2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடாவுக்குத் தேவைப்படும் பூஸ்டர் கொவிட் -19 தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் வகையில் மொடர்னா தடுப்பூசி நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக கனேடிய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி, கனடா 40 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும். அத்துடன், தேவைக்கேற்ப இது 65 மில்லியன் அதிகரிக்கப்படும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடாவுக்குத் தேவைப்படும் மேலதிக தடுப்பூசிகளை வேகமாகப் பெற்றுக்கொள்ள உதவும் என கனேடிய கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வார ஆரம்பத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. மொடர்னா அதன் உற்பத்தி ஆலையை கனடாவில் அமைந்து தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவும் ஒப்பந்தம் வழிவகுக்கிறது எனவும் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.