட்டுப்பாடு உள்ளிட்ட பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சரக்கு வாகன சாரதிகளின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் கனடா – ஒன்ராறியோ மாகாணத் தில் அவசரகால நிலை நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அவசரகால நிலையை பிரகடனம் செய்யும் அறிவிப்பை மாகாண முதல்வர் டக் போர்ட் நேற்று வெளியிட்டார். இந்த அவசரகால நிலை உத்தரவு 72 மணி நேரத்திற்குள் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு 14Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவுடனான முக்கிய வர்த்தகத் தொடர்பை லொறி ஓட்டுநர்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில், இதனை முடிவுக்கு கொண்டுவர கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடை உத்தரவு வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 19:00 மணிக்கு அமுலுக்கு வந்தது. ஒன்ராறியோவின் வின்ட்சரை மிச்சிகனில் உள்ள டெட்ராய்ட் நகருடன் இணைக்கும் அம்பாசிடர் பாலம் ஐந்து நாட்களாக முற்றுகையிடப்பட்டுள்ளது. கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான லொறி ஓட்டுநர்களின் போராட்டங்கள் மற்ற எல்லைக் கடக்கும் இடங்களிலும், ஒட்டாவாவிலும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக போராடுபவர்களுக்கு ஆதரவாக எதையாவது செய்யவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் அமெரிக்க இளைஞர் ஒருவர். ஆனால், அவர் செய்த செயல் அவருக்கு தண்டனையை மட்டுமல்ல அவமானத்தையும் கொண்டுவந்துள்ளது. அமெரிக்காவிலுள்ள Ohio என்ற இடத்தில் வாழும் அந்த 20 வயது நபர், கனேடியர்களுக்கு ஆதரவாக எதையாவது செய்யவேண்டும் என்று முடிவு செய்து, Ottawaவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால், முட்டாள்தனமாக தான் கனடாவின் தலைநகரான Ottawaவுக்குRead More →

Reading Time: < 1 minuteகொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராடும் லொறி ஓட்டுநர்களின் போராட்டங்களை கொண்டுவருவதற்கு, கூட்டாட்சி அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு அமெரிக்க அதிகாரிகள் கனடாவின் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். கார் தயாரிப்பாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அம்பாசிடர் பாலத்தின் முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர தடை கோருகின்றனர். இதனிடையே ஒன்ராறியோ நீதிமன்றம் எதிர்ப்பாளர்கள் ஒன்லைன் நன்கொடைகளை அணுகுவதை நிறுத்தியுள்ளது. துன்புறுத்தல் தொடர்பான கொள்கையை மீறியதாக புழகுரனெஆநஇல் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, ஆன்லைன் தளமான புiஎநளுநனெபுழ மூலம் ட்ரக்கர்ஸ் எட்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக லொறி ஒட்டுநர்கள் நடத்தும் போராட்டத்தினால், கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல்காப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘அமெரிக்காவின் டெட்ரயாட் மற்றும் கனடாவின் வின்ட்சர் நகரை இணைக்கும் தூதர் பாலம், உலகின் மிக முக்கியமான எல்லை கடக்கும் பாலங்களில் ஒன்று. கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மொத்த வர்த்தகத்தில் 25 சதவீதம் இந்த பாலம் வழியாக நடக்கிறது. தற்போதுRead More →

Reading Time: < 1 minuteஉக்ரைன் நாட்டிலிருக்கும் கனேடியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்ய இராணுவம் ஊடுருவும் வாய்ப்பு உள்ளதால், முடிந்தவரையில் சீக்கிரமாக உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறுமாறு தனது மக்களை கனடா அரசு கேட்டுக்கொண்டுள்ளது. உக்ரைன் நாட்டில் உள்ள நமது தூதரகத்தின் தூதரக உதவிகளை செய்யும் திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என, உக்ரைனில் வாழும், பதிவு செய்துகொண்டுள்ள 780 கனேடியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலில் தெரிவித்துள்ள கனேடிய அரசு, நீங்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடா அமெரிக்க எல்லையில், பனியில் உறைந்து பலியான இந்தியக் குடும்பத்தின் இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்கா செல்லும் ஆசையில், கனடாவிலிருந்து நடந்தே அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish 35), அவரது மனைவி வைஷாலி (Vaishali 33) பிள்ளைகள் விஹாங்கி (Vihanngi 12) மற்றும் தார்மிக் (Dharmik 3) ஆகியோர் சென்ற மாதம் உயிரற்ற உடல்களாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அமெரிக்கா,Read More →

Reading Time: < 1 minuteகட்டாய கொவிட் தடுப்பூசி உள்ளிட்ட கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும் லொறி ஓட்டுநர்களின் போராட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கனரக வாகன ஓட்டுனர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து, சுதந்திர வாகன அணிவகுப்பு என்ற அமைப்பு கடந்த எட்டு நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருவதையடுத்து, தற்போதுRead More →