Reading Time: < 1 minuteகொரோனா அவசரகால உத்தரவுகள் அடுத்த ஆண்டு வரையில் தொடரும் என ஒன்றாரியோ அரசாங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் மாகாணத்தில் இந்த அவசரகால உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த அவசரகால உத்தரவிக் கால எல்லை எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ம் திகதியுடன் காலாவதியாகின்றது. மாகாணத்தில் மீளவும் கொரோனா தொற்று நிலைமைகள் அதிகரித்துச் செல்லும் காரணத்தினால் அவசரகால உத்தரவினை தொடர்ந்தும் நீடிப்பதாக ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பெருவெள்ளத்தால் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு உதவித்தொகையை அறிவித்துள்ளது மாகாண நிர்வாகம். பெருவெள்ளத்தால் தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள மக்களில் தகுதியுடையவர்களுக்கு 2,000 டொலர் உதவித்தொகை வழங்க மாகாண நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குறித்த தொகையானது கனேடிய செஞ்சிலுவை சங்கம் வாயிலாக தகுதியுடையவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. மேலும், பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு, அவர்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள குறித்த தொகை உதவியாக இருக்கும்Read More →

Reading Time: < 1 minuteஉலக நாடுகளின் நற்பெயர் குறித்த ஆய்வு ஒன்றில், புலம்பெயர்வோர் முதல் சர்வதேச மாணவர்கள் வரை, வெளிநாட்டவர்களை கவர்ந்திழுப்பதில் கனடாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. முதன்முறையாக, Anholt-Ipsos Nation Brands Index 2021 என்ற தரவரிசைப்பட்டியலில் கனடா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதற்கு முக்கிய காரணம், புலம்பெயர்தல் மற்றும் மூலதனம் முதலான காரணிகளில் கனடா அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற்றதுதான். The Nation Brands Index என்ற அமைப்பு, உலக நாடுகளின் நற்பெயரை அளவீடுRead More →

Reading Time: < 1 minuteகொவிட் தொற்று நோய் நெருக்கடியை அடுத்து புகலிடக் கோரிக்கையாளர்களை எல்லையிலேயே வைத்து திருப்பியனுப்பும் வகையில் கனடா முன்னெடுத்துவந்த கொள்கைத் திட்டம் முடிவுக்கு வருகிறது. புதுப்பிக்கப்பட்ட கனடாவில் கொவிட் தொற்று நோய் தடுப்பு கொள்கைத் திட்டத்தில் அகதிகளை எல்லையில் வைத்து திருப்பியனுப்பும் நடவடிக்கை முடிவுக்குக் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் தடுப்பு கொள்கைத் திட்டத்தின் பிரகாரம் 2020 மார்ச் முதல் ஒக்டோபர் நடுப்பகுதிக்கு இடையிலான காலப்பகுதியில் மட்டும் இக்கொள்கைத் திட்டத்தின் பிரகாரம் குறைந்தபட்சம்Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் Lillooet பகுதிக்கு அருகே ஏற்பட்ட மண்சரிவில் நால்வர் சிக்கிய நிலையில், நீண்ட ஒருவாரகால தேடுதல் நடவடிக்கைக்கு பின்னர் தற்போது மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை உடற்கூராய்வாளர் அலுவலகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. மண்சரிவில் சிக்கி மாயமான நான்காவது நபர் தொடர்பிலும் தேடுதல் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. இருப்பினும் ஏமாற்றமே மிஞ்சியதாக அதிகாரிகள் தரப்பில்Read More →

Reading Time: < 1 minute5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு, ஃபைஸர் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பயன்படுத்த கனடா அங்கீகாரம் அளித்துள்ளது. 16 முதல் 25 வயதுடையவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பதிவுசெய்யப்பட்ட பாதுகாப்பு மற்றும் செயற்திறன் 5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கும் இருக்கும் என ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கனடாவில் இந்த வயதினருக்கு அங்கீகரிக்கப்பட்ட முதல் கொவிட்-19 தடுப்பூசி இதுவாகும். ஐந்து முதல் 11 வயதுள்ள சிறுவர்களுக்கு தலா 10Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மேற்கு மாகாணத்தை தடம் புரட்டி போட்டுள்ள வெள்ளப் பேரழிவினால், சுமார் 18,000பேர் வெள்ள நீரில் சிக்கித் தவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மண்சரிவுகள், வீதிகள், வீடுகள், பாலங்கள் மற்றும் பிற முக்கிய உட்கட்டமைப்புகளை அழித்த இந்த பேரழிவு, நாட்டின் விலையுயர்ந்த இயற்கை பேரழிவு என விபரிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் முக்கிய போக்குவரத்து பாதைகளை அடைத்துள்ளன. இதனால் மாகாணத்தில் ஆயிரக்கணக்கானோர் சிக்கித் தவிக்கின்றனர். வன்கூவரை மாகாணத்தின் உட்புறத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,448பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 28பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 56ஆயிரத்து 823பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 431பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 23ஆயிரத்து 488பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 501பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →