Reading Time: < 1 minuteசினோபார்ம் (Sinopharm) தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்ட நிலையில் அனைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைகளையும் முடித்துக்கொண்டு பிரித்தானியா வழியாக கனடா பயணம் செய்த திருகோணமலையைச் சேர்ந்த பெண்மணி, லண்டன் ஹித்ரோ விமான நிலையத்தில் வைத்து மீண்டும் கொழும்புக்கு திருப்பி அனுப்பப்ட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடை பெற்றது. சீனத் தயாரிப்பான சினோபார்ம்(sinopharm) தடுப்பூசியை கனடா அங்கிகரிக்காததே அதற்குக் காரணம். கனடாவுக்கு நுழையும் பயணிகள் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்பதுடன், கனடியRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 3,157பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 54பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 73ஆயிரத்து 397பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 421பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 35ஆயிரத்து 336பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 752பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minuteகனடா மற்றும் மெக்சிகோ உடனான தனது தரைவழி எல்லைகளை முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகளுக்காக நவம்பர் மாதம் முதல் மீண்டும் திறக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. தடுப்பூசி போடப்படாத பயணிகள் கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து தரை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய தொடர்ந்தும் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்நாடுகளில் இருந்து விமானம் மூலம் வருவேர் கொவிட் தொற்று இல்லை என்ற மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். கொவிட் தொற்றுRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள தாமதிக்கும் 50,000 மக்களை நேரடியாக தொடர்பு கொள்ள நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றும் ஒரு டோஸ் மட்டும் போட்டுக்கொண்டவர்கள் இடைவெளியை குறைக்கலாம் என நகர நிர்வாகம் கருதுகிறது. ரொறன்ரோ குடிமக்களில் 123,000 பேர்கள் கொரோனா தடுப்பூசியில் ஒரு டோஸ் மட்டுமே போட்டுக்கொண்டுள்ளனர். இதில் 48,200 பேர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,665பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 78பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 70ஆயிரத்து 240பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 367பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 36ஆயிரத்து 009பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 776பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minuteகேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்குச் சொந்தமான படகு ஒன்று இலங்கைத் தமிழர்களை கனடாவுக்கு கடத்த முயன்றபோது அமெரிக்க கடற்படையிடம் சிக்கியது. இந்தியப் பெருங்கடலில், மாலத்தீவுகளுக்கும் மொரீஷியஸ் தீவுக்கும் இடையில், அந்தப் படகை அமெரிக்க கப்பற்படை வழிமறித்துள்ளது. அதில் 59 இலங்கைத் தமிழர்கள் இருந்துள்ளார்கள். அவர்கள் சட்டவிரோதமாக கனடாவுக்கு கடத்தப்படுவது தெரியவந்ததையடுத்து அமெரிக்க கடற்படை அந்த படகை பறிமுதல் செய்து மாலத்தீவு கடற்படையிடம் ஒப்படைக்க, அவர்கள் இந்திய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்கள்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 16இலட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 16இலட்சத்து ஆயிரத்து 860பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 2,323பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 69பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 67ஆயிரத்து 575பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 289பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ்Read More →

Reading Time: 1 minuteகனடா அதன் ஜி-20 கூட்டணி நாடுகளுடன் இணைந்து ஆப்கானிஸ்தானின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் நேரடியாகச் சென்றடைவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்தது. அத்துடன், நேரடியாக மக்களுக்கு உதவிகள் சென்று சோ்வதற்கு ஒத்துழைக்குமாறு புதிய தலிபான் ஆட்சியாளர்களுக்கு கனடா உள்ளிட்ட நாகள் அழுத்தத்தை பிரயோகித்தன. நேற்று இடம்பெற்ற ஜி-20 நாடுகளின் மெய்நிகர் உச்சி மாநாட்டின்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் சக ஜி 20 தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 1,011பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 10பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 60ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 213பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 43ஆயிரத்து 090பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 776பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் உள்நாட்டு விமான மற்றும் ரயில் பயணிகளுக்கு கட்டாய தடுப்பூசி பாஸ் நடைமுறை ஒக்டோபர் – 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் ஆகியோர் அறிவித்துள்ளனர். இதன்படி முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே உள்நாட்டு விமான, ரயில் பயணங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அத்துடன், அக்டோபர் 30 முதல் 24 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட பயண நேரங்களைக்Read More →

Reading Time: < 1 minuteசிரிய அகதிகள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களான 26 கனேடியர்களை மீட்டு நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடக் கோரி கனேடிய நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கனேடியர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர இதுவே உகந்த நேரம் என அந்த மனுவில் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். கனேடியர்களை மீட்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குடியுரிமை சட்டம், கனேடிய உரிமைகள், சுதந்திரம், மற்றும்Read More →

Reading Time: < 1 minuteஇன்று உலகெங்கிலும் சர்வதேச பெண் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள இளம் பெண்களின் குரல்களை வலுப்படுத்தவும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் ஐக்கிய நாடுகள் சபையால் அக்டோபர் 11 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சர்வதேச பெண்கள் தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கனடாவால் ஒரு தீர்மானமாக முதலில் முன்மொழியப்பட்டது. இதனையடுத்து டிசம்பர் 19, 2011 அன்று, ஐக்கிய நாடுகள்Read More →

Reading Time: < 1 minuteப்ராம்ப்டனில் (Brampton, Ontario) ஆயுதம் காட்டி கொள்ளையில் ஈடுபட்ட மூவரை கைது செய்துள்ளதுடன் நான்காவது சந்தேக நபரைத் தேடி வருவதாக பீல் பொலிசார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தின் போது வாகனத்தில் சென்ற குழு ஒன்றை இன்னொரு வாகனத்தில் நால்வர் கும்பல் ஒன்று துரத்தியதுடன, அவர்கள் வாகனத்துடன் மோதியுள்ளது. அத்துடன் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளது. ஆனால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல்Read More →