Reading Time: < 1 minuteஒன்ராறியோ – பேர்லிங்டனில் உள்ள டான்ஸ்லி வூட்ஸ் (Tansley Woods) நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லத்தில் மற்றொரு கொரோனா கொத்தணி ஆபத்து உருவாகியுள்ளது. இங்குள்ள 16 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளனர். இவா்களில் சிலர் ஆபத்தான டெல்டா வைரஸ் திரிபு தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது. ஜூன் 28 அன்று பேர்லிங்டன் – டான்ஸ்லி வூட்ஸ் நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் மூன்று போது தொற்றுக்குள்ளானதாக தாகஹால்டன் பொது சுகாதாரத் துறை அறிவித்தது. இந்நிலையில்Read More →

Reading Time: < 1 minuteகனடா – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் லிட்டன் நகரம் காட்டுத் தீயால் அழிந்த நிலையில் அங்கு இருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் பலர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. லிட்டன் நகரில் தீப்பரவல் தொடர்வதால் அங்கு நுழைவது பாதுகாப்பானதாக இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் குறித்து மேலதிக தகவல்களை அறியவும் காணாமல் போனவர்களை தேடுவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. காட்டுத்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து ஏழுபேர் பாதிக்கப்பட்டதோடு 43பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 16ஆயிரத்து 317பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 338பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஆறாயிரத்து 335பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 466பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

wildfire

Reading Time: < 1 minuteகனடாவில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக 136 க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தீயைக் கட்டுப்படுத்த போராடும் பிரிட்டிஷ் கொலம்பியாவில், அவசர சேவைகளுக்கு உதவ இராணுவ விமானங்களை அனுப்பியுள்ளதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் முதல் குறித்த வெப்பநிலை காரணமாக 719 பேர் திடீர் மரணத்தை தழுவியிருந்த நிலையில் பலர் இருப்பிடங்களை விட்டு வெளியேறவேண்டிய நிலையும் ஏற்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை கனடாவின் முன்னெப்போதும் இல்லாத அளவில் 49.6Read More →

Reading Time: < 1 minuteதமிழீழ வரலாற்றை தமிழர் பக்க நியாயங்களை கூறும் படங்கள் வருவது மிகவும் அரிது. பல தடைகளை தாண்டி நேர்மையாகவும் முன்னுதாரணமாகவும் மேதகு திரைப்படத்தை வெளியிட்டமைக்கு எமது நன்றிகள். தமிழீழ வரலாற்றில் தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் ஆரம்பகால வாழ்க்கை பற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் ஒன்றை உங்கள் கடின உழைப்பினால் வெளிக்கொண்டு வந்ததை வாழ்த்துகிறோம். மிகவும் நேர்த்தியாக தலைவரின் இளமை கால காட்சிகளையும் தமிழர்கள் ஏன்Read More →

Reading Time: < 1 minuteகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று வெள்ளிக்கிழமை தனது இரண்டாவது கோவிட் 19 தடுப்பூசியைப் பெறுவார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 23 அன்று ஒட்டாவாவில் உள்ள தடுப்பூசி மையத்தில் முதலில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை பிரதமரும் அவரது மனைவி சோஃபி கிரேகோயரும் பெற்றுக்கொண்டனர். இன்று மொடர்னா தடுப்பூசியை பிரதமர் பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்தத் தடுப்பூசி மையத்தில் பிரதமர் இன்று தடுப்பூசி பெறுவார் என்பதை அவரது அலுவலகம்Read More →

Reading Time: 2 minutesகனடாவில் முன்னாள் பழங்குடியின பள்ளிகளில் அடையாளப்படுத்தப்படாத பல நூற்றுக்கணக்கான சிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆண்டுதோரும் ஜூலை -01 கோலாகலமாகக் கொண்டாடப்படும் கனடா தினம் இம்முறை களையிழந்தது. மனித எச்சங்கள் நூற்றுக்கணக்கில் கண்டறியப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் கவலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல மாகாணங்கள் கனடா தினக் கொண்டாட்டங்களை இரத்துச் செய்தன. அதற்குப் பதிலாக பழங்குடி மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ஒட்டாவா, ரொரண்டோ உள்ளிட்ட பல நகரங்களில்Read More →

Reading Time: < 1 minuteகனடா- அல்பர்ட்டாவின் பல பகுதிகள் இந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். வறட்சி காரணமாக, பல இடங்களில், விரைவாக வளர வேண்டிய பயிர்கள் பழுப்பு நிறமாக மாறத் தொடங்குகின்றன. தற்போது பல விவசாயிகள் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்கரி பகுதி ஜனவரி 1ஆம் திகதி முதல் அதன் சாதாரண மழையின் மூன்றில் இரண்டு பங்கைப் பெற்றுள்ளது. அதாவது, இதுவரை 117.7 மிமீ மழை வீழ்ச்சிRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மட்டும் கடந்த ஐந்து நாட்களில் சுமார் 486 திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளன. இது வழக்கத்தை விட சடுதியான மரணங்களில் 195 வீத அதிகரிப்பாக பதிவாகியுள்ளது. கனடாவில் பல மாகாணங்களில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்ப அலை பதிவாகி வரும் நிலையில் இந்தத் திடீர் மரணங்கள் அதிகரித்த வெப்பத்தால் ஏற்பட்டவையாக இருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடுதியான உயிரிழந்தவர்களில் பலர் வயது முதிர்ந்தவர்களாவர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 548பேர் பாதிக்கப்பட்டதோடு 22பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 15ஆயிரத்து 284பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 295பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழாயிரத்து 087பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 466பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள மற்றொரு முன்னாள் பழங்குடிச் சிறுவர் குடியிருப்புப் பள்ளி வளாகத்தில் முன்னர் அடையாளப்படுத்தப்படாத மேலுமொரு புதைகுழியில் இருந்து 182 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த எச்சங்கள் குடியிருப்பு பள்ளியின் முன்னாள் மாணவர்களுடையதா? என விரைவில் உறுதிப்படுத்தப்படும் என மாகாண பழங்குடியின தலைவர்கள் அறிவித்துள்ளனர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் கம்லூப்ஸ் நகருக்கு அருகிலுள்ள முன்னாள் குடியிருப்புப் பள்ளி ஒன்றின் புதைகுழியில் இருந்து 215 பழங்குடி சிறுவர்களின்Read More →